வாட்ஸ் அப்பிற்குள் யூடியூப் -அது என்னங்க புதுசா இருக்கு ! - EThanthis

Recent Posts


வாட்ஸ் அப்பிற்குள் யூடியூப் -அது என்னங்க புதுசா இருக்கு !

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
இனி வாட்ஸ் அப்பில் யூடியூப் பார்க்கலாம் ஐபோனில் வாட்ஸ்அப் ஆப்பை பயன்படுத்தும் வாடிக்கை யாளர்களுக்கு யூடியூப் ஒருங்கிணைப்பு (Integration) வசதி வழங்கப் பட்டுள்ளது. 
வாட்ஸ்அப் செயலியில் யூடியூப் ஒருங்கிணைப்பு வழங்கும் பணிகளை அந்நிறுவனம் நீண்ட காலமாக திட்டமிட்டு வந்தது. முதல்கட்டமாக ஐபோன்களில் மட்டும் இந்த வசதியை வழங்கும் பணிகள் துவங்கி விட்டன. 

ஐபோன் வாடிக்கை யாளர்கள் இனி தங்களது வாட்ஸ்அப் சாட்டிங் திரையில் இருந்த படியே யூடியூப் வீடியோக் களை பார்த்து ரசிக்க முடியும். யூடியூப் செல்ல தேவை யில்லை. 
இதுவரை, வாட்ஸ்அப் செயலியில் பகிர்ந்து கொள்ளப்படும் யூடியூப் வீடியோக் களை யூடியூப் ஆப் அல்லது பிரவுசர்களில் சென்று தான் பார்க்க முடியும். 

அப்போது வாட்ஸ்அப் செயலியில் இருந்து வெளியேற வேண்டிய சூழல் இருந்தது. யூடியூப் ஒருங் கிணைப்பு வசதி வாட்ஸ்அப் 2.18.11 பதிப்பில் வழங்கப் படுகிறது. 

இனி வாடிக்கை யாளர்கள் வாட்ஸ்அப்பில் பகிர்ந்து கொள்ளப்படும் யூடியூப் வீடியோக்களின் லின்ங்கு களை கிளிக் செய்து வாட்ஸ்அப் செயலியை விட்டு வெளியேறாமல் வீடியோக் களை பார்த்து ரசிக்கலாம். 
பல்வேறு வசதிகள் வீடியோ திரை முழுக்க பாப்-அப் ஆவதோடு பிளே, பாஸ், குளோஸ் மற்றும் முழு திரை உள்ளிட்ட அம்சங்களுக்கு ஏற்ற பொத்தான் களை கொண் டிருக்கிறது. 

மேலும் வீடியோ அளவை மாற்றி யமைக்கும் வசதியும் வழங்கப் பட்டுள்ளது. ஓடிக் கொண்டே இருக்கும்
அளவை மாற்றி யமைத்தால், யூடியூப் வீடியோ, ஸ்மார்ட்போன் திரையின் மேல் அல்லது கீழ்பகுதி களில் மட்டும் தோன்றும். 

இந்த வசதியில் வாடிக்கை யாளர் சாட் ஸ்கிரீனை விட்டு வெளியேறி மற்றொரு சாட் ஸ்கிரீனுக்கு சென்றாலும் யூடியூப் வீடியோ தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும். 

ஆண்ட்ராய்டில் வருமா? ஒருவர் மற்றவர் களுக்கு வீடியோ பகிர்ந்து கொள்ளும் போது செயலியில் இருந்தபடியே வீடியோவை பார்க்க முடியாது. 

வாட்ஸ்அப் திரையில் யூடியூப் இன்டகிரேஷன் வசதி முதற் கட்டமாக ஐ.ஓ.எஸ். இயங்கு தளத்தில் மட்டும் வழங்கப் பட்டுள்ளது. இனி வரும் அப்டேட்களில் ஆண்ட்ராய்டு இயங்கு தளத்திலும் இந்த அம்சம் வழங்கப் படலாம் என கூறப் படுகிறது.
வாட்ஸ் அப்பிற்குள் யூடியூப் -அது என்னங்க புதுசா இருக்கு ! வாட்ஸ் அப்பிற்குள் யூடியூப் -அது என்னங்க புதுசா இருக்கு ! Reviewed by Fakrudeen Ali Ahamed on January 02, 2019 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 EThanthis All rights reserved
close