வாட்ஸ் அப்-ல் விரைவில் லைக் பட்டன் வசதி அறிமுகம்? - EThanthis

Recent Posts


வாட்ஸ் அப்-ல் விரைவில் லைக் பட்டன் வசதி அறிமுகம்?

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
வாட்ஸ் அப் - ல் லைக் பட்டன் வசதி வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி யுள்ளது. 
இன்றைய இளைய தலைமுறைகள் தங்களுக்குள் முக்கிய தகவல்கள், வீடியோக்கள், புகைப் படங்களை அனுப்ப அதிகம் பயன் படுத்துவது வாட்ஸ் அப்..

இதுவே இன்றைய இளைஞர்களின் தாரக மந்திரமாக கருதபடுகிறது. 

உலகம் முழுவதும் ஒரு மாதத்தில் 700 மில்லியன் மக்கள் வாட்ஸ் அப்பை தங்கள் ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தி வருகின்றனர்.

கடந்த ஜனவரி மாதம் முதல் வாட்ஸ் அப்  கணினியில் பயன்படுத்தக் கூடிய வசதியை வழங்கி உள்ளது. 

ஆனால், செல்போனில் உள்ள வசதிகள் அனைத்தும் கணினி பதிப்பில் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தது. 

தற்போது வாட்ஸ் அப் தனது கணினி பதிப்பை மேம்படுத்தி யுள்ளது.

அதன் படி, ஸ்டேட்டஸ் மாற்றலாம், ஃப்ரப்பைல் படத்தை மாற்றி யமைக்கலாம்.  அரட்டையை நீக்கலாம், 

ஆவணப் படுத்தலாம், குழுவை நிர்வகிக்க லாம். ஆனால் இந்த மேம் படுத்தல்கள் ஆண்டிராய்ட் பயனர்களுக்கு மட்டுமே அறிமுகப் படுத்தப் பட்டுள்ளது. 

விண்டோஸ் பயனர்கள் இந்த அம்சங்களை பயன்படுத்த முடியாது.

கூடுதல் தகவலாக, வாட்ஸ் அப்பில் பார்த்து படித்த செய்தியை படித்ததாக குறிக்கும் வகையில் வசதிகளை மேம்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது.

அதேப் போல், லைக் பட்டன் வசதியையும் வழங்க உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கின்றது.

இது தொடர்பாக, எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இன்னும் அறிவிக்க வில்லை. 

எனினும், அதற்கான சோதனைகள் நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 
வாட்ஸ் அப்-ல் விரைவில் லைக் பட்டன் வசதி அறிமுகம்?  வாட்ஸ் அப்-ல் விரைவில் லைக் பட்டன் வசதி அறிமுகம்? Reviewed by Fakrudeen Ali Ahamed on September 25, 2018 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 EThanthis All rights reserved
close