வைரல் வீடியோக்கள் கண்டுபிடிப்பது எப்படி?| Viral videos to find ! - EThanthis

Recent Posts


வைரல் வீடியோக்கள் கண்டுபிடிப்பது எப்படி?| Viral videos to find !

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
இணையத்தில் வைரலாகப் பரவும் வீடியோக் களுக்குப் பஞ்சமே யில்லை. புதிதாக வைரலாகப் பரவுக் கொண்டிருக்கும் வீடியோக்களை அடையாளம் காட்டுவதற்கு என்றே 'பஸ்ஃபீடில்' தொட‌ங்கி நம்மூரின் 'ஸ்கூப்வூப்' வரை பல இணைய தளங்கள் இருக்கின்றன.
வைரல் வீடியோ
ஆனால் என்ன சிக்கல் என்றால் எந்த வீடியோ வைரலாகப் பரவும் என்பதை அடையாளம் காண முடியாது என்பது தான். அதாவது ஒரு வீடியோ வைரலாகப் பரவும் முன்னரே அதைக் கணிப்பது என்பது மிகவும் கடினமானது.
ஆனால் இப்போது வைரல் வீடியோக்களை ஆரம்பத் திலேயே கண்டறியக் கூடிய வசதியை வீடியோ பகிர்வு சேவை தளமான யூடியூப்பே அறிமுகம் செய்திருக்கிறது.
செய்தித் தளங்களில் பிரபலமாக‌ இருக்கும் அதிகம் வாசிக்கப்படும் செய்திகளை அடையாளம் காட்டும் டிரெண்டிங் பகுதி போல யூடியூப்பில் மேலெழும் வீடியோக்கள் டிரெண்டிங் பகுதியில் பட்டியலிடப் படுகின்றன.

டிரெண்டிங் டேப் (https://www.youtube.com/) மூலம் அடுத்த வைரல் வீடியோவை கண்டுபிடித்து விடலாம் என்று நம்பிக்கையோடு சொல்கிறது
யூடியூப். இணைய வாசகர்க‌ள் ஆமோதிக் கின்றனரா, வைரல் வீடியோக்கள் இதற்குக் கட்டுப் படுகிறதா என பொறுத்திருந்து பார்ப்போம்.
வைரல் வீடியோக்கள் கண்டுபிடிப்பது எப்படி?| Viral videos to find ! வைரல் வீடியோக்கள் கண்டுபிடிப்பது எப்படி?| Viral videos to find ! Reviewed by Fakrudeen Ali Ahamed on January 21, 2019 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 EThanthis All rights reserved
close