இணையத்தை கலக்கும் எக்ஸ்குலிசிவ் இணையதளம் !
புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..
லைக் பண்ணுங்க... "
இணைய தளத்தை பயன்படுத்திப் பார்க்க ஆயிரக்கணக் கானோர் வரிசையில் காத்திருப்பது பற்றி நீங்கள் கேள்விப் பட்டிருக்கிறீர்களா?
இணைய
உலகை இப்போது கலக்கி கொண்டிருக்கும் மோஸ்ட் எக்ஸ்குலிசிவ் வெப்சைட் எனும்
இணைய தளத்தின் உள்ளே நுழையும் அனுமதிக்காக தான் இப்படி ஆயிரக்கணக் கானோர்
ஆர்வத்துடன் காத்திருக் கின்றனர்.
நீங்களும் அந்த தளத்தை பயன்படுத்திப் பார்க்க விரும்பினால் அதில் அனுமதி சீட்டு வாங்கி இணைய வரிசையில் நின்றாக வேண்டும்.
ஆச்சர்யமாக
இருக்கலாம். அப்படி அந்த இணைய தளத்தில் என்ன பிரமாதமாக இருக்கிறது என்று
வியப்புடன் கேட்கலாம்.
ஆனால் அந்த இணையதளத்தில் ஒன்றுமே கிடையாது என்பது
தான் இன்னும் ஆச்சர்யமானது.
உண்மையில் அது ஒரு பயனில்லா இணையதளம் – ஆனால்
அது தான் இன்று உலகின் பிரத்யேக இணைய தளமாகி இருக்கிறது.
எப்படி என்று கேட்கிறீர்களா? எல்லாம் அந்த இணையதளம் அமைக்கப்பட்ட விதத்தில் இருக்கும் புத்திசாலித் தனத்தில் தான் இருக்கிறது!
பெயரிலேயே
பாதி வெற்றி என்பது போல அந்த இணைய தளத்தை உருவாக்கியவர்
இணைய உலகின்
மிகவும் பிரத்யேக தளமாக உருவாக்கும் எண்ணத்துடன் அதற்கு மோஸ்ட்
எக்ஸ்குலுசிவ் வெப்சைட் என பெயர் வைத்தார்.
அந்த தளம் பிரத்யேக தன்மை
கொண்டதாக இருக்கும் வகையிலும் அதை அமைத்திருந்தார்.
அதன்
பிரத்யேக தன்மை என்ன தெரியுமா? அந்த தளத்தை ஒரு நேரத்தில் ஒருவர் மட்டும்
தான் பயன்படுத்த முடியும்.
அந்த ஒருவரும் ஒரு நிமிடம் மட்டும் தான் தளத்தை
பயன்படுத முடியும். ஒருவர் பயன்படுத்தி முடிக்கும் வரை மற்றவர்கள்
வரிசையில் காத்திருக்க வேண்டும்.
இதற்காக முகப்பு
பக்கத்தில் இருந்து அனுமதி சீட்டு வாங்கிக் கொள்ள வேண்டும்.
குறிப்பிட்ட
எந்த நேரத்தில் இந்த தளத்தில் நுழைந்தாலும், இத்தனை ஆயிரம் பேர்
காத்திருக் கின்றனர்,
நீங்களும் வரிசையில் நிற்க அனுமதிச்சீட்டு வாங்கி
கொள்ளவும் என தெரிவிக்கப் படுகிறது.
இப்படி காத்திருக்க
வேண்டி யிருப்பதும், ஒரு நேரத்தில் ஒருவர் மட்டுமே தளத்தை பயன்படுத்தலாம்
எனும் பிரத்யேக தன்மையும் தான் இணைய வாசிகளை இந்த தளத்தை நோக்கி படையெடுக்க
வைத்துள்ளது.
இதுவரை
2,65000 பேருக்கு மேல் இந்த தளத்தை பயன்படுத்த அனுமதிச் சீட்டு
பெற்றுள்ளனர் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
அமெரிக்காவின் ஜஸ்டின் போலே
என்பவர் இந்த தளத்தை அமைத்திருக் கிறார்.
இணையதள
வடிவமைப் பாளராக இருக்கும் போலே, இணையம் திறந்தவெளி தன்மை கொண்ட்தாக
இருக்கும் நிலையில்
அதற்கு நேர் எதிரான தன்மையுடன் ஒரு இணைய தளத்தை
அமைத்தால் என்ன என்று யோசித்து இந்த பிரத்யேக தளத்தை உருவாக்கிய தாக
கூறியுள்ளார்.
மார்ச் மாதவாக்கில் இந்த தளத்தை உருவாக்கினார். ஆனால் அதன் பிரத்யேக தன்மையை மீறி அது உடனடியாக கவனத்தை ஈர்க்க வில்லை.
பின்னர்
ஜானி வெப்பர் எனும் வலைப் பதிவாளர் தனது பட்டியல் இணைய தளத்தில் ,
இணையத்தின் பயனில்லா இணைய தளங்கள் எனும் பட்டியலை வெளியிட்டு இதை அடையாளம்
காட்டியிருந்தார்.
அதன் பிறகு இந்த தளம் பிரபல இணைய சமூகமான
ரெட்டிட்டிலும் இடம் பெற மெல்ல இணைய வாசிகள் மத்தியில் பிரபலமானது.
அப்புறம் என்ன, இதன் விநோதமான விஷேசத் தன்மை பலரையும் பேச வைத்து இணையத்தை கலக்கி கொண்டிருக்கிறது.’
இணையதள முகவரி: http://mostexclusivewebsite.com/
எல்லாம்
சரி, இந்த இணையதளத்தை ஒரு நிமிடம் பயன்படுத்தும் போது என்ன தான் செய்ய
முடிகிறது என கேட்கலாம்?
அது சஸ்பென்ஸ்! நீங்களும் முயன்று பாருங்களேன்!.
ஆனால் ஒன்று ஆயிரக்கணக் கானோர் முற்றுகை யிடுவதால் தளம் முடங்கி நின்றாலும்
ஆச்சர்யப் படுவதற்கில்லை.