இண்டர்நெட்டில் உள்ள விபரங்களை அழிக்க எளிய வழிமுறை ! - EThanthis

Recent Posts


இண்டர்நெட்டில் உள்ள விபரங்களை அழிக்க எளிய வழிமுறை !

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
கடந்த பத்து வருடங்களு க்கு முன்னர் மணிக்கணக்கில் வரிசையில் நின்று முடித்த வேலைகளை 
விபரங்களை அழிக்க
தற்போது இண்டர்நெட் மூலம் ஒருசில நொடிகள் அல்லது நிமிடங்களில் முடித்து விடுகிறோம். 

இண்டர்நெட் நம் உலகையே சுருக்கி விட்டது. எத்தனை ஆயிரம் கிலோ மிட்டர் தூரத்தில் இருந்தாலும் அருகில் இருப்பது போன்ற உணர்வு உள்ளது.

ஆனால் எந்த அளவுக்கு இண்டர்நெட் நமக்கு பாசிட்டிவ் ஆக இருக்கின்றதோ அதே அளவுக்கு அதனால் நமக்கு ஒருசில ஆபத்தும் உள்ளது. 

ஹேக்கர்களின் கை வரிசையால் நமது பொருட்களு க்கு இழப்பு ஏற்படுவ தோடு நம்முடைய பர்சனல் விஷயங்களின் பாதுகாப்பு கேள்விக் குறியாகிறது.

என்னதான் ஆண்ட்டி வைரஸ் வைத்திருந் தாலும், பாஸ்வேர்டு களை சிக்கலாக வைத்திருந் தாலும் 

 ஹேக்கர்கள் ஏதாவது ஒரு கேப்பில் உள்ளே புகுந்து நமது டேட்டாக்களை நாசமாக்கி விடுகின்றனர். 

இந்நிலையில் தற்போது நமக்கே தெரியாத ஒரு சில இடங்களில் பதிவு செய்யப் பட்டுள்ள நம்முடைய தகவல்களை அழிக்க, தற்போது ஒரு சிறந்த வழி கிடைத்துள்ளது.

சுவீடன் நாட்டை சேர்ந்த இரண்டு டெவலப்பர்கள் இதற்கென ஒரு பிரத்யேக இணைய தளத்தை உருவாக்கி யுள்ளனர். 

Deseat.me என்ற இணையதளம் உங்களுடைய தகவல்கள் எந்தெந்த இடங்களில் உள்ளது என்பதை உங்கள் கண்முன் நிறுத்தும்.

அவற்றில் தேவை யில்லாத இணைய தளங்களில் உங்கள் தகவல் இருப்பதை நீங்கள் அறிந்தால் உடனே அவற்றை டெலிட் செய்து விடலாம். 

இதற்கு ஒருசில எளிய வழிமுறை களை கடை பிடித்தாலே போதும். அவை என்ன வென்று தற்போது பார்ப்போம்.

இந்த இணைய தளத்தை உபயோகிக்க உங்களுக்கு ஒரு கூகுள் அக்கவுண்ட் இருந்தால் போதும். 

உங்களுடைய கூகுள் அக்கவுண்டில் லாக்-இன் செய்த பின்னர் Deseat.me இணைய தளத்தை ஒப்பன் செய்யுங்கள்.

அதில் நீங்கள் பயன்படுத்தும் செயலி முதல் இணைய தளங்கள் வரை திரையில் வரும். 

அதில் நீங்கள் அடிக்கடி உபயோகிக்காத அல்லது அறவே உபயோகிக்காத இணைய தளங்கள் இருந்தால் அதை உடனே டெலிட் செய்து விடுங்கள். 

அந்த இணைய தளத்தில் உங்களை பற்றிய தகவல்கள் மறைந்து விடும்.

தற்போதைக்கு அனைத்து விதமான இணைய தளங்களுக்கும் சப்போர்ட் செய்யும் வகையில் இந்த Deseat.me இல்லை என்றாலும் 

ஃபேஸ்புக் போன்ற பெரிய இணைய தளங்களுக்கு சப்போர்ட் செய்யும் வகையில் உள்ளது.

ஆயினும் வரும் காலத்தில் இந்த இணையதளம், சின்ன சின்ன இணைய தளங்களில் உள்ள நம்முடைய விபரங்களை கண்டுபிடிக்கும் 

திறன் வாய்ந்ததாக செயல்பட வைக்கும் முயற்சியில் உள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.
இண்டர்நெட்டில் உள்ள விபரங்களை அழிக்க எளிய வழிமுறை ! இண்டர்நெட்டில் உள்ள விபரங்களை அழிக்க  எளிய வழிமுறை ! Reviewed by Fakrudeen Ali Ahamed on September 04, 2018 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 EThanthis All rights reserved
close