டச்பேடினால் வரும் தொல்லையை சரி செய்ய ! - EThanthis

Recent Posts


டச்பேடினால் வரும் தொல்லையை சரி செய்ய !

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
லேப்டாப் பயன்படுத்து பவர்களுக்கு ஒரு பெரிய தலை வலியாய் இருப்பது, அதில் இயங்கும் டச் பேட் தான். கீ போர்டில் விரல்களை நகர்த்து கையில் பெருவிரலோ 
அல்லது உள்ளங்கையோ, டச் பேடில் பட்டு விட்டால், கர்சர் இடம் மாறிச் சென்று, நாம் டைப் செய்வதனை வைக்கக் கூடாத இடத்தில் சேர்த்துக் கொண்டிரு க்கும். 

வேலையை நிறுத்தி, எந்த எழுத்தில் இருந்து இந்த வேதனை என்று பார்த்து, அதனை அழித்துப் பின் மீண்டும் பழைய இடத்திற்குக் கர்சரைக் கொண்டு வந்து இயங்க வேண்டும். 

இந்த பிரச்னை வராமல் இருக்க, ஒரு சிலர் உள்ளங் கைகளைச் சற்று தூக்கிப் பிடித்தவாறே கீ போர்டில் டைப் செய்வதனைப் பார்க்கலாம். இது மிகவும் மோசமான விளைவினைத் தரும். தொடர்ந்து வலி உண்டாகும். 
இந்த பிரச்னைக்குத் தீர்வாக சில புரோகிராம்கள் இணையத்தில் கிடைக்கின்றன. அவற்றில் சிறந்த ஒன்றாக டச் பிரீஸ் (Touch Freeze) உள்ளது. இது ஒரு எளிய, இலவச புரோகிராம். 

Windows NT/2000/XP/Vista/7 ஆகிய அனைத்து சிஸ்டங் களிலும் இயங்கும் வகையில் உருவாக்கப் பட்டுள்ளது. இதனை டவுண்லோட் செய்து, லேப்டாப் கம்ப்யூட்டரில் பதிந்து விட்டால் போதும். எந்த செட்டிங்ஸ் வேலை களையும் மேற்கொள்ள வேண்டிய தில்லை. 

விண்டோஸ் இயங்கத் தொடங்கி யவுடன் தானாக இயங்கி, நமக்கு டச்பேடினால் பிரச்னை வராமல் பார்த்துக் கொள்ளும். இயங்குவதற்கு 768 கேபி அளவே மெமரி எடுத்துக் கொள்கிறது. 

டெக்ஸ்ட்டை கீ போர்டில் டைப் செய்கையில், டச்பேட் இயக்கத்தினை முடக்கி வைக்கிறது. இந்த புரோகிராம் இல்லாமலும் டச் பேட் இயக்கத்தினை நிறுத்தலாம். 

ஆனால் ஒவ்வொரு முறையும் இதற்கென கண்ட்ரோல் பேனல் சென்று, மவுஸ் ப்ராப்பர்ட்டீஸ் ஐகானைக் கிளிக் செய்து டிவைஸ் செலக்ட் (Device Select) டேப் தேர்ந்தெடுத்து, “Disable Touch Pad when USB Pointing Device is present” என்பதில் டிக் அடை யாளத்தை மேற்கொள்ள வேண்டும். 

இது சற்று சுற்று வழி. மேலும் டச் பேட் வேண்டும் எனில் மீண்டும் சென்று மாற்ற வேண்டும். 
மாற்றாக எப்போதும் டச் பேட் வேண்டாம் எனில், உங்கள் லேப்டாப் கம்ப்யூட்டரில் டச் பேட் செட்டிங்ஸ் சென்று “Disable Device” என்பதனை இயக்கி வைக்கலாம். 

மீண்டும் வேண்டும் என்று விரும்பும் போது, ஒவ்வொரு முறையும் சென்று இயக்க வேண்டும். 
டெல், எச்.பி, சோனி வயோ ஆகிய நிறுவனங்கள் தரும் லேப்டாப் கம்ப்யூட்டரின் சில மாடல்களில் டச் பேடினை முடக்க சாப்ட்வேர் தொகுப்புகள் பதிந்தே தரப்படு கின்றன. 

டச் பேட் செட்டிங்ஸ் சென்று இவற்றைக் கண்டு இயக்கலாம். ஏசர் லேப்டாப்பின் சில மாடல்களில் என்ற கீகளை அழுத்தினால், டச் பேட் முடக்கப்படும். 

பின் மீண்டும் தேவை என்றால், மீண்டும் இந்த கீகளை அழுத்தி இயக்கத் தினைத் தொடக்கி வைக்கலாம். இந்த சுற்று வேலைகளை எல்லாம் டச் பேட் பிரீஸ் தவிர்க்கிறது. 

இந்த இலவச புரோகிராமினை டவுண்லோட் செய்திட. http://code.google.com/ என்ற முகவரியில் உள்ள இணைய தளம் செல்லவும்.
டச்பேடினால் வரும் தொல்லையை சரி செய்ய ! டச்பேடினால் வரும் தொல்லையை சரி செய்ய ! Reviewed by Fakrudeen Ali Ahamed on January 02, 2019 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 EThanthis All rights reserved
close