தொடுதிரையினை சுத்தம் செய்வது எப்படி?
புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..
லைக் பண்ணுங்க... "
இன்று யார் கையிலும் ஸ்மார்ட் கருவிகள் இல்லை என்றே கூற முடியாது. எல்லோர் வீட்டிலும் குறைந்த பட்சம்
இரண்டு முதல் நான்கு, ஐந்து ஸ்மார்ட் கருவி களாவது இருக்க தான் செய்கின்றது.
பெரும்பாலும் இன்றைய ஸ்மார்ட் கருவிகளில் தொடு திரை எனப்படும் டச் ஸ்கிரீன் வழங்கப் படுகின்றது.
இங்கு அனைத்து வித கருவிகளிலும் தொடு திரையை வீட்டிலேயே எப்படி சுத்தம் செய்வது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
மைக்ரோ ஃபைபர்
முற்றிலும் கண்ணாடியின் மூலம் வடிவமைக்கப் பட்டுள்ளதால் தொடு திரையை
மைக்ரோ ஃபைபர் எனப்படும் மெல்லிய மென்மை யான துணியை கொண்டு சுத்தம் செய்வது நல்லது.
ஸ்விட்ச் ஆஃப்
தொடு திரையை சுத்தம் செய்யும் முன் கருவியை ஸ்விட்ச் ஆஃப் செய்வது நல்லது.
துடைத்தல்
கருவியை ஸ்விட்ச் ஆஃப் செய்த பின் மைக்ரோஃபைபர் துணியை கொண்டு சிறிய வட்டங்களில்
தொடு திரையில் துடைக்க வேண்டும். இவ்வாறு செய்யும் போது அழுக்கு முழுமை யாக அகற்றப் படும்.
பஞ்சு
அவசியம் இருந்தால் இதை முயற்சிக்கலாம். சுத்தமான பஞ்சு துணியின் சிறிய பாகத்தை நீரில் நனைத்து தொடு திரையில் முன்பை போலவே சிறிய வட்டங்களில் துடைக்கலாம்.
இவ்வாறு செய்யும் போது குறைந்த அளவு நீரை மட்டும் பயன்படுத்த வேண்டும் என்பதோடு, அதிக கவனமாக இருப்பதும் அவசியம் ஆகும்.
சுத்தம்
தொடு திரையை சுத்தம் செய்த பின் மைக்ரோ ஃபைபர் துணியை சுடு நீரில் போட்டு கழுவலாம்.
ஆனால் சுத்தம் செய்யும் போது கவனமாக இருக்க வேண்டும். அதிகமாக மைக்ரோஃபைபர் துணியை கசக்குதல் மற்றும் அழுத்தம் கொடுக்க கூடாது.
சுத்தம் செய்த பின் துணியை பிழியவும் கூடாது. ஈரமான மைக்ரோ ஃபைபர் துணியை காய வைக்க வேண்டும்.