4G ஸ்மார்ட் போனை ரூ.4 ஆயிரத்திற்கு வெளியிட ஏர்டெல் திட்டம் !
புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..
லைக் பண்ணுங்க... "
இந்தியாவில் தொலை தொடர்பு சேவையில் முன்னிலை வகித்து வரும் ஏர்டெல் நிறுவனம் 4G நெட்வொர்க்
சேவையை பல்வேறு கட்டங் களாக நாடு முழுவதும் செயல் படுத்தி வருகிறது.
முதற் கட்டமாக, கொல்கத்தா வில் 3 ஆண்டு களுக்கு முன்ன தாக 4G சேவையை துவங்கிய
ஏர்டெல் அதன் பிறகு படிப்படி யாக, நாக்பூர், அவுரங்காபாத், பெங்களூரு, புனே, சண்டிகர், பாட்டியாலா உள்ளிட்ட
பகுதிகளி லும் அறிமுகப் படுத்தியது.
மேலும், டெல்லி, ஐதராபாத், விசாகபட்டினம்,
மதுரை, சென்னை, கோவை மற்றும் மும்பை யிலும் கொண்டு வரப்பட்டது.
இந்நிலையில், ஏர்டெல் நிறுவனம் வரும் அக்டோபர் மாதத்திற்குள் இந்தியா வில் ரூ.4 ஆயிரத்தி ற்குள்
பட்ஜெட் 4G ஸ்மார்ட் போன்களை தனது நிறுவனத்தின் பெயரிலேயே வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி யுள்ளது.
ஏற்கனவே, ரிலையன்ஸ் ஜியோ இந்த முயற்சியில் ஈடு பட்டுள்ள நிலையில்,
அதற்கு போட்டியாக தற்போது ஏர்டெல் நிறுவன மும் களமிறங்கி யுள்ளதாக கூறப் படுகிறது.
சீன ஸ்மார்ட்போன் நிறுவனங் களுடன் இதற்கான பேச்சு வார்த்தையை தற்போது துவங்கி யுள்ளது ஏர்டெல்.
குறிப்பாக, இந்தியாவில் தொழிற்சாலை அமைத்து மொபைல் போன்களை தயாரிப்ப தற்காக
தைவான் நாட்டை சேர்ந்த உதிரி பாகங்கள் இணைப்பு நிறுவன மான பாக்ஸ்கா னுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறது.
ஏற்கனவே, ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி தனது நிறுவனத்தின் ஆண்டு பொதுக் கூட்டத்தில் ரூ.4 ஆயிரத்தி ற்கும்
குறைவான விலையில் 4G ஸ்மார்ட் போன்களை விரைவில் வெளியிட உள்ளதாக அறிவித் திருந்தது நினைவு கூரத்தக்கது.