ட்ரூ காலரில் என்ன அம்சம் இருக்கு தெரியாமா உங்களுக்கு.!
புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..
லைக் பண்ணுங்க... "
ட்ரூ காலர் பொறுத்த வரை மொபைல் போன்களில் நமக்கு வரும் அழைப்புகள் யாருடையது என அறிய உதவும் மிகப் பெரிய பயனுள்ள செயலி ஆகும்.
குறிப்பாக ட்ரூ காலர் செயலியை இந்தியாவில் 15 கோடிக்கு அதிகமான வாடிக்கை யாளர்கள் பயன்படுத்தி வருகிறன்றனர் என்பது குறிப்பிடத் தக்கது.
தற்சமயம் இந்த செயலியில் பல்வேறு புதிய அம்சங்கள் சேர்க்கப் பட்டுள்ளன என்பது குறிப்பிடத் தக்கது.
அதன்படி ட்ரூ காலர் செயலி இந்தியாவில் பிரபல வங்கியான ஐசிஐசி வங்கியுடன் இணைந்து பணம் அனுப்பும் வசதியைக் கொண்டு வந்துள்ளது.
மேலும் இதன் மூலம் போன்றிக்கு மிக எளிமையாக ரீசார்ஜ் செய்து கொள்ள முடியும்
பின்பு இதில் யு.பி.ஐ-ஐடியை உருவாக்கி இன்னொரு யு.பி.ஐ-ஐ டியை கொண்ட நபருக்கு பணம் அனுப்பலாம் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இப்போது ட்ரூ காலரில் மறைந் திருக்கும் சில சிறப்பு அம்சங்களை பார்ப்போம்.
விரைவில் வெளியாகும் முதன்மை யான ஸ்மார்ட்போன்: ஒன்ப்ளஸ் 6 பற்றிய முழுவிவரம்.!
பிளாக் கால்
தேவை யில்லாத நமக்கு தெரியாத எண்களில் இருந்து அழைப்புகள் அல்லது குறுஞ் செய்திகள் வந்தால் உடனே இந்த செயலி செயல்பட்டு அவற்றை பிளாக் செய்து விடும்.
மேலும் டெலி மார்க்கெட்டிங், ரோபோட் அழைப்புகள் போன்ற வற்றை எளிதில் அடையாளம் கண்டு கொள்ளும் திறன் இந்த செயலிக்கு உண்டு.
மேலும் ஒரு ஒயிட்லிஸ்ட் உருவாக்கி அதில் இருந்து அழைப்புகள் அல்லது குறுஞ்செய்தி வந்தால் பிளாக் செய்யக் கூடாது என்று செட் செய்யும் வசதியும் இதில் உண்டு.
இணையம்:
உங்கள் மொபைல் போனில் வரும் அழைப்பு எண் யாருக்குரியது என்று அறிய எப்போதும் இணைய இணைப்பில் உங்கள் போன் இருக்கத் தேவை யில்லை.
முதல் முறை ஓர் எண்ணிலிருந்து அழைப்பு வரும்போதே, அந்த எண்ணுக் குரியவரின்
பெயர் எங்கேனும் பதிவு செய்யப் பட்டிருந்தால், அதனை, ட்ரூ காலர் அறிந்து வைத்துக் கொள்கிறது.
அடுத்த முறை அழைப்பு வருகையில், தன் நினைவி லிருந்தே அதனை உங்களுக்குக் காட்டுகிறது.
ஸ்பேமர்
தொடர்ந்து ஓர் எண்ணி லிருந்து அழைப்பு பெறப்பட்டு, அழைப்பவர் எரிச்சல் தரும் பேச்சினைத் தொடர்ந்து அளிப்பவராயின்,
அந்த எண்ணுக் குரியவரை ஸ்பேமர் என அடையாளக் குறியிட்டு வைக்கலாம்.
குறிப்பாக இந்தப் பயன்பாடு பல்வேறு மக்களு க்கும் பயன்படும் வகையில் உள்ளது.
ட்ரூ டயலர்
இதே செயலியைப் போன்று, இதனை வழங்கும் நிறுவனம், 'ட்ரூ டயலர்' என்ற (True Dialer) என்ற செயலியையும் தருகிறது.
இதனை, உங்கள் போனின் டயலராக செயல் படுத்தலாம். நீங்கள் ஒருவரை அடையாளம் காட்டி அமைத்தால்,
நீங்கள் குறிப்பிட்ட அடை யாளத்துடன், அந்த எண்ணி லிருந்து அழைப்பு வருகையில் தகவல் கிடைக்கும்.
வழக்கமாக, நீங்கள் டயல் செய்திடு வதனை, இந்த செயலியின் மூலமும் செயல் படுத்தலாம்.
தேடல் பெட்டி: எண்களை அடையாளப் படுத்தவும்
எந்த தொலைபேசி எண்ணையும் எளிமையாக அடையாளம் காண இந்த தேடல் பெட்டி (Search bar) பயன்படும் வகையில் உள்ளது.
குறிப்பாக இந்த பயன்பாடும் மிக எளிமையாக இருக்கிறது.
சுயவிவரம் (profile)
உடன்இ நீங்கள் உங்கள் சொந்த சுய விவரத்தை அமைத்து உங்களுக்கு தேவையான வழியில் தனிப் பயனாக்கலாம்.
இதன் பயன்பாடு என்ன வென்றால் அழைப் பாளர்கள் உங்களைப் பற்றிய விவரங்களை பெற உதவுகிறது.
உங்கள் தொடர்புகளின் வசதிக்காக வலைத்தளம் மற்றும் மின்னஞ்சல் ஐடி போன்ற தகவல்களை நீங்கள் ட்ரூ காலரில் சேர்க்கலாம்.
தரவுத்தளம்:
இந்த ஆப் பயன் பாடானது உங்கள் தரவுத் தளத்தில் இருந்து உங்கள் எண்ணை நீக்க உதவுகிறது.
நீங்கள் இந்த இணைப்பை http://www.truecaller.com/unlist ஐ பார்வையிட வேண்டும்.
பின்னர் நாட்டின் குறியீடு உள்ளிட்ட உங்கள் தொலைபேசி எண்ணை உள்ளிடவும்.
அடுத்து, எண் அகற்றலுக் கான காரணத்தைத் தேர்வு செய்து, கேப்ட்சா உள்ளிட்டு, பட்டியலிடப் படாத பொத்தானைக் கிளிக் செய்யவும்.