எல்லாவற்றையும் சரி ஆக்கும் இணையதளம்?
புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..
லைக் பண்ணுங்க... "
வாழ்க்கை பிரச்சனை களை எல்லாம் தீர்த்து விடும் மந்திர சாவி எங்கே
இருக்கிறது என்று தெரிய வில்லை.
ஆனால் , எல்லா பிரச்சனை களும் தீர்ந்து விடும்
என்ற உணர்வை தரக்கூடிய இணையதளம் இருக்கிறது.
மேக்
-எவ்ரிதிங் ஓகே எனும் அந்த தளம் எல்லாம் சரியாகும் என்ற நம்பிக்கையை
தருகிறது.
பிரச்சனைகள் வாட்டும் போதோ அல்லது மோசமான மன நிலையில் இருக்கும்
போதோ
நமக்கு தேவைப்படுவ தெல்லாம், ஆறுதல் வார்த்தைகளும்,
எல்லாம் சரியாகி விடும் என்ற நம்பிக்கையும் தான்.
இவை இருந்தால் எந்த
பிரச்ச்னையையும் எதிர் கொண்டு வெற்றி பெறலாம்.
மேக்
-எவ்ரிதிங் ஓகே இணையதளம் இதை தான் செய்கிறது . இந்த தளத்தில் அப்படி என்ன
இருக்கிறது? ஒரு பட்டன் இருக்கிறது.
மாய பட்டன் என்று
வைத்துக் கொள்ளுங்களேன். அந்த பட்டன் மீது எல்லாம் சரி செய்யப்பட்டு விடும்
(மேக் -எவ்ரிதிங் ஓகே ) என எழுதப் பட்டிருக்கும்.
கம்ப்யூட்டர்
விசைபலகையின் ஒரு விசை போல இருக்கும் அந்த பட்டனை அழுத்தினால்,
எல்லாம்
சரி செய்யப் பட்டுக் கொண்டிருக் கிறது என்ற வாசகம வரும்.அதன் பிறகு எல்லாம்
சரி செய்யப்பட்டு விட்டதாக குறிப் பிடப்படும்.
அப்படியும் எதுவும் சரியாக வில்லை என்றால், உங்கள் புரிதல் மற்றும் அணுகு முறையை மாற்றிக் கொள்ளவும் எனும் ஆலோசனை வழங்க படுகிறது.
எல்லா வ்ற்றையும் சரி செய்து கொள்வது நம்மிடம் தானே இருக்கிறது. எளிமையான இணையதளம். சுவாரஸ்ய மானது. சிந்திக்கவும் வைக்க கூடியது.