ஸ்மார்ட் போன்களில் சென்சார்கள் ! - EThanthis

Recent Posts


ஸ்மார்ட் போன்களில் சென்சார்கள் !

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
திறன் செறிந்த ஸ்மார்ட் போன்களில், தற்போது அதிகம் புழக்கத்தில் இருப்பது, சென்சார் தொழில் நுட்பமாகும். 

இதனை உணர்வலை தொழில் நுட்பம் என அழைக் கின்றனர். 

வரும் ஆண்டு களில், இந்த தொழில் நுட்பத்தில் மிகப் பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்படப் போகின்றன. 

ஒரு சிக்னல் அல்லது தூண்டு தலைப் பெற்று, அதற்கேற்ற வகையில் இயங்குவதே சென்சார் தொழில் நுட்பமாகும்.
இது ரேடியோ அலை யாகவோ, வெப்ப மாகவோ, ஒளி யாகவோ இருக்கலாம். 

தற்போது புழக்க த்தில் இருக்கும் பல வகையான சென்சார் பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

1. தேவையான ஒளி உணர்வலை (ambient light sensor):

டேப்ளட் பி.சி., ஸ்மார்ட் போன்கள் மற்றும் லேப்டாப் கம்ப்யூட்டர் களில் இது பயன் படுத்தப் படுகிறது. 

இவற்றில் இயங்க்கும் பேட்டரியின் வாழ் நாளை நீட்டிக்க இது பயன்படுகிறது.

டிஸ்பிளே யினைச் சரி செய்து, நாம் நன்றாகப் பார்க்க வசதி செய்கிறது. அதிக ஒளியுடன் திரைக் காட்சி இருந்தால், 

அதனைக் குறைத்து, காட்சி யினைத் தெளிவாகக் காட்டு வதுடன், அதன் மூலம் பேட்டரியின் வாழ் நாளை நீட்டிக்கச் செய்கிறது.

2. அருகமைவு உணர்வலை (proximity sensor):

இந்த தொழில்நுட்பம், உங்கள் மொபைல் போனின் திரை உங்கள் உடம்புக்கு எவ்வளவு அருகாமையில் உள்ளது என்பதைக் கணிக்கிறது. 

காதருகே கொண்டு சென்ற வுடன், திரைக் காட்சி அணைக்கப் படுகிறது.

அத்துடன், தேவையற்ற திரைத் தொடுதல் களை உணரா வண்ணம் செயல் படுகிறது. 

உங்கள் காதுகளில் இருந்து போனை எடுத்த பின்னரே, நிறுத்தி வைக்க ப்பட்ட அனைத்தும் செயல்படும்.

இதனால், காதுகளால் போனில் ஏற்படும் தொடு உணர்வு மூலம் தேவையற்ற போன் செயல் பாடுகள் நிறுத்தப் படுகின்றன. 

ஐபோனைப் பொறுத்த வரை, இந்த சென்சார், திரைச் செயல்பாட்டினை அறவே நிறுத்தி, 

தொடு உணர்ச்சி யினைக் கண்டறியும் சர்க்யூட்டின் செயல் பாட்டினை யும் முடக்குகிறது.

3. புவி இட நிறுத்தல் (GPSGlobal Positioning System):

தொடக்க த்தில், இந்த தொழில் நுட்பம், இராணுவ நடவடிக்கை களுக்கு மட்டுமே பயன் படுத்தப் பட்டது.

1980 -க்கும் பின்னர், பொது மக்களு க்கும் தரப்பட்டது. நீங்கள் இருக்கும் இடத்தை, 

இந்த தொழில் நுட்பத்தின் பின்னணி யில் இயங்கும் வரைபடம் கண்டறிந்து, ஸ்மார்ட் போனின் திரையில் காட்டுகிறது.

இதனைக் கொண்டு, நீங்கள் செல்ல வேண்டிய இடத்திற் கான வழியைக் கண்டறிய லாம். 

இதற்கான சாட்ட லைட்கள் விண்ணில் புவியை ஒரு நாளில் இரு முறை சுற்றி வருகின்றன. 
இதனைத் தொடர்ந்து “Assisted GPS”என்ற தொழில் நுட்பமும் தற்போது புழக்கத்தில் உள்ளது.

நேரடியாக சாட்ட லைட்டைத் தொடர்பு கொள்ள முடியாத போது, இந்த தொழில் நுட்பம், 

இடையே உள்ள சர்வர்களின் உதவி யுடன் செயல் படுகிறது.

ஐபோன் 3ஜி, 3ஜிஎஸ், 4 ஆகியவை இந்த புதிய தொழில் நுட்பத்தைப் பயன் படுத்து கின்றன. 

ஐபோன் 4 எஸ், கூடுதல் வசதியுடன் கூடிய தொழில் நுட்பத் தினைப் பயன் படுத்துகிறது.

4. அக்ஸிலரோமீட்டர் (accelerometer): 

ஸ்மார்ட் போனில் இயங்கும் இந்த தொழில் நுட்பம், போன் எந்த பக்கம் திருப்பப் படுகிறது 

என்பதனை உணர்ந்து, அதற்கேற்றார் போல, திரைக் காட்சியைக் காட்டு கிறது.

எடுத்துக் காட்டாக, பக்க வாட்டில் போன் திருப்பப் படும் போது, காட்சி போர்ட்ரெய்ட் 

நிலையி லிருந்து லேண்ட்ஸ்கேப் நிலைக்கு மாற்றப் படுகிறது.

இதே தொழில் நுட்பம், செறிந்த நிலையில், கைரோஸ்கோபிக் சென்சார் என்னும் தொழில் நுட்பமாகச் செயல்பட்டு, 

போனின் மாற்று நிலைகளைத் துல்லிய மாகக் கணக்கிட்டு தன் செயல் பாட்டினை மேற்கொள்கிறது.

5. காம்பஸ் (compass):

அடிப்படையில் காம்பஸ் என்பது, புவியின் முனை களைக் காந்தத்தின் உதவியுடன் அறிந்து திசை காட்டும் கருவியாகும். 

ஸ்மார்ட் போனில் உள்ள இந்த தொழில் நுட்பம், காந்த அலைகளைப் போனின் 

செயல் பாட்டைப் பாதிக்காத வகையில் மாற்றி, திசை களைக் காட்டுகிறது.

6. கைரோஸ்கோப் (gyroscope):

எந்தக் கோண த்தில் அசைவுகள் ஏற்படு கின்றன என்பதனைக் கண்காணித்து, 

அவற்றின் அளவு களைக் கொண்டு செயல் பாடுகளை மேற்கொள்ளும் தொழில் நுட்பம் இது.
ஸ்மார்ட் போன், டேப்ளட் பி.சி.க்கள், ஆகிய வற்றில் இது பயன் படுத்தப் படுகிறது. 

சாதனம் ஒன்று எந்த நிலையில் உள்ளது என்பதனை இது கண்டறி கிறது. 

வயர்லெஸ் மவுஸ் செயல் பாட்டில் இது பயன் படுத்தப் படுகிறது.

அக்ஸிலரோ மீட்டருடன் இணைந்து இது செயல் படுகையில், ஓர் அசைவின் ஆறு திசைகள் இதன் மூலம் கண்டறியப் படுகின்றன. 

இடது, வலது, மேல், கீழ், முன்பாக மற்றும் பின் புறமாக என ஆறு நிலைகள் அறியப்பட்டு செயல் பாடுகள் மேற்கொள்ளப் படுகின்றன.

நம் கை அசைவு களுக்கேற்ற வகையில் செயல் பாடுகள் மேற்கொள்ள இந்த தொழில் நுட்பம் பயன் படுகிறது.

இத் தொழில் நுட்பத்தினை முதன் முதலில் பயன்படுத்திய ஸ்மார்ட் போன் ஐபோன் 4 ஆகும். 

தொடக்க த்தில் MEM எனப்படும் (micro electro mechanical systems) கைராஸ்கோப் பயன் படுத்தப் பட்டது.

தற்போது இதன் இடத்தில், மிகச் சிறிய அளவில் வடிவமைக் கப்படும் ஆப்டிகல் கைராஸ்கோப் பயன் படுத்தப் படுகிறது. 

இதனை ஒரு குண்டூசியின் தலையளவு இடத்தில் வைத்து இயக்கலாம். 

மருத்துவ துறையில், உடல் உள்ளாக வைக்கப்படும் சாதனங் களில் இது அதிகம் பயன் படுத்தப் படுகிறது.

6. பின்புற ஒளியுடன் கூடிய புதிய (BSI or BI) சென்சார்:

இது ஒரு டிஜிட்டல் இமேஜ் சென்சார். ஒரு இமேஜ் அமைந்துள்ள கூறுகளைக் கண்டறிந்து, 

அதற்கேற்ற வகையில், ஒளியினைக் குறைத்து அமைக்கும் தொழில் நுட்பம்.

மிகக் குறைந்த ஒளியில் இயங்கும் பாதுகாப்பு பணிகளுக் கான கேமராவில் இது முதலில் பயன் படுத்தப் பட்டது. 

தற்போது ஸ்மார்ட் போன்களி லும் பயன் படுத்தப் படுகிறது.
மேலே சொல்லப்பட்ட அனைத்து தொழில் நுட்பங்களும், குறைந்த மின்சக்தி செலவில், 

திறன் கூடுத லாகக் கொண்ட செயல் பாடுகளைத் தரும் இலக்குடன் செயல் படுவதனைக் காணலாம்.

இவை இன்னும் தொடர்ந்து ஆய்வில் மேற்கொள்ளப் பட்டு, கூடுதல் பயன் தரும் வகையில் உருவாக் கப்படும் என எதிர் பார்க்கலாம்.
ஸ்மார்ட் போன்களில் சென்சார்கள் ! ஸ்மார்ட் போன்களில் சென்சார்கள் ! Reviewed by Fakrudeen Ali Ahamed on December 21, 2018 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 EThanthis All rights reserved
close