அனுப்பிய மெயிலை திரும்ப பெறும் அன்சென்ட் வசதி : ஜி-மெயில் ! - EThanthis

Recent Posts


அனுப்பிய மெயிலை திரும்ப பெறும் அன்சென்ட் வசதி : ஜி-மெயில் !

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
இ மெயில் சேவையில் தாெடர்நது முக்கிய பங்காற்றிவரும் ஜி-மெயில் நிறுவனம் அனுப்பிய மெயிலை திரும்பு பெறும் unsend ஆப்ஷனை அறிமுகப் படுத்தியுள்ளது.
 
இதுவரை நாம் அனுப்பிய மெயிலை திரும்ப பெற நினைத்தால் அது  இயலாத காரியமாக இருந்து வந்தது. 

இந்நிலையில் மின்னஞ்சல் தளத்தில் முக்கிய பங்காற்றிவரும் ஜி-மெயில் அனுப்பிய மெயிலை திரும்பு பெறும் unsend ஆப்ஷனை அறிமுகப் படுத்தி யுள்ளது.
இதன் மூலம் தவறுதலாக அனுப்பப்பட்ட மெயிலை திரும்ப அழைத்துக் கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

சரி அனுப்பிய மெயிலை எப்படி unsend செய்வது என்பதை பார்ப்போம் முதலில் ஜி மெயிலுக்குள் செல்ல வேண்டும்.

பின்னர் Settings ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். அதற்குள் சென்றவுடன் Undo Send என்ற பகுதிக்குள் செல்லவும்.

அதில் Undo வசதியை Enable செய்யவும். பின்னர் Save Changes பட்டனை க்ளிக் செய்யவும்.


அதன் பின் நீங்கள் யாருக்காவது மின்னஞ்சல் அனுப்பினால், ஒரு இமேஜ் தானாக தோன்றும். 

அதில் UnSend என்ற ஆப்ஷன் 30 செகண்டுகள் டிஸ்பிளே ஆகும். ஒரு வேளை நீங்கள் அனுப்பிய மெயிலை திரும்பப்பெற விரும்பினால் Unsend ஆப்ஷனை கிளிக் செய்து திரும்ப பெறலாம்.

ஜி மெயில் அறிமுகப் படுத்திய இந்த அனசென்ட வசதியில் இமெயில் பயன் படுத்துவோர் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.
அனுப்பிய மெயிலை திரும்ப பெறும் அன்சென்ட் வசதி : ஜி-மெயில் ! அனுப்பிய மெயிலை திரும்ப பெறும் அன்சென்ட் வசதி : ஜி-மெயில் ! Reviewed by Fakrudeen Ali Ahamed on September 25, 2018 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 EThanthis All rights reserved
close