பேசும் மென்பொருளை உருவாக்க வேண்டுமா? ! - EThanthis

Recent Posts


பேசும் மென்பொருளை உருவாக்க வேண்டுமா? !

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
சாதாரண மாக ஒரு மென் பொருளை உருவாக்க அதிகம் படித்திருக்க வேண்டும். அதாவது கணினித் துறையில் (computer technology), கணினி மொழி சார்ந்த 


படிப்பு களைக் (computer language, programming) கற்றுத் தேர்ந்தவர் களால் தான், பல்வேறு சிரமங் களுக்கு இடையில் ஒரு மென்பொருள் உருவாக்கப் படுகிறது. நினைத்த வுடனேயே மென் பொருளை உருவாக்க முடியாது. 

இதில் உள்ள சிரமங்கள் மென்பொருள் துறையில் உள்ள வல்லுநர் களுக்கு (Software Engineer) நன்றாகவே புரியும்.

இந்த சிரமங்கள் எல்லாம் இல்லாமல் நாமே சுயமாக நமது கணினியைக் கொண்டு மென் பொருளை உருவாக்கிப் பார்ப்போம் வாருங்கள்.

முதலில் நோட்பேட் ஓப்பன் செய்து கொள்ளுங்கள்.

பிறகு இந்த கோடிங்கை தவறி ல்லாமல் உள்ளது உள்ள படியே ஒரு நோட்பேடில் தட்டச் சிட்டு talk.vbs என சேமித்து விடுங்கள்.

Dim UserInput
userInput = InputBox ("Hi, arimuham!")
Set Sapi = Wscript.CreateObject ("SAPI.SpVoice")
Sapi.speak userInput

தேவை யெனில் hi, arimuham! என்ற இடத்தில் உங்கள் பெயரையோ அல்லது உங்களின் நண்பரின் பெயரையோ போட்டுக் கொள்ளலாம்.

பிறகு talk.vbs என்ற அந்த கோப்பை திறந்து பாருங்கள்..

இவ்வாறு ஒரு பெட்டித் தோன்றும். அதில் நீங்கள் தட்டச்சிடும் வார்த்தை களை வாசித்து 

காட்டும். அது மட்டுமா? நம்முடைய தாய் மொழியாம் அன்னைத் தமிழையும் வாசிக்கும். 

இதற்கு நீங்கள் யுனிகோட் எழுத்து ருக்களாக (Unicode) உள்ளிட வேண்டும். அவ்வளவு தான்..

உங்கள் நண்பர் களுக்கும் இதுபோல செய்து அவர்களை ஆச்சர்ய த்தில் மூழ்க அடியுங்கள்.. 

இனி நீங்களும் ஒரு சாப்ட்வேர் என்ஜினியர் தான் (Software Engineer)... என்ன நண்பர்களே... 

நீங்கள் சாப்ட்வேரை உருவாக்கி விட்டீர்களா? உங்க ளுடைய சாப்ட்வேர் பேசுகிறதா?
பேசும் மென்பொருளை உருவாக்க வேண்டுமா? ! பேசும் மென்பொருளை உருவாக்க வேண்டுமா? ! Reviewed by Fakrudeen Ali Ahamed on October 07, 2018 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 EThanthis All rights reserved
close