டேக் எ பிரேக்’ என்றால் என்ன? ஃபேஸ்புக் ‘புதிய அப்டேட் ! - EThanthis

Recent Posts


டேக் எ பிரேக்’ என்றால் என்ன? ஃபேஸ்புக் ‘புதிய அப்டேட் !

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
ஃபேஸ்புக் நிறுவனம் தனது பயனாளர் களுக்கு பல அப்டேட்களை வழங்கி வருகிறது.
அந்த வரிசையில், சில தினங்களுக்கு முன்பு ‘டேக் எ பிரேக்’ (Take a Break) என்ற ஒரு அப்டேட்டை ஃபேஸ்புக் நிறுவனம் தனது பயனாளர் களுக்கு கொடுத்துள்ளது.

இந்த அப்டேட் ஃபேஸ்புக் பயனாளர்களின் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது.

மேலும், இந்த அப்டேட் ஃபேஸ்புக் ஆப்-ல் மட்டும் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத் தக்கது.

எனவே இனி நீங்கள் யார் ப்ரொஃபைலை பார்க்கலாம், அல்லது யார் மட்டும் உங்கள் ப்ரொஃபைலை பார்க்க வேண்டும் என்பதை நீங்களே முடிவு செய்யலாம்.
மேலும், நீங்கள் செய்யும் மாற்றங்கள் பற்றி அந்தக் குறிப்பிட்ட நண்பருக்கு தெரியப் படுத்தப்பட மாட்டாது.

‘டேக் எ பிரேக்’ என்றால் என்ன?

‘டேக் எ பிரேக்’ என்பது உங்கள் ஃபேஸ்புக் நண்பர்கள் வட்டத்தில் யாருடனாவது சிறிது காலம் விலகி இருக்க நினைத்தால்,

அந்தக் குறிப்பிட்ட நண்பரின் பக்கத்திற்கு சென்று ஃப்ரெண்ட்ஸ் பட்டனை தட்டினால் அதில் கீழே ஒரு சில ஆப்ஷன்களை பட்டியலிடும்.
அது என்ன வென்றால், Unfriend, Unfollow, Edit Friends Lists, Take a Break ஆகியவை ஆகும்.

அதில் இந்த ‘டேக் எ பிரேக்’ ஆப்ஷனை கிளிக் செய்தால் அது ஒரு சில பரிந்துரைகளை உங்களுக்கு காட்டும். அதற்கு நீங்கள் பதிலளித்தால் மட்டும் போதுமானது.

‘டேக் எ பிரேக்’ எப்படி செயல்படுகிறது ?

உகாரணத்திற்கு உங்கள் நண்பரின் பெயர் நரேஷ் என்று வைத்துக் கொள்வோம்.

நீங்கள் அந்த நண்பரின் பக்கத்திற்கு சென்று ஃப்ரெண்ட்ஸ் பாக்ஸை அழுத்தினால் ‘டேக் எ பிரேக்’ ஆப்ஷன் உங்களுக்கு பரிந்துரைக் கப்படும்.

அதனை அழுத்தினால் மூன்று ஆப்ஷன்கள் உங்களுக்கு பட்டிய லிடப்படும்.

முதலில், 'See Less of Naresh'

1. நீங்கள் அந்தக் குறிப்பிட்ட நண்பரின் பதிவுகள் மற்றும் ப்ரொஃபைல் பிக்ச்சரை
உங்கள் நியூஸ் ஃபீடில் (News feed) மட்டுமின்றி ஃபேஸ்புக்கில் எங்கு வேண்டு மானாலும் பார்க்கலாம்.

2. அந்தக் குறிப்பிட்ட நண்பரின் பதிவுகளை நீங்கள் அவரின் ப்ரொஃபைலுக்குள் சென்றால் மட்டுமே காண முடியும்.

மேலும், அவரின் பதிவுகள் மற்றும் அவர் ஏதேனும் ஒரு பதிவில் டேக் (Tag) செய்யப் பட்டிருந்தால்,

அதுவும் உங்கள் நியூஸ் ஃபீட் (News feed)-ல் காண்பிக்கப் படமாட்டாது.

இதில் ஏதேனும் ஒரு ஆப்ஷனை டிக் செய்து சேவ் கொடுங்கள்...

இரண்டாவதாக, 'Limit What Naresh Will See'

1. தற்போது உள்ள ப்ரைவசி செட்டிங்ஸ் (Privacy settings)-இல் தொடரலாமா என்று கேட்கும்.

அப்படியானால் அந்தக் குறிப்பிட்ட நண்பரால் உங்கள் பதிவுகளை எப்போதும் போல பார்க்க முடியும்.

2. அந்தக் குறிப்பிட்ட நண்பரை தடைசெய்யப்பட்ட பட்டியலில் (Restricted List) சேர்க்கலாமா என்று கேட்கும்.
அப்படி யானால் அந்த நண்பரால் உங்கள் நண்பர்கள் வட்டத்தில் நீங்கள் பகிரும் பதிவுகளை அவர்களால் பார்க்க இயலாது.

இதில் ஏதேனும் ஒரு ஆப்ஷனை டிக் செய்து சேவ் கொடுங்கள்...

மூன்றாவதாக, 'Edit Who Can See Past Posts'

1. தற்போது இருக்கும் பதிவுகளில் மாற்ற மின்றி இருந்தவாரே வைத்துக் கொள்ளலாம்.

2. ஒவ்வொறு பதிவுகளாகச் சென்று உங்களுக்கு விருப்பமில்லாத பதிவுகளை ப்ரைவேட் செய்துக் கொள்ளலாம்

அல்லது அந்தப் பதிவுகளில் இருந்து விலகியும் (Untag) கொள்ளலாம்.

3. அந்தக் குறிப்பிட்ட நண்பரின் பதிவுகளில் நீங்கள் ஏதேனும் பதிவில் Tag செய்யப் பட்டிருந்தாலோ
மற்றும் யாரேனும் உங்கள் இருவரையும் ஒரே பதிவில் சேர்ந்தவாறு Tag செய்திருந்தாலோ அதிலிருந்தும் நீங்கள் Untag செய்யப் படுவீர்கள்.

மேலும், உங்கள் இருவரின் பக்கங்களிலும் ஒருவருக் கொருவர் பகிர்ந்து கொல்லப்பட்ட பதிவுகளும் அழிக்கப்பட்டு விடும்.
இதில் ஏதேனும் ஒரு ஆப்ஷனை டிக் செய்து சேவ் கொடுங்கள்...

இதுபோன்ற பல்வேறு அப்டேட்களை அவ்வப்போது ஃபேஸ்புக் நிறுவனம் தனது பயனாளர் களுக்கு வழங்கி அவர்களை கவர்ந்து வருகிறது.
டேக் எ பிரேக்’ என்றால் என்ன? ஃபேஸ்புக் ‘புதிய அப்டேட் ! டேக் எ பிரேக்’ என்றால் என்ன? ஃபேஸ்புக் ‘புதிய அப்டேட் ! Reviewed by Fakrudeen Ali Ahamed on October 17, 2018 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 EThanthis All rights reserved
close