செல்போனை குழந்தைகளிடமிருந்து தள்ளி வையுங்கள் - மூளை பாதிக்கலாம் ! - EThanthis

Recent Posts


செல்போனை குழந்தைகளிடமிருந்து தள்ளி வையுங்கள் - மூளை பாதிக்கலாம் !

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
செல்போன் இல்லாத ஒரு வாழ்க்கையை கற்பனை கூட செய்ய முடியாது. அந்தளவுக்கு அது நம் வாழ்க்கையை ஆக்கிரமித்து விட்டது. 

வீட்டில் இருக்கும் நேரமெல்லாம் செல்போனோடு தான் இருக்கிறார்கள். குறித்த நேரத்தில் சாப்பிடுவ தில்லை. 

உறங்குவ தில்லை. பல பிரச்னைகளை எதிர் கொள்கிறார்கள். செல்போன் இல்லாத ஒரு வாழ்க்கையை கற்பனைகூட செய்ய முடியாது. 

அந்தளவுக்கு அது நம் வாழ்க்கையை ஆக்கிரமித்து விட்டது. குழந்தை களும்கூட அதற்கு விதி விலக்கல்ல. 

வீட்டில் இருக்கும் நேரமெல்லாம் செல்போனோடு தான் இருக்கிறார்கள். 

குறித்த நேரத்தில் சாப்பிடுவ தில்லை. உறங்குவ தில்லை. இதனால் 

உடல் சோர்வு, கண்ணெரிச்சல் போன்ற பல பிரச்னை களை குழந்தைகள் எதிர் கொள்கிறார்கள். 

இது மட்டுமின்றி, `செல்போன் களை தொடர்ச்சி யாகப் பயன்படுத்தும் குழந்தை களுக்கு 

மன அழுத்தமும் ஏற்படக் கூடும்’ என்கிறார் மனநல மருத்துவர் வி.கே.அரவிந்த். 

தென் கொரியா

“தென் கொரியா வில் மாணவர்கள் அதிகமாக இணைய த்துக்கு அடிமை யானதைக் 

கண்டறிந்த பிறகு `போர்னோ கிராபி’ தளங்களைத் தடை செய்தனர். 

இந்தியாவில் ‘ப்ளுவேல்’ என்ற விளை யாட்டால் உயிரிழப்புகள் ஏற்பட்ட பிறகு,

பெற்றோர் மத்தியில் கொஞ்சம் விழிப்பு உணர்வு ஏற்பட்டி ருக்கிறது. அது இன்னும் அதிகரிக்க வேண்டும். 

கட்டுப்பாடு

இந்தியாவில் 10 முதல் 15 சதவிகித குழந்தைகள் மன அழுத்தத்தால் பாதிக்கப் பட்டிருக்க லாம் என்று ஆய்வுகள் சொல்கின்றன. 

அன்றாட வாழ்க்கையில் அவசியமான ‘ஆப்ஸ்’கள் எவை? என்பதை அறிதல் அவசியம். 

அவற்றை எவ்வாறு, எப்போது, எந்த இடத்தில், எவ்வளவு நேரம் பயன்படுத்த வேண்டும் என்கிற கட்டுப்பாடும் முக்கியம். 
இவை பற்றிய விழிப்பு உணர்வு இல்லாததே, பல மன நோய்களுக் கான தொடக்கம். 

சோஷியல் மீடியா

இன்றுள்ள பல ‘சோஷியல் மீடியா ஆப்ஸ்கள்’ எளிதில் கையாளும் வகையில் இருக்கின்றன. 

ஃபேஸ்புக், இன்ஸ்டா கிராம், ட்விட்டர், வாட்ஸ்அப் போன்ற வற்றைப் பெற்றோர்கள் 

பயன்படுத்து வதைக் குழந்தைகளும் பார்த்துக் கற்றுக் கொள்கின்றனர். 

பொதுவாக, குழந்தைகளின் மனநிலை என்பது எதையும் ஆராய்ந்து பார்க்கும் தன்மை கொண்டது. 

நல்லதை விடக் கெட்டதை வேகமாகக் கற்றுக் கொள்ளவும் செய்வார்கள். 

ஆகவே, பெற்றோர்கள் வெளியில் சென்றிருக்கும் போதோ அல்லது வேறு ஏதாவது வேலையில் மூழ்கி இருக்கும் போதோ 

அவர்களு க்குத் தெரியாமல் செல்போனை எடுத்து அதில் என்ன வெல்லாம் இருக்கிறது என்று ஆராய்வார்கள்.

பாஸ்வேர்டு 

சில பெற்றோர்கள் தங்களுடைய செல்போனில் உள்ள ‘ஆப்ஸ்’களுக்கு பாஸ்வேர்டு வைத்தி ருப்பார்கள்.

அந்த பாஸ்வேர்டை பிரேக் செய்து, உள்ளே நுழையும் அளவுக்கு சில நேரங்களில் குழந்தைகள் ஈடுபடுவார்கள்.

சில பாலியல் ரீதியான புகைப் படங்களையோ தகவல் களையோ படிக்கும் போது அவர்களுடைய மனநிலை பாதிப்புக்கு உள்ளாகும்.

நாளடைவில் அந்த மாதிரியான விஷயங்களில் ஈர்ப்பு ஏற்பட்டு, பெற்றோரு க்குத் தெரியாமல்

செல்போனை எடுத்து தன்னுடைய நண்பர்களிடம் காட்டும் ஆர்வமும் அவர்களு க்கு ஏற்படும்.

வாட்ஸ்அப்’ குழு

பத்தாம் வகுப்புக்கு மேலே படிப்பவர் களாக இருந்தால் அவர்களே தங்களு க்குள் ‘வாட்ஸ்அப்’ குழுக்களை உருவாக்கி, 

இது போன்ற விஷயங் களைப் பரிமாறிக் கொள்வதும் நடக்கும். 

இப்படிச் செய்யும் போது அவர்களு க்குள் ஒரு ‘நெட்வொர்க்’ உருவாகும். 

இதனால் வகுப்பு களுக்குச் செல்லாமல் வேறு செயல்களில் ஈடுபட்டுக் கல்வியில் பின் தங்குவார்கள்.

ஒரு குழந்தை மன அழுத்தத்தால் பாதிக்கப் பட்டிருக்கிறது என்பது பள்ளியில் இருந்து வரும் புகார்கள் மூலமே தெரிய வரும்.

`நல்லா படிக்கிற பையன்.. இப்போ சுமாரான மார்க்தான் எடுத்தி ருக்கான்’ என்று ஆசிரியர் பெற்றோரிடம் சொல்வார். 

ஆரம்ப அறிகுறி

இது தான் குழந்தை மன அழுத்தத்தில் சிக்கியிருப் பதற்கான ஆரம்ப அறிகுறி!

குழந்தைகள் மனநல மருத்து வத்தில் மன அழுத்தம் , மனப் பதற்றம் (anxiety disorder) இரண்டும் பொதுவானவை. 

இவை தவிர, மேலும் இரண்டு வகை இருக்கின்றன. 

இதில், ஓ.சி.டி எனும் `அப்செஸிவ் கம்பல்ஸிவ் டிஸ்ஆர்டர்’ (Obsessive compulsive disorder) ஓன்று . 

இந்த மூன்றாவது டிஸ்ஆர்டர் தான் குழந்தை களைத் தற்போது அதிகமாகப் பாதிக்கிறது. 

இந்தப் பாதிப்பு உள்ளவர்கள் ஒரு செயலையே திருப்பித் திருப்பிச் செய்வார்கள். 

வீடுகளில் பெண்கள் சிலர் சமையல் வேலை முடிந்ததும் கேஸை மூடி விட்டோமா என்பதை 

ஒன்றுக்கு இரண்டு முறை பரிசோதிப்பார்கள். இப்படிச் செய்வது சாதாரண மானது தான். 

ஆனால், அதையே 15 அல்லது 20 முறை சோதித்துப் பார்த்தால் அது தான் `அப்செஸிவ் கம்பல்ஸிவ் டிஸ்ஆர்டர்’ .

குழந்தை களுக்கு வரும் `அப்செஸிவ் கம்பல்ஸிவ் டிஸ்ஆர்டர்’ என்பது செல்போனை திரும்ப திரும்ப எடுத்துப் பார்க்கத் தூண்டும்.

படிப்பதை மறந்து விட்டு அதிலேயே மூழ்கி யிருக்கச் செய்யும். 

செல்போனை எடுத்துப் பார்க்க வில்லை யென்றால் ஒரு வித மனப்பதற்ற த்துக்கு ஆளாகி விடுவார்கள். 

மேலும், பெற்றோர், உடன் பிறந்தோர் மீது கோபப்படுவும் சண்டை யிடவும் செய்வார்கள். 

கிளப்டோ மேனியா

`கிளப்டோ மேனியா’ (Kleptomania) என்பது நான்காவது வகை. இந்த வகையான குழந்தைகள் திருடுவார்கள். 

ஒரு சில குழந்தைகள் நல்ல குணம் படைத்தவர் களாக இருப்பார்கள். 

ஆனால், அவர்களுக்குப் பிடித்தமான ஒரு பொருள் இருந்தால், குறிப்பாக செல்போனை பார்த்தால் 

பெற்றோர் களுக்குத் தெரியாமல் எடுத்து, அதில் என்ன இருக்கிறது என்று பார்ப்பார்கள். 

பிறகு அதை எங்கேயாவது போட்டு விடுவார்கள். இந்த நான்கு வகை காரணங் களால் தான் குழந்தைகள் அதிக மன அழுத்தத்து க்கு ஆளாகிறார்கள்.

ஆகவே, குழந்தை களிடமிருந்து செல்போனை ஆரம்ப கட்டத்தி லேயே பெற்றோர்கள் தள்ளி வைக்க வேண்டும். 

குழந்தை களின் குறும்பு

நிறைய வீடுகளில் குழந்தை களின் குறும்பு களைச் சமாளிக்க அவர்கள் கையில் செல்போனை திணிக்கி றார்கள். 

இது தவறான அணுமுறை. இதைத் தவிர்க்க வேண்டும். சமூகத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை 

பெற்றோர்கள் தான் குழந்தை களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். குழந்தை களோடு பேச நேரம் ஒதுக்க வேண்டும்.  

பல நேரங்களில் கவுன்சலிங்கு க்கு வரும் குழந்தைகள், தங்களை எதற்காக பெற்றோர் மனநல 

மருத்துவரிடம் அழைத்து வந்திருக் கிறார்கள் என்பதை அறிய மாட்டார்கள்.

அதே நேரத்தில் பொறுப்பான பெற்றோர் களாக இருந்தால், ‘உனக்கு இந்த பிரச்னை இருக்குப்பா.. 

இதிலிருந்து நீ வெளியே வரணும்’ என்பதை மெதுவாக எடுத்துச் சொல்லி அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும். 

அப்படிச் செய்யும் போது குழந்தை களுக்குச் சிகிச்சை அளிப்பது எங்களுக்கு எளிதாக இருக்கும். 

கவுன்சலிங்

முதல் கட்டமாக மன அழுத்தத் தால் பாதிக்கப்பட்ட குழந்தை களுக்கு மருந்து, மாத்திரை களைப் பரிந்துரைப்போம். 

அதோடு நிற்காமல் பெற்றோர் களுக்குத் தான் கவுன்சலிங் கொடுப்போம்.

பள்ளியில் இருந்து வரும் குழந்தை களிடம் அன்று நடந்த சம்பவங்களை கேட்க பல பெற்றோர்கள் தவறி விடுகின்றனர். 
பெரும் பாலான குடும்பங்களில் இருவரும் வேலைக்குச் செல்வதால், வீட்டுக்கு வந்ததும் 

டிவி பார்ப்பது, செல்போனில் நண்பர்களிடம் பேசிக் கொண்டிருப்பது என நேரத்தைச் செலவிடு கின்றனர். 

அன்று பள்ளியில் என்ன நடந்தது என்று அரை மணி நேரம் ஒதுக்கி குழந்தை களிடம் பேச வேண்டும். 

‘பள்ளியில் விழா நடக்கிறதா, உனக்கு எதுவும் வேண்டுமா?’ என்றெல்லாம் கேட்டால், 

அந்தக் குழந்தை நிறைய சந்தோஷப்படும். குழந்தையின் வயதுக் கேற்றவாறு பொருள் களை வாங்கித் தரலாம். 

ஆனால், அவர்கள் ஆசைப் படுகிறார்கள் என்பதற்காக அவர்களுடைய வயதுக்குப் 

பொருந்தாத பொருள்களை வாங்கித் தருவதைத் தவிர்க்க வேண்டும். 

செல்போனை அவர்களிடம் தருவதாக இருந்தால், நீங்கள் பாஸ்வேர்டு போட்டு திறப்பதாக இருக்க வேண்டும். 

குறித்த நேரத்தில் சாப்பிடும் பழக்கத்தை அவர்களிடம் ஏற்படுத்த வேண்டும். 

இவை யெல்லாம் அவர்களுடைய மன அழுத்தத்தைப் போக்க உதவும்!” என்றார் வி.கே.அரவிந்த்.
செல்போனை குழந்தைகளிடமிருந்து தள்ளி வையுங்கள் - மூளை பாதிக்கலாம் ! செல்போனை குழந்தைகளிடமிருந்து தள்ளி வையுங்கள் - மூளை பாதிக்கலாம் ! Reviewed by Fakrudeen Ali Ahamed on December 11, 2018 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 EThanthis All rights reserved
close