3 -ஜி தரும் பயன்கள் ! - EThanthis

Recent Posts


3 -ஜி தரும் பயன்கள் !

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
பல்வேறு காரணங் களால் இழுத்தடிக் கப்பட்டு, இறுதியில் நவம்பர் முதல் நமக்கு 3ஜி சேவை 
பல நிறுவனங் களால் வழங்கப்பட்டு வருகிறது. இன்னும் பல பெரிய நிறுவன ங்கள் அடுத்தடுத்து வழங்க உள்ளன.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வெகு காலமாகவே, தகவல் தொழில் நுட்பத்தில் 

இந்த 3ஜி வகை சேவை யினை மக்கள் பயன்படுத்தி வந்தனர்.  

நாம் தாமதமாக இதனைப் பெற்றாலும், அதிக மக்கள் இதனைப் பயன் படுத்தத் தொடங்கி விடுவார்கள் என்ற எதிர் பார்ப்பு இங்கு உள்ளது.  

தகவல் பரிமாற்ற த்தில், டேட்டா வேகமாக அனுப்பப்பட்டு பெறப் படுவதே அதன் அடிப்படை யான ஒரு செயல் பாடாகும். 

3ஜி இதனைத் தருவதுடன், மிகத் தெளிவான ஒலி பரிமாற்ற த்தையும் தருகிறது. 
மேலும் ஒரே நேரத்தில் டேட்டா மற்றும் வாய்ஸ் பரிமாற்ற த்தை 3ஜி மூலம் மேற்கொள்ள முடியும். 

இந்தியாவில் அண்மைக் காலத்தில் பேஸ்புக்  மற்றும் ட்விட்டர் போன்ற சமுதாய 

இணைய தள சேவைத் தளங்க ளால், டேட்டா பரிமாறப் படுவது அதிகரித் துள்ளது. 

அதே போல ப்ளிக்கர் மற்றும் யு–ட்யூப் போன்ற தளங்களால், வீடியோ, இமேஜ் தகவல் களும் பரிமாறப் பட்டு வருகின்றன. 

இவற்றுக்கு இன்னொரு காரணம், டாட்டா டொகோமோ வில் தொடங்கி  பல தொலை தொடர்பு நிறுவனங்கள், 

மிகக் குறைவான கட்டண த்தில் டேட்டா பரிமாறிக் கொள்வதற்கு அளித்து வரும் திட்டங் களாகும்.

3ஜி சேவையில் பலப் பல  புதிய தொழில் நுட்ப மாற்றங் களையும் பயன் பாடுகளையும் காண இருக்கிறோம். 

இன்னும் சிலவற்றை இங்கு காணலாம். 

1. லைவ் டிவி – கூடவே வரும் செய்திகள்: 

3ஜி மூலம் மொபைல் போனில், ஒரு கிரிக்கெட் மேட்ச் விளை யாடப்படு வதை லைவ்வாக, எங்கு சென்றாலும் பார்த்துக் கொண்டே செல்லலாம்.  

அதே போல, டிவி ஒன்றை நாடித்தான், செய்தி களைப் பெற வேண்டும் என்பதில்லை. 

எந்த நேரத்திலும் செய்திகள் ஒளிபரப்பப் படுவதனை, மொபைல் மூலம் பெறலாம். 

2. இமெயில் மற்றும் பைல் பெறுதல்: 

3ஜி மூலம் நமக்கு வந்துள்ள இமெயில் செய்தி களை மொபைல் போன் வழியாக, எந்த நேரத்திலும் பெற முடியும். 

அதே போல அனுப்பவும் முடியும். நமக்குத் தேவையான ஆவணங்கள் மற்றும் பைல் களையும் இதே போலப் பெற முடியும். 
நாம் தயாரித்து வைத்துள்ள ஆவணங் களில், எந்த நேரத்திலும்  எடிட் செய்து மாற்றங் களை ஏற்படுத்த முடியும். 

 3. மொபைல் ஒரு முனையமாக: 

மொபைல் போனை இனி ஒரு ஆன்லைன்  டெர்மினல் போலப் பயன்படுத்த 3ஜி வழி தருகிறது. 

திடீரென நமக்குக் கிடைத்து வரும் இன்டர்நெட் இணைப்பு செயல் படாமல் போகும் போது, 
மொபைல் போனை நம் லேப்டாப் அல்லது கம்ப்யூட்ட ருடன் இணைத்து, இணைய மோடம் போலப் பயன் படுத்தலாம். 

இதனால் எந்த நேரத்திலும் சூழ் நிலையிலும் நமக்கு இன்டர்நெட் இணைப்பு கிடைக்கும். 

4. வீடியோ ஸ்ட்ரீமிங்: 

நாம் நண்பர்களுடனும், உறவினர் களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பும் வீடியோ பைல் களை, எளிதாக மற்றவர் களுக்கு அனுப்ப, காண முடியும். 

வேகமான பரிமாற் றத்தை 3ஜி மூலம் பெற முடியும்.  இவற்றைப் பதிந்து கொள்வ தற்கும் 3ஜி உதவிடும். 

5. இணைய வழி அழைப்புகள் – வி.ஓ.ஐ.பி. (Voice Over Internet Protocol (VOIP):

மிகப் பெரிய அளவில் பேண்ட்வித் எனப்படும் தகவல் பரிமாற்றத் திற்கான அலை வரிசையை, 3ஜி தருகிறது.  

ஏற்கனவே நாம் கம்ப்யூட்டரில் பயன்படுத்தி வரும் ஸ்கைப் போன்ற புரோ கிராம்கள் மூலம், 

குறைந்த கட்டணத்தில் நம்மால் நம் நண்பர் களுடன், அவர்கள் எங்கிருந் தாலும் 

பேச முடியும். வீடியோ வழி உரை யாடலையும் மேற்கொள்ள முடியும். 

6. அதிக வேகத்தில் கூடுதல் தகவல்: 

பல வேளைகளில் நாம் பைல் களை இணைய த்தில் இருந்து டவுண்லோட் செய்து, பின்னர் படிக்கிறோம். 

அதிகமாக ட்விட்டர் போன்ற தளங்களைப் பயன் படுத்து பவர்கள், அதில் உள்ள 

லிங்க்ஸ் தரும் இணைப்பு களை இதே போல் தான் பயன்படுத்தி வருகின்றனர்.

ஜி.பி.ஆர்.எஸ். வழங்கும் வேகம் மிக மிகக் குறைவாக உள்ளதால்  இவ்வாறு செயல் படுகிறோம்.  3 ஜி மூலம் இந்தக் குறை நிவர்த்தி ஆகும். 
வேகமாக டேட்டா கிடைப்ப தால், லிங்க் இணைக்கும் அந்த வேளை யிலேயே பைல்களைக் காண முடியும். 

7. துல்லிய ஒலி அனுபவம்: 

சிக்னல் கிடைக்கல, வாய்ஸ் விட்டு விட்டு வருது, பேசறது ஜாம் ஆகுது – போன்ற உரை யாடல்களை நாம் 3 ஜியில் சந்திக்க மாட்டோம். 

மிகத் தெளி வாகவும், துல்லிய மாகவும் ஒருவர் பேசுவதை  இதன் மூலம் நாம் பெற முடியும்.     
உங்கள் குழந்தை யின் மழலையை, நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும், பக்கத்தில் இருந்து பேசுவது போலக் கேட்டு ரசிக்கலாம். மொத்தத்தில், 

இது வரை தொழில் நுட்ப நீண்டநாள் கனவாக இருந்த 3ஜி சேவை, இப்போது கையில் வந்து விட்டது.  

சிறிய வணிகர்கள் இதன் சேவை யினை முழுமையாகப் பயன் படுத்தித் தங்கள் வர்த்தகத் தினை மேம்படு த்தலாம். 

இன்னும் இன்டர்நெட் நுழையாத கிராமங்களில் உள்ள மக்கள், 3ஜி மூலம் அதனைப் பெறலாம். 

வலை மனைகளை இணைய த்தில் உருவாக்கி செயல்பட்டு வருபவர்கள், 
இடை இடையே இணைப்பு அறுந்து போகும் இன்டர்நெட்டை விட்டு, 3ஜி சேவை மூலம் தங்கள் செயல்பாட்டினை மேற்கொள் ளலாம். 

பல துறைகளில் வேகமாக வளர்ந்து வரும் இந்தியா விற்கு, 3ஜி ஒரு வரப்பிரசாத மாகக் கிடைத்துள்ளது. 

அனைவரும் இதனைப் பயன்படுத்தி நம்மையும் நாட்டை யும் வளப்படுத் துவோம்.
3 -ஜி தரும் பயன்கள் ! 3 -ஜி தரும் பயன்கள் ! Reviewed by Fakrudeen Ali Ahamed on December 21, 2018 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 EThanthis All rights reserved
close