முகவரி சுருக்கச் சேவைகளின் வளர்ச்சி | Address tabloid development of services ! - EThanthis

Recent Posts


முகவரி சுருக்கச் சேவைகளின் வளர்ச்சி | Address tabloid development of services !

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
இணையப் பயன்பாடு மற்றும் இணையப் போக்குகளில் உங்களுக்கு உள்ளொளி யும் புரிதலும் தேவை என்றால் முகவரி சுருக்கச் சேவைகளின் வரலாற்றைக் கொஞ்சம் திரும்பிப் பார்க்க வேண்டும். இணைய முகவரி சுருக்கச் சேவைகளைப் பற்றி விரிவாகக் கூட விவரிக்க வேண்டாம்.
வளர்ச்சி
‘பிட்.லி' அல்லது ‘டைனி யூ.ஆர்.எல்' ஆகிய இணைய சேவைகளின் பெயரைக் குறிப்பிட்டாலே போது மானது. இந்த இரண்டும் தான் இணைய முகவரி சுருக்கச் சேவைகளின் முன்னோடி தளங்கள்!

இவை சமுக வலைப் பின்னல் யுகத்தின் பகிர்தல் தாகத்தைத் தணிக்கப் பிறந்தவை. நீளமாக இருக்கும் இணைய முகவரிகளை (யூ.ஆர்.எல் அல்லது உரலி) சின்னதாகச் சுருக்கித் தருவதுதான் இவற்றின் பணி. இந்தச் சுருக்கங் களை எளிதாகப் பகிர்ந்து கொள்ளலாம்.

இவற்றில் கிளிக் செய்தால் சுட்டிக் காட்டப்பட்ட தளங்களு க்குச் சென்று விடலாம். இணைய தளங்களை அல்லது இணையப் பக்கங்களைப் பகிர்ந்து கொள்ளும் போது அவற்றின் முகவரி சற்றே நீளமாக அமைந்து விடுகின்றன.

இந்த நீளத்தையோ அல்லது அவற்றின் சுமையையோ இமெயில் யுகத்தில் யாரும் உணர்ந்த தில்லை. ஆனால் சமூக வலை தளங்களில் அதிலும் குறிப்பாக 140 எழுத்து வரம்பு கொண்ட குறும்பதிவு சேவையான ட்விட்டர் வருகைக்குப் பிறகு இந்தக் குறை உணரப்பட்டது.

இணைப்பைச் சுட்டிக் காட்டும் போது முகவரியே இடத்தை அடைத்துக் கொண்டால் என்ன செய்வது? இந்தச் சிக்கலுக்குத் தீர்வாகத் தான் முகவரி சுருக்கச் சேவைகள் அறிமுகமாயின.

50-60 எழுத்துக்கள் கொண்ட நீளமான இணைய முகவரிகளை இந்த சேவைகளில் சமர்ப்பித் தாலும் அழகாக அவற்றைச் சின்னதாகச் சுருக்கித் தந்துவிடும். இது இவற்றின் ஆரம்ப கால வரலாற்றுச் சுருக்கம். 2002-ல் டைனி யூ.ஆர்.எல் அறிமுகமானது.

பின்னர் பிட்.லி வந்தது. தொடர்ந்து மழைக் கால காளான் போல நூற்றுக்கும் அதிகமான முகவரி சுருக்கச் சேவைகள் உதயமாயின. இவற்றில் பெரும் பாலானவற்றின் பெயர்கள் மட்டுமே மாறு பட்டிருந்தனவே தவிர அவற்றின் சேவையிலோ பயன் பாட்டிலோ எந்தப் புதுமையும் இருக்க வில்லை.

இந்தப் புற்றீசல் போட்டியை பிட்.லி, டைனியூ.ஆர்.எல் உள்ளிட்ட தளங்கள் சமாளித்து முன்னிலை பெற்றன. ஆனால் சற்றும் எதிர் பாராத வகையில் ட்விட்டரே சொந்தமாக முகவரி சுருக்கச் சேவையை ஒரு கட்டத்தில் அறிமுகம் செய்தது.

ட்விட்டரில் பகிர்ந்து கொள்ளப்படும் முகவரி களைத் தனியே சுருக்க வேண்டிய தேவை யில்லாமல் அவை தானாகவே சுருக்கப் பட்டன. இதே கால கட்டத்தில் முன்னணி தேடியந்திரமான கூகுளும் தன் பங்குக்கு ஒரு முகவரி சுருக்கச் சேவையை அறிமுகம் செய்தது: https://goo.gl/
  
இணைய த்தின் பகிர்தல் பிரச்சினைக் கான அழகான தீர்வை முன்வைத்து வளர்ச்சி வாய்ப்புகளை எதிர் நோக்கி யிருந்த முகவரி சுருக்கச் சேவை களுக்கு இதைவிடப் பெரிய சோதனை இருக்க முடியாதுதான்.

ஆனால் முகவரி சுருக்கச் சேவைகள் இதனால் சுருங்கிவிடவில்லை. அவை சின்னச் சின்னப் புதுமைகளால் தங்களைப் புணரமைத்துக் கொண்டி ருக்கின்றன. இப்போது இந்தச் சேவைகள் முகவரி சுருக்கத்தை மட்டும் அளிப்பதில்லை. 
சுருக்கச் சேவை
சுருக்கப்படும் முகவரிகளின் முன்னோட்ட த்தை அளிக்கின்றன. அதாவது கிளிக் செய்வதற்கு முன்னரே அந்த இணைப்பின் பின்னே உள்ள இணைய தளத்தின் தோற்றத்தைப் பார்க்கலாம். இந்த முன்னோட்ட வசதி மிகவும் முக்கியமானது.

முகவரி சுருக்க வசதியைப் பயன்படுத்திக் கொண்டு ஒரு சிலர் மோசமான அல்லது மால்வேர் பாதிப்பை உண்டாக்கக் கூடிய தளங்களு க்குக் கடத்திச் செல்லும் அபாயம் உண்டானதால், கிளிக் செய்ய இருக்கும் தளம் உண்மையில் இணைப்பில் சுட்டிக் காட்டப் பட்டது தானா என்பதை தெரிந்து கொள்ளலாம்.

நடுவே இணைப்பு களைப் பரிசோதித்து அவை மால்வேர் ஆபத்து இல்லாதவை தானா என்று உறுதிப்படுத்தும் சேவையைப் பிரதானமாக வழங்கும் இணைய தளங்களும் கூட அறிமுகமாயின.

அதோடு, இத்தகைய தவறான பயன்பாட்டைத் தவிர்ப்பதற்காக இந்தச் சேவைகள் முதலில் பயனாளிகளை நீங்கள் மனிதர்கள் தானா என்று நிரூபித்துக் காட்டவும் சொல்கின்றன. கூகுள் இதற்கு கேப்ட்சா சோதனை வைக்கிறது என்றால் பிட்.லி அழகான சின்ன விளையாட்டை முன் வைக்கிறது.

இணைய தளங்களைப் பகிர்ந்து கொண்டால் மட்டும் போதுமா? அவற்றை எத்தனை பேர் கிளிக் செய்து பார்த்தனர் என்று தெரிந்து கொள்ள வேண்டாமா? இப்போது முகவரி சுருக்கச் சேவைகள் இந்தப் புள்ளி விவரங்களை யும் சேர்த்தே வழங்குகின்றன.

பிட்.லி ஒரு படி மேலே சென்று பிராண்ட்கள் தங்களுக்கான முகவரி சுருக்கங்களை உருவாக்கிக் கொண்டு அவற்றின் வீச்சை அறிவதற்கான சேவையை யும் வழங்குகிறது. அதோடு இந்தச் சேவைகள் ஸ்மார்ட்போன் யுகத்திற்கு ஏற்ப செயலி வடிவமும் எடுத்துள்ளன.

காலத்திற்கு ஏற்ப தங்களை மேம்படுத்திக் கொண்டுள்ள முகவரி சுருக்கச் சேவைகளின் அடுத்த பரிணாமம் என்னவாக இருக்கும். இப்போதே ஒரு முன்னோட்டம் பார்க்க முடியுமா என்பது சுவாரஸ்யமான கேள்வி!
முகவரி சுருக்கச் சேவை
சில தளங்கள்... சில வசதிகள் 

http://tinyurl.com/ பிரவுசர் நீட்டிப் பாகவே பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பை அளிக்கிறது.

http://yourls.org/ சேவை பயனாளிகள் தங்களுக்கான முகவரி சுருக்கச் சேவையைச் சொந்த மாகவே உருவாக்கிக் கொள்ள வழி செய்கிறது. ஓபன் சோர்ஸ் அடிப்படையில் செயல்படும் சேவை இது.

முகவரி சுருக்கச் சேவைகளில் இப்போது எத்தனை தளங்கள் இருக்கின்றன என அறிய விரும்பினால் அந்தப் பட்டியலை http://bit.do/list-of-url-shorteners.php தளம் அளிக்கிறது.

http://longurl.org/ தளம் சுருக்கப்பட்ட முகவரிகளின் பின்னே உள்ள இணையதளம் பற்றிய முக்கிய தகவல்களைத் தெரிந்து கொள்ள வழி செய்கிறது.

http://is.gd/ தளம் இணைய முகவரிகள் தவறான நோக்கங்களுக்காக சுருக்கப்படுவதைத் தடுக்கும் வகையில் செயல்படுகிறது.
முகவரி சுருக்கச் சேவைகளின் வளர்ச்சி | Address tabloid development of services ! முகவரி சுருக்கச் சேவைகளின் வளர்ச்சி | Address tabloid development of services ! Reviewed by Fakrudeen Ali Ahamed on January 22, 2019 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 EThanthis All rights reserved
close