கணினி அதிகம் வெப்ப மடைகிறதா? - EThanthis

Recent Posts


கணினி அதிகம் வெப்ப மடைகிறதா?

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
கணினியின் உள்ளேயிருக்கும் இலத்திரனியல் பாகங்கள் வெப்பத்தை உருவாக்கக் கூடியன.
அவை இயங்கும் போது அதிகமான வெப்பத்தை வெளி விடுகின்றன. அதிக வெப்பம் காரணமாக கணினியின் உள்ளுறுப்புகள் பாதிப்படையக் கூடிய வாய்ப் புள்ளது. 

கணினி அளவுக் கதிகமாக வெப்ப மடைகிறது என்பதை எவ்வாறு அறிந்து கொள்வது? 

கணினி இயங்கிக் கொண்டிருக்கும் போது திடீரென இயக்கம் நின்று விடுமானால் 

கணினி அதிக வெப்ப மடைந்துள்ளது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள் கணினியில் நீலத்திரை தோன்றுதல்,

மற்றும் அடிக்கடி நினைவகத்தில் ஏற்படும் பிழைச் செய்திகள் என்பன ஏனைய அறிகுறி களாகும்.
கணினி அதிக வெப்பமடைவதற்குப் பல காரணங்களைக் குறிப்பிடலாம். 

சீபியுவின் மேல் பொருத்தப் பட்டிருக்கும் ஹீட் சிங்க் (Heat Sink), கூலிங் பேன் மற்றும் வெப்பத்தை வெளி விடக்கூடிய 

கணினியின் வேறு பாகங்களில் தூசு படிதலே கணினி வெப்படைவதற் கான பொதுவான காரணியாகும்.

கணினி வெப்பமடையும் போது அதனைக் குளிர வைக்கக் கூடிய வகையில் முறையாகக் கணினி வடிவமைக்கப் படாததும் ஒரு காரணியாகும். 

எனினும் தற்காலக் கணினிகளில் இந்தக் குறைபாடு இல்லை எனலாம். 

ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட செயற்பாடுகளில் கணினி ஈடுபடும் போது சிபீயூவின் வேலைப் பழு அதிகரிக்கிறது. 

இதன் காரணமாகவும் சிபீயூ அதிக வெப்பத்தை வெளி விடுகிறது. 

கணினி அதிக வெப்ப மடைவதால் கணினி மதர்போட் சேத மடைவதோடு சீபீயூ மற்றும் வீடியோ காட் கூட பாதிக்கப்படலாம். 

அது தவிர அதிக வெப்ப மடைவதால் கணினி இயங்கும் வேகமும் மந்தமடையும். 

எனவே கணினியைக் குளிர்ச்சியாக வைத்திருப்பதன் மூலம் கணினியை வேகமாக இயங்கும்படி செய்யலாம். சரி கணினியைக் குளிர்ச்சியாக வைக்க என்ன செய்யலாம்?

கணினியைக் குளிர வைப்பதற்கான வழிகளில் முக்கிய மானதாக விசிரிகளில் படியும் தூசுகளை அவ்வப்போது அகற்றிக் கொள்ளுங்கள். 

மின் வழங்கி (Power Supply Unit) மற்றும் சீபியுவில் பொருத்தப் பட்டிருக்கும் விசிரிகளி லிருந்து 

அதிக இரைச்சல் வருமாயின் அவை முறையாக இயங்க வில்லை என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். 

எனவே அதற்குப் பதிலாக புதிய கூலிங் பேன் ஒன்றை வாங்கிப் பொருத்திக் கொள்ளுங்கள். 

சீபீயூவின் மேல் உள்ள ஹீட் சிங்கில் தடவப்படும் (Thermal Grease) ஒரு வகைப் பதார்த்தம் உலர்ந்து விடுவதாலும் சீபீயூ வெப்படைவது அதிகரிக்கும். 

னவே அதனை அவதானித்து, அதன் மேல் புதிதாக அந்தப் பதார்த்தத்தைத் தடவிக் கொள்ளுங்கள். 

கணினி சிஸ்டம் யூனிட்டை திறந்த நிலையில் இருந்தால் அதனை மூடிக் கொள்ளுங்கள். 

திறந்திருக்கும் போது இலகுவாக வெப்பம் வெளியேறும் என நீங்கள் நினைக்கலாம். 

ஆனால் (Case) திறந்திருக்கும் போது கணினியின் உட்புற பாகங்களில் அதிக தூசு படிவதற்குக் காரணமாய் அமைகிறது. 

அதிக வெப்பமடையக் கூடிய மற்றும் தூசு படியக்கூடிய இடங்களி லிருந்து கணினியை நகர்த்தி விடுங்கள். 

வெப்பம் வெளியேறத் தக்கவாறு கணினியைக் காற்றோட்டமுள்ள ஓர் இடத்தில் வையுங்கள்.

கணினியின் உள்ளே குளிர் காற்றை செலுத்தக் கூடியவாறும், உள்ளேயிருந்து வெப்பக் காற்றை 

வெளியேற்றக் கூடியதாகவும் கேசில் முடியுமானால் இரண்டு விசிரிகளைப் பொருத்திக்கொள்ளுங்கள். 

தற்போது பயன் பாட்டிலுள்ள அனேகமான மதர்போர்டுகளில் வெப்ப நிலையை 

கண்டறியக் கூடிய வெப்ப உணரிகள் (Sensors) சீபீயூவின் கீழ், ஹாட் டிஸ்கின் அருகில் 

மற்றும் வெப்பத்தை வெளிவிடக் கூடிய வேறு உள்ளுறுப்பு களின் அருகே பொருத்தப் பட்டுள்ளன.

கணினி மதர்போர்ட்டிலுள்ள பயோஸ் எனும் சிப், சீபீயூவினால் தாங்கக் கூடிய உச்ச அளவு வெப்பத்தை உணர்ந்து, 

அதற்கு மேல் வெப்பம் அதிகரிக்கும் போது கணினியின் இயக்கத்தை நிறுத்தி விடுகிறது. 

இதன் மூலம் கணினியின் முக்கிய பாகங்கள் சேதமடைவது தவிர்க்கப் படுகிறது.
கணினி வெப்ப நிலையை அறிவதற் கான மென்பொருள் கருவிகள் விண்டோஸ் இயங்கு தளத்துடன் கிடைப்ப தில்லை. 

எனினும் ஏராளமான மூன்றாம் தரப்பு நிறுவனங்கள் இதற்கான மென்பொருள் கருவிகளை உருவாக்கி யுள்ளன. 

சில மென்பொருள் கருவிகள் வெப்பநிலையை கண்டறிவது மட்டும ல்லாமல் அதனைக் குறைப்ப தற்கான வசதியையும் தருகின்றன. 

அவற்றுள் Speed Fan என்பது ஒரு சிறந்த கருவி எனலாம். அது பல்வேறு சாதனங்கள் பயன்படுத்தும் மின் சக்தியின் அளவு களையும் அளவிடுவதோடு, 

சீபீயூவைக் குளிர்விக்கும் விசிரியின் (Cooling Fan) வேகத்தையும் கட்டுப் படுத்துகிறது.
கணினி அதிகம் வெப்ப மடைகிறதா? கணினி அதிகம் வெப்ப மடைகிறதா? Reviewed by Fakrudeen Ali Ahamed on September 05, 2018 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 EThanthis All rights reserved
close