பெண்களுக்காக உருவாக்கிய ‘i-Safe’ அப்ளிக்கேஷன் !
புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..
லைக் பண்ணுங்க... "
14 வயதான சென்னை சிறுவன் ஆபத்தில் இருக்கும் பெண்களுக்கு உதவும் வகையில் ‘i-Safe’ என்று
அழைக்கப் படும் ஒரு மொபைல் அப்ளிக்கேஷனை உருவாக்கி யுள்ளார்.
அப்ளிக்கேஷனில் எஸ்ஒஎஸ் மோட் செயல் படுத்தும் போது பல முறை நண் பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் உட்பட மொபைலில்
ஏற்கனவே பதிவு செய்திருக்கும் அனைத்து எண்களு க்கும் இடத்தின் விவரங்களை கொடுத்து எஸ்எம்எஸ் விழிப்பூட்ட ல்களை அனுப்புகிறது.
உள்ளூர் சமூகத்தில் ஆபத்தில் இருக்கும் நபர் போலீசுக்காக காத்திருக் காமல் அருகில் இருக்கும் மக்களுக்கு தானாகவே எச்சரிக்கை செய்யும்,
ஒரு புதிய செயல்பாட்டை சேர்க்கும் பணிகளை அவர் இப்போது செய்து வருகின்றார்.
இளம் வயதான எஸ் அர்ஜுன், 8ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஆவர். கடந்த ஆண்டு மாசசூசெட்ஸ்
தொழில் நுட்ப கல்வி நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த அப்ளிக்கேஷன் போட்டியில்
இவர் உருவாக்கிய Ez ஸ்கூல் பஸ் லொக்கேட்டர் என்ற அப்ளிக்கேஷன் முதல் இடத்தில் வெற்றி பெற்றது.
ஆண்ட்ராய்டு போன்களில் இந்த அப்ளிக்கே ஷனை பயன்படுத்தி பெற்றோர்கள்
தங்கள் குழந்தைகளின் பள்ளி பேருந்தின் இடத்தை கண் காணிக்கவும் மற்றும்
வாகனம் இலக்கை அடைவதற்கு எவ்வளவு நேரம் ஆகும் என்பதை பற்றி கணக்கிட உதவுகிறது.
அதேபோல், அடிப்படை போன்களிலும் இந்த அப்ளிகே ஷனை எஸ்எம்எஸ் மூலமாகவும் பயன் படுத்த முடியும்.
முன்னதாக, எம்ஐடியில் ஏற்பாடு செய்திருந்த அப்ளிகேஷன் இன்வென்டர் பக் ஃப்பைன்டிங் போட்டியில் அர்ஜுன் வெற்றி பெற்றுள்ளார்.
அவருடைய பெரிய கனவு ‘Lateralogics என்று அழைக்கப் படும் சொந்த நிறுவ னத்தை உருவாக்க வேண்டும்,
இதில் கூகிள் மற்றும் மைக்ரோ சாப்ட் போன்ற ஏதாவது செய்ய வேண்டும்’ என்று, அர்ஜுன் தெரிவித் துள்ளார்.
புரோகிராமிங் லேங்குவேஜ்- ஐ கற்றுக் கொள்ள ஒவ்வொரு நாளும் ஆன் லைனில்
மூன்று முதல் நான்கு மணி நேரம் செலவி டுகிறார் என்று அர்ஜுன் தந்தை, சந்தோஷ் குமார் கூறியுள்ளனர்.
மேலும், அவருடைய பள்ளியில் மிகவும் பிரபலமாக உள்ளார் என்றும், அவரது ஆர்வம் மற்றும்
பொழுது போக்குகள் ரோபாட்டிக்ஸ், செஸ் மற்றும் பேட்மின்டன் உள்ளிட்டவை என்றும் அர்ஜுன் பெற்றோர்கள் தெரிவித் துள்ளனர்.
அர்ஜுன் சேவை தொடர்ந்து எட்டாத எல்லை எல்லாம் எட்டி உலகம முழுவதும் புகழ் பரப்பி புதுப்புது படைப்பு களை படைக்க யாழ்மீடியா இணையம் வாழ்த்துகிறது.