மொபைல் போன் கவனம் தேவை !
புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..
லைக் பண்ணுங்க... "
அதிகமாக எலக்ட்ரிக்கல் அல்லது டிஜிட்டல் சாதனங்கள் இயங்கும் இடங்களில் மொபைல் போன் பயன் படுத்துவ தனைத் தவிர்க்கவும்.
உங்களுக்கு சிக்னல் கிடைப்பது சிக்கலாவ துடன் அந்த சாதனங்கள் இயக்கமும் தடை படலாம்.
மருத்துவ மனைகளில் இத்தகைய சாதனங்கள் உள்ள இடங்களில் பயன் படுத்துவதை அறவே தவிர்க்கவும்.
அந்த சாதனங்கள் சரியாகச் செயல் படுவதில் சிக்கல்கள் ஏற்படலாம்.
கம்ப்யூட்டர் மானிட்டர் அருகே இருக்கும் மொபைல் போனுக்கு அழைப்பு வருகையில்
என்ன மாதிரி அலை வீச்சு உள்ளது என்று நீங்கள் பார்த்திரு ப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
அது போல மருத்துவ மனை சாதனங் களில் ஏற்பட்டால் அது சரியான முடிவுகளை மருத்துவ ருக்குத் தராதே.
* போனில் சிக்னல்கள் எந்த அளவில் பெறப் படுகின்றன என்பதைக் காட்டும் இன்டிகேட்டர் அனைத்து போன் களிலும் இருக்கும்.
இது குறைவாக இருக்கும்போது ரேடியேஷன் என்னும் கதிர்வீச்சு அதிகமாக இருக்கும்.
சரியாக இருக்கும் போது மிதமாக இருக்கும்.
மேலும் குறைவாக இருக்கையில் மின் சக்தியும் அதிகம் செலவழி க்கப்படும்.
எனவே சிக்னல் ரிசப்ஷன் குறைவாக இருக்கும் இடத்தில் இருந்து பேசுவ தனைத் தடுக்கவும்.
* திரையில் உள்ள லிக்விட் கிறிஸ்டல் டிஸ்பிளே (LCD) மீது அழுத்தத்தைப் பிரயோகித் தால் திரை கெட்டுவிட வாய்ப்பு உள்ளது.
எனவே பாக்கெட்டில் போனை வைத்திடுகையில் ஏதேனும் கூர்மையான அல்லது
பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய பொருள் மொபைல் போனுடன் உரசிக் கொண்டி ருக்கிறதா என்பதைக் கவனித்துச் செயல் படவும்.
போம் கவர்கள் அல்லது பிளாஸ்டிக் கவர்கள் இந்த வகையில் பாதுகாப்பு தரலாம்.
* ஏதேனும் ஒரு பைல், போல்டர் என ஒன்றை செலக்ட் செய்து பின் Alt + Enter அழுத்தி னால்
அது குறித்த தகவல்கள் தரப்படும் Properties விண்டோ கிடைக்கும்.
அந்த பைல், போல்டர் அல்லது டிரைவ் குறித்து அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம்.