ஹெட்செட் பயன்களும் டிப்ஸ்களும் ! - EThanthis

Recent Posts


ஹெட்செட் பயன்களும் டிப்ஸ்களும் !

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
போனுடன் இணைக் கப்படும் ஹெட்செட்கள் தொலை தொடர்பு செயல் பாட்டில் பல பயன் களைத் தருகின்றன. 

மொபைல் போனுடன் இவை இணைக்கப் படுகையில் இவை தரும் வசதிகள் பல நோக்கில் உள்ளன. 

(பெர்சனல் கம்ப்யூட்டர் மற்றும் லேண்ட்லைன் போன்க ளுடனும் ஹெட்செட் களை இணைந்து செயல் படுத்தலாம்.)

1. எந்த வகையான போனுடனும் ஹெட்செட் இணைக்கப் படுகையில், நம் கைகள் 

சுதந்திரமாகச் செயல்படும் நிலையைப் பெறுகின்றன. கார் ஓட்டலாம்; கம்ப்யூட்டர் இயக்க லாம்; 

போனில் வரும் செய்திகளைக் குறித்து வைக்கலாம். இவ்வாறு பணி யாற்றும் இடத்தில் 

நம் திறனை முழுமை யாகப் பயன்படுத்த நமக்கு ஹெட்செட்கள் உதவுகின்றன.
2. சரியான முறையில் அமர்ந்து செயல்பட நமக்கு ஹெட்செட்கள் உதவுகின்றன. 

மொபைல் போனை தோளுக்கும் சாய்ந்த தலைக்கும் இடையே வைத்துக் கொண்டு, 

பைசா நகரத்து சாய்ந்த கோபுரம் மாதிரி நடக்க வேண்டிய தில்லை. 

மேலும் இவற்றைத் தொங்க விடுவதனால் டேபிளில் இடம் பிடிக்காது. 

தற்போதைய வயர்லெஸ் ஹெட்செட் களில் இந்த பிரச்னைக்கு இடமே இல்லை.

3. பெர்சனல் கம்ப்யூட்ட ருடன் ஹெட்செட் இணைக்கப் படுகையில், இன்டர்நெட்டில் 
இன்னொரு முனையில் இருப்பவருடன் பேசிட மிக உதவியாய் உள்ளது. 

போனில் விளையா டுகையிலும் இது ஒரு நல்ல அனுபவ த்தினைத் தருகிறது.

இதனை வாங்குகை யில் சில அம்சங் களைப் பார்த்து வாங்க வேண்டும்.

1. முதலாவ தாக கிடைக்கும் ஒலியின் தன்மை தொலை தொடர்பு கொள்வது தான் 

நம் முக்கிய நோக்கமாக இருப்பதால் ஹெட்செட் தரும் வாய்ஸ் துல்லிதமாக இருக்க வேண்டும். 

இதற்காக சற்று கூடுதலாகப் பணம் செலவழித் தாலும் பரவா யில்லை.
2. மைக்ரோ போனின் தன்மை: பேசுவது எப்படி கேட்கப்பட வேண்டுமோ அதே போல நாம் பேசுவ தனையும் 

துல்லித மாகக் கிரஹித்து அனுப்பும் மைக்ரோ போன் ஹெட்செட்டில் இருக்க வேண்டும். 

மேலும் நம் வாய் அருகே தான் இருக்க வேண்டும் என்று இல்லாமல் ஹெட்செட்டை 
மாட்டிய நிலையில் நம் வாய்ஸ் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.

3. காதில் அல்லது தலையில் சரியாக பொருந்தி இருக்க வேண்டும். 
சில ஹெட்செட்கள் ஒரு குறிப்பிட்ட நிலையில் தான் தலையில் மாட்ட முடியும். 

 அப்படி இல்லாமல் யாருடைய தலையிலும் பொருந்தும்படி இருக்க வேண்டும்.

4. இத்துறை யில் நல்ல அனுபவம் பெற்ற நிறுவனங் களின் ஹெட்செட் களை வாங்கிப் பயன் படுத்துவது நல்லது. 

மலிவான விலையில் கிடைக்கும் ஹெட்செட்கள் நாளடைவில் அதனை இணைக்கு வயர்களில் பிரச்னை ஏற்பட்டு இயங்காமல் போய் விடலாம்.
ஹெட்செட் பயன்களும் டிப்ஸ்களும் ! ஹெட்செட் பயன்களும் டிப்ஸ்களும் ! Reviewed by Fakrudeen Ali Ahamed on December 21, 2018 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 EThanthis All rights reserved
close