இனி வாட்ஸ் ஆப் மெசேஜ்களை யாராலும் பார்க்க முடியாது !
புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..
லைக் பண்ணுங்க... "
வாரத் திற்கு ஒரு அப்டேட் தட்டிக் கொண்டே இருக் கிறது வாட்ஸ் ஆப். அதே போன்ற ஒரு அப்டேட் தான் சமீப த்தில் வந்துள்ளது.
ஆனால், இது கொஞ்சம் வித்தி யாசமான மற்றும் பாது காப்பான அப்டேட். நாம் நம் நண்பர் களுக்கு அனுப்பும் மெசேஜ் களையோ
அல்லது க்ரூப்பில் பதிவிடும் மெசேஜ் களையோ, இனி நாம், நம் நண்பர்கள்
அல்லது க்ரூப்பில் உள்ள வர்கள் தவிர வேறு யாராலும், பார்க்கக் கூட முடியாது.
ஏன்! வாட்ஸ் ஆப் நிறுவ னத்தால் கூட பார்க்க முடியாது.
நாம்
அனுப்பும் மெசேஜ், "பப்ளிக் கீ" மூலமாக என்க்ரிப்ட் (குறி யீடுகள் மூலம்
மறைக்கப் பட்டு) செய்யப் பட்டு, வாட்ஸ் ஆப் சர்வரை சென்றடை கிறது.
வாட்ஸ் ஆப் சர்வரில் நம் நண்பரின் ப்ரைவேட் கீ இல்லா ததால், நாம் அனுப்பும் மெசேஜினை வாட்ஸ் ஆப் நிறுவ னத்தால் பார்க்க முடியாது.
வாட்ஸ் ஆப் சர்வரில் இருந்து, நம் நண்பர் களிடம் சென் றடையும் மெசேஜ்,
நம் நண்பரிடம் இருக்கும் 'ப்ரைவேட் கீ' யால் டீக்ரிப்ட் செய்யப் படுகிறது. இதனால் நம் நண்ப ர்களால் அந்த மெசேஜினை பார்க்க முடிகிறது.
எழுத்து, புகைப்படம், வீடியோ என எதையுமே அனுப்புனர் மற்றும் பெறுநரைத் தவிர, வேறு யாராலும் பார்க்க முடியாது.
அரசாங் கத்தால் கூட. இந்த தொழில் நுட்பத்தால், தீவிரவா திகள் மற்றும் சமூக விரோதி களின் மெசேஜ்களை கண்டு பிடிக்க முடியாது
என சில அரசு அதிகா ரிகள் கருது கின்றனர். ஆனால் வாட்ஸ் ஆப், தனது பயனர் களின் தனிப்பட்ட உரிமை யினை பாதுகாக்க விரும்பு கிறது.