நீங்களும் இணைய வானொலியை ஆரம்பிக்கலாம் !
புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..
லைக் பண்ணுங்க... "
இணைய வானொலி என்பது வானலை யூடு ஒலிபரப் பாகும் வழமை யான வானொலி சேவை போன்றதே.இங்கு வானொலிப் பெட்டிக்குப் பதிலாக கணினி யூடாக ஒலிபரப் புக்குச் செவி மடுக்கிறோம்.
இணைய வானொலி ஒலிபரப் புகளைக் கேட்பத ற்குப் புதிதாக எந்த வன்பொ ருளோ மென்பொ ருளோ நிறுவ வேண்டிய தில்லை. இணைய உலாவி கொண்டு (Web Browser) உரிய் இணைய தளத்தை அணுகுவ தன் மூலம் இணைய வானொலி களைச் செவி மடுக்கலாம்.
இந்த ஒலிபரப்பு முறையை வெப் காஸ்டிங் (Web Casting) எனப்ப டுகிறது. இணைய த்தில் ஒலி வடிவில் உள்ள பைல்களைப்
பகிர்ந்து கொள்ள போட் காஸ்டிங் (Podcasting) எனும் ஒலிபரப்பு முறை பயன் பாட்டில் இருப்பதை நீங்கள் அறிந்தி ருக்கலாம்.
போட் காஸ்டிங் முறையில் ஒலிபரப்பைக் கேட்பதாயின் உரிய
பைலை முழுமையாக் எமது கணினிக்கு டவுன்லோட் செய்து கொள்ள வேண்டும்.
உதாரண மாக போட் காஸ்டிங் முறையில் ஒரு பாடலைக் கேட்க விரும்பி னால்
அந்தப் பாடலை முழுமை யாக எமது கணினிக்கு டவுன்லோட் செய்த பிறகே கேட்க முடியும்.
ஆனால் இணைய வானொலி என்பது போட் காஸ்டிங் போன்றதல்ல. இணைய வானொலி சேவையில் ஸ்ட்ரீமிங் (Streaming) எனும் தொழில் நுட்பம் பயன் படுத்தப் படுகிறது.
ஸ்ட்ரீமிங் தொழில் நுட்பத்தில் ஒலி வடிவி லுள்ள ஒரு பைலானது முழுமை யாக எமது கணினியை வந்தடையு முன்னரே வந்து சேரும் அளவிற் கேற்ப ஒரு ஒலிப் பகுதியை கேட்கக் கூடியதா யிருக்கும்.
முழுமை யாக அந்த பைல் டவுன்லோட் ஆகும் வரை காத்திருக்க வேண்டிய அவசிய மில்லை.
இணைய வனொலி (ஓடியோ) மட்டுமன்றி இணைய தொலைக் காட்சியும் (வீடியோ) இவ்வாறே இந்த ஸ்ட்ரீமிங் தொழில் நுட்பத்தில் ஒளிபரப்ப ப்படுகிறது.
இணைய வனொலி சேவைகள் நேரடியாக ஒலிபரப் பட்டாலும் ஒலிபரப்பும் சேர்வரின் (Radio Server) செயல் திறனுக்கேற்ப அதனைக் கேட்பவரை குறைந்தது 10 வினாடிகள் தாமதித்தே சென்ற டையும்.
கணினி வலைய மைப்பில் டேட்டா வானது சிறு பகுதிகளாகப் பிரிக்கப் பட்டே பயணம் செய்கிறது.
தனது இலக்கை அடைந்த பின்னர் வந்து சேர்ந்த பகுதிக்ளை பிரவுசர் ஒன்று சேர்க்கும் செயற்பாடு காரண மாகவே இந்த நேர இடைவெளி ஏற்படுகிறது.
அனேகமான இணைய வானொலிகள் தரை வழி ஒலிபரப்பை நடாத்தி வரும் வானொலி நிலையங் களினாலேயே நடாத்தப் படுகின்றன. இதன் மூலம் அவை தமது வழமையான எல்லை களைத் தாண்டி சர்வதேச அளவில் வானொலி ரசிகர் களைப் பெற்றுக் கொள் கின்றன.
நமது நாட்டிலும் தென்றல், சக்தி மற்றும் பல வானொலி நிலையங்கள் இணையத் தினூடும் தமது சேவையை வழங்கு கின்றன.
அதே வேளை இணைய த்தினூடு மட்டும் ஒலிபரப் பாகும்
நம்நாட்டு இணைய வனொலி சேவைகளு க்கு உதாரணமாக akknifm, strfm என்பவற்றைக் குறிப்பி டலாம். இணைய வானொலி களைச் செவி மடுக்க அதிவேக ப்ரோட்பேண்ட் இணைய இணைப்பு பரிந் துரைக்கப் படுகிறது.
அத்தோடு கணினியில் ஸ்ட்ரீமிங் ஒலிபரப்பைச் செவி மடுப்பதற் கான மென்பொரு ளும் அவசியம். இதற்கு விண்டோஸ் மீடிய ப்ளேயர் மென்பொரு ளே போதுமானது. எனவே அதற்குப் புதிதாக வேறு மென்பொரு ள்களை நிறுவ வேண்டிய தில்லை. இணைய வானொலி ஒலிபரப்பில் Encoder, Server, Playerஎன மூன்று வெவ்வேறு விதமான மென்பொ ருள்கள் பயன் படுத்தப்ப டுகின்றன.
என்கோடிங் மென் பொருள் ஒலியை (டேட்டாவை) சுருக்கி சேர்வருக்கு Streaming வடிவில் அனுப்பு கிறது.
அதனைப் பெற்றுக் கொள்ளும் சேர்வர் மென்பொருள் அதனை பயனர் கணினியி லுள்ள ப்லேயர் மென்பொரு ளுக்கு (Relay) மறுபடியும் அனுப்பி வைக்கிறது.
இதற்குப் பயன் படுத்தப்படும் ரேடியோ சேர்வரானது இணைப்பை ஏற்படுத்தும் ஒவ்வொரு வருக்கும் ஒலிபரப்பை வழங்கக் கூடிய செயல் திறனுடை யதாக கூடிய பேண்ட் வித்தைக் (Bandwidth) கொண்டிருக்க வேண்டும்.
ஒரு வானொலி நிலையம் ஆரம்பிப்பதென்பது இலகுவான விடயமல்ல. அரசிடம் முறையான அனும தியைப் பெறுவ தோடு அதற்கு அதிக மூல தனமும் அவசியம்.
ஆனால் உங்கள் வானொலிக் கனவை நனவாக் குகிறது இணைய வானொலி. வெறும் இரண்டோ
ஆல்லது மூவாயிரம் ரூபாவை செலவிட்டு அல்லது எந்த செலவுமே இல்லாமல்
இலவசம கவே ஒரு இணைய வானொலி சேவையை இரண்டொரு நிமிடங்க ளில் அரம்பித்து விடலாம்.
இலவசமாக
ஒரு இணைய வானொலி சேவையை ஆரம்பிப்பது எப்படி?
அதற்கு உங்களிடம் ப்ரோட்பேண்ட் இணைய இணைப்புடன் கூடிய ஒரு கணினியி ருந்தாலே போதுமானது.
முதலில் www.winamp.com இணைய தளத்திலி ருந்து WinAmp 5.5 பதிப்பை டவுன்லோட் செய்து நிறுவிக் கொள்ளுங்கள். (பைல் அளவு 10 MB) அடுத்து www.shoutcast.com இணைய தளத் திலிருந்து வின்- ஏம்ப்பி ற்கான shoutcast plugin ஐ டவுன் லோட் செய்து நிறுவிக் கொள்ளு ங்கள் (பைல் அளவு 2 MB)
அடுத்து www.listen2myradio.com இணைய தளத்தி ற்குச் சென்று இலவச ரேடியோ சேர்வரில் ஒரு கணக் கொன்றை ஆரம்பித்து விடுங்கள். இலவச சேர்வரின் மூலம் குறைந்தது 10 பயனர் களுக்கு (users) மட்டுமே சேவை வழங்க முடியும் என்பதை நினைவில் கொள்ளு ங்கள்.
இன்னும் அதிக பயனர்கள் அவசியம் எனின் அதற்குக் கட்டணம் செலுத்த வேண்டி யிருக்கும். கணக் கொன்றை அரம்பித் ததும் உங்களுக்கு நிலையான (Static IP Address) ஒரு ஐபி முகவரி
வழங்கப் படுவ தோடு இணைய வானொலி யைக் கேட்ப தற்குப் பயனர்கள் செல்ல வேண்டிய இணைய தள முகவரியும் (URL) உங்களுக்கு வழங்கப் படும்.
அடுத்து வின்-ஏம்ப் ப்ரோக்ரமைத் திறந்து கொள்ளு ங்கள். வின்-ஏம்ப் விண்டோ வில் ரைட் க்ளிக் செய்து வரும் மெனுவில் Options > Preferences >DSP Effect ஊடாக Nullsoft Shoutcast தெரிவு செய்யத் தோன்றும் சவுட் காஸ்ட் சோர்ஸ்
விண்டோ வில் Input டேபில் க்ளிக் செய்து இன்புட் டீவைஸாக வின்-ஏம்ப் தெரிவு செய்யுங்கள். மைக் மூலம் இன்புட் செய்வ தாயின் SoundCard Input தெரிவு செய்து அதன் கீழ் Microphone தெரிவு செய்யு ங்கள்.
அடுத்து Encoder டேபில் க்ளிக் செய்து Encoder Type ஆக MP3 என்கோடர் தெரிவு. செய்யு ங்கள்.
என்கோடர் செட்டிங் ஸில் விரும்பிய அளவினைத் தெரிவு செய்யலாம்.
இணைய வேகம் மந்தமா யின் 24 Kbps தெரிவு செய்வது பொருத்த மானது.
பின்னர் Output டேபில் க்ளிக் செய்து Address எனுமிடத் தில்
உங்களு க்கு வழங்கப் பட்டுள்ள ஐபி முகவரி யையும் உரிய போட் (Port) இலக்கம்
மற்றும் உங்கள் பயனர் கணக்குக் குரிய பாஸ்வர் டையும் வழங்கி Connect பட்டனில் க்ளிக் செய்து விட்டு வின் - ஏம்பில் பாடலையும் ஒலிக்கச் செய்யுங்கள். இப்போது உங்கள் இணைய வானொலி செயற்பட ஆரம்பித் திருக்கும்.
அடுத்து பிரவுசரைத் திறந்து உங்கள் வனொலிக் கென வழங்கப் பட்டிருக்கும் இணைய முகவரி யூடாக அதனைப் பரீட்சித்துப் பாருங்கள்.
இணைப்பு
சரிவர இயங்கா விட்டால் listen2myradio.com தளத்தின் உங்கள் கணக்குக் குரிய கண்ட்ரோல் பேண்லுக்குள் நுளைந்து ரேடியோவை ஓன் செய்து விட்டு மறுபடி முயற்சி யுங்கள்.
இறுதியாக
ஒரு வார்த்தை. தொழில் ரீதியாக ஒரு வானொலி சேவையை ஆரம்பிக்க வேண்டு மாயின் அதற்கு அரசிடம் முறையான அனுமதி பெற வேண்டும் என்பதை மற்ந்து விடாதீர்கள்.