பயம் இல்லாமல் கருத்துக்களை வெளியிட ஃபேஸ்புக்கில் புதிய ஆப்ஸ் ! - EThanthis

Recent Posts


பயம் இல்லாமல் கருத்துக்களை வெளியிட ஃபேஸ்புக்கில் புதிய ஆப்ஸ் !

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
பயனர்கள் தங்களது உண்மையான பெயரைப் பயன்படுத் தாமலோ, மாற்றுப் பெயரிலோ பதிவுகளை 
பகிர்ந்து கொள்ளும் வகையில் புதிய  ஆப்ஸ்(Apps) ஒன்றை ஃபேஸ்புக் அறிமுகப்படு த்தவுள்ளது.

இந்தச்  ஆப்ஸ், ஃபேஸ்புக் உடன் இணைக்கப் படாமல், தனி செயலியாக இயங்கும் எனத் தெரிகிறது.  

ஒரு கருத்தை வெளியிடுவதால், தங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுமோ என்று தயக்கம் காட்டும் பயனர்கள்,

தைரியமாக தங்களது பார்வையை பதிவு செய்யவே இந்த முயற்சி என்று நிபுணர்கள் கூறுகின்றனர். 

இதன்மூலம், தாங்கள் சொல்லப்படும் கருத்துகள் மற்றவர் களைச் சென்றடையுமே தவிர, 

தங்களது உண்மையான அடையாளம் வெளிவராது என்பது கவனிக்கத் தக்க அம்சமாக இருக்கும். 

மேலும், ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட தலைப்புகளில் விவாதிக்க, சந்தேகங் களைக் கேட்டுத் தெரிந்து கொள்ள, சம்பந்தப்பட்ட பயனர்களுடன் உரையாட, 

தனி இணைய குழுமங்களை உருவாக்கும் வகையில் இந்தச்  ஆப்ஸ் செயல்படும் என்று கூறப்படுகிறது.

இது குறித்து ‘தி நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிக்கையில் வெளிவந்த செய்தியில், “தங்களது நிஜப் பெயரை பயன்படுத்த தயங்கும் 

பயனர்கள் புனைப் பெயர்களைக் கொண்டு விருப்பமான தலைப்புகளில் பதிவுடும் வகையில் இந்தச்  ஆப்ஸ் இயங்கும். 

இந்தச்  ஆப்ஸ், பயனிரின் ஃபேஸ்புக் பக்கத்தோடு இணைக்கப் படுமா இல்லையா 

என்பது குறித்து இதுவரை தெரிவிக்கப் படவில்லை” என விவரிக்கப் பட்டுள்ளது.

ஏற்கெனவே, ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க், தனித்து செயல்படும் புதிய  ஆப்ஸ்களை அறிமுகப் படுத்துவதில் 
இனி தங்கள் நிறுவனத்தின் கவனம் இருக்கும் என்று கூறியிருந்தார் என்பது நினைவு கூரத்தக்கது.

சில நாட்களுக்கு முன் ஃபேஸ்புக் நிறுவனம், புகைப் படங்கள் மற்றும் வீடியோ பதிவுகளைப் பகிர்ந்து கொள்ள ‘ஸ்லிங்ஷாட்’ என்ற ஆப்ஸ்யை அறிமுகப் படுத்தியது.

‘ஃபேஸ்புக் மெசன்ஜர்’  ஆப்ஸ்ம் இதுவரை 500 மில்லியனுக்கும் அதிகமான முறைகள் தரவிறக்கம் செய்ய ப்பட்டுள்ளது. 

இதோடு ‘இன்ஸ்டாகிராம்’ சம்பந்தபட்ட ஒரு தனி செயலியும் அறிமுகப் படுத்தப் பட்டது குறிப்பிட த்தக்கது.
பயம் இல்லாமல் கருத்துக்களை வெளியிட ஃபேஸ்புக்கில் புதிய ஆப்ஸ் ! பயம் இல்லாமல் கருத்துக்களை வெளியிட ஃபேஸ்புக்கில் புதிய ஆப்ஸ் ! Reviewed by Fakrudeen Ali Ahamed on September 05, 2018 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 EThanthis All rights reserved
close