மலிவான ஐபோன் சார்ஜர்கள் வெடிக்குமா? சோதிப்பது எப்படி? - EThanthis

Recent Posts


மலிவான ஐபோன் சார்ஜர்கள் வெடிக்குமா? சோதிப்பது எப்படி?

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
நீங்கள் ஏதேனும் ஆன்லைன் ஷாப்பிங்கில் அல்லது ஏதேனும் ஆப்லைன் கடைகளில் மிக மலிவான விலைக்கு ஐபோன் சார்ஜர் வாங்கி பயன்படுத்து கிறீர்களா.? 
அல்லது அதிகாரப் பூர்வமற்ற பேக்கேஜிங்கில் கிடைத்த ஐபோன் சார்ஜரை பயன்படுத்து கிறீர்களா.? 

அது பாதுகாப்பற்ற தாக இருக்க 99 சதவீதம் வாய்ப்பு உள்ளது என்பதை நீங்கள் அறிவீர்களா.?

ஆப்பிள் நிறுவனம் ஒரு சில ஆண்டுகளாக மலிவான சார்ஜர்கள் சார்ந்த பிரச்சினை களை சந்தித்து வருகிறது 

மற்றும் ஆப்பிள் சாயல் போன்ற தயாரிப்பு களை வாங்க வேண்டாம் என்றும் மக்களுக்கு அறிவுறுத்தி யுள்ளது. 

இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் மலிவான அல்லது போலி ஐபோன் சார்ஜர்கள் மூலம்

உங்கள் ஐபோனுக்கு ஏதாவது கோளாறு நேர்ந்தால் அதுவும் ஒரு அதிகாரப் பூர்வமற்ற சார்ஜர் பயன்படுத்தி 

கோளாறு நேர்ந்தால் உங்கள் கருவி மீதான உத்தரவாதம் த்தை செல்லு படியாகாது என்பது தான்.

உங்கள் சார்ஜர் பாதுகாப்பானதா என்பதை சோதிப்பது மற்றும் நீங்கள் வைத்திருப்பது 

ஒரு அதிகாரப் பூர்வமான ஐபோன் சார்ஜர் தான் என்பதை சோதிப்பது எப்படி என்பதை பற்றிய தொகுப்பே இது.!

அதிகாரப் பூர்வமான ஐபோன் சார்ஜர் தானா.?
இடைவெளி : சார்ஜர் விளிம்பு மற்றும் பின் விளிம்பு ஆகியவை களுக்கு இடையே குறைந்தது 9.5எம்எம் இடைவெளி உள்ளதா என்பதை பார்க்கவும். 

இடைவெளி தூரம் என்று குறைவாக இருந்தால் ப்ளக் மற்றும் அன்ப்ளக் செய்யும் போதும் மின்சார அதிர்ச்சி ஏற்படும் ஒரு ஆபத்து இருக்கிறது

இயந்திர சேதம்

சார்ஜரை எளிதாக ப்ளக் செய்ய முடிகிறதா..? இல்லையெனில் பின் ஒரு தவறான அளவில் அல்லது தவறான தூரத்தில் இருக்கலாம். 

இது ஓவர் ஹீட்டிங் ஆபத்தை ஏற்படுத்தி இயந்திர சேதம் விளைவிக்கும்

ஏமாற்று வேலை

சார்ஜரில், சிஇ மார்க் உடனான உற்பத்தியாளரின் பிராண்ட் பெயர் அல்லது சின்னம், மாடல் மற்றும் பேட்ச் நம்பர் ஆகிய வைகளை சரி பார்க்கவும். 

சிஇ மார்க் மட்டுமே பாதுகாப்புக்கு உத்தரவாதம் என நம்ப வேண்டாம் - அது ஐரோப்பிய சட்டத்தின் படி கருவி பாதுகாப்பானது தான் என்று 

உற்பத்தி யாளரின் ஒரு அறிவிப்பு மட்டும் தான். அதில் எளிதாக ஏமாற்று வேலைகளை செய்ய முடியும்.

அவுட்புட் வோல்டேஜ் மற்றும் கரன்ட் ரேட்டிங்ஸ்

உங்கள் சார்ஜரில் அவுட்புட் வோல்டேஜ் மற்றும் கரன்ட் ரேட்டிங்ஸ் குறிக்கப் பட்டுள்ளதா என்பதை சோதிக்கவும். 

இந்த சோதனை மூலம் நீங்கள் சக்தி அலைகள் மற்றும் கருவி சூடாகும் பிரச்சினையை தவிர்க்கலாம்

வழிகாட்டல் மற்றும் ஆலோசனை

சார்ஜர் ஆனது பயனர் அறிவுறுத்தல்கள் மற்றும் போதுமான எச்சரிக்கைகள் சார்ந்த கையேடு கொண்டு வரவில்லையா என்பதை சோதிக்க வேண்டும். 

சார்ஜரை எப்படி பாதுகாப்பாக அப்புறப் படுத்துவது, அடிப்படை மின்சார பாதுகாப்பு வழிகாட்டல் மற்றும் ஆலோசனை ஆகியவை களை அது வழங்கும்.

உங்கள் சார்ஜர் பாதுகாப்பானதா..?

ஓவர் சார்ஜ் : எப்போதுமே உங்கள் ஐபோனை ஓவர் சார்ஜ் செய்ய வேண்டாம். குறிப்பாக, இரவு முழுவதும் சார்ஜ் செய்வது கூடாது. 

ஒரு முறை முழு சார்ஜ் அடைந்ததும் கருவி - சார்ஜர் இணைப்பை துண்டிக்கவும்.

முதல் முறை கோளாறு
முதல் முறையாகவே உங்கள் சார்ஜர் கோளாறு செய்யும் போதே உடனடியாக அதை மாற்றி விடவும். 

மீண்டும் ஒருமுறை முயற்சிக்கலாம் என்ற முடிவை எடுக்காதீர்கள்.

உபயோகிக்க வேண்டாம்

சார்ஜர் இணைப்பில் இருக்கும் போது உங்கள் ஐபோனை உபயோகிக்க வேண்டாம். 

அது போதுமான சார்ஜ் ஆகி முடித்த பின்னர் சார்ஜ் இணைப்பை துண்டித்த பின்னர் பயன்பாடுகளை நிகழ்த்தவும்.

உலோக பாகங்கள்

உங்கள் ஐபோன் ஒரு கணினி அல்லது லேப்டாப் உடன் இணைப்பில் இருந்தால் 

ஐபோனில் ரப்பர் கேஸ்களை பயன்படுத்தவும் நேரடியா உலோக பாகங்கள் தொடுவதை தவிர்க்கவும்.
மலிவான ஐபோன் சார்ஜர்கள் வெடிக்குமா? சோதிப்பது எப்படி? மலிவான ஐபோன் சார்ஜர்கள் வெடிக்குமா? சோதிப்பது எப்படி? Reviewed by Fakrudeen Ali Ahamed on September 04, 2018 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 EThanthis All rights reserved
close