ஒருவருடைய மனதில் என்ன இருக்கிறது என்பதை காண ஆப்ஸ் | Apps to see what's in one's mind !
புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..
லைக் பண்ணுங்க... "
ஆச்சரியம்... ஆனால் உண்மை என்பதைப் போல ஒருவ ருடைய மனதில் என்ன இருக்கிறது என்பதைக் கண்டு பிடிக்கவும் App வந்து விட்டது.
இதற்குப் பெயரே Moodies app என்று பெயர் சூட்டியி ருக்கிறது Beyond Verbal என்கிற இஸ்ரேல் நிறுவனம்.
எப்படி? இந்த Moodies app செயலியை அதற்குரிய இணையதள பக்கங்களில் இருந்து கணினி, டேப்லெட் போன்ற வற்றில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
கணினி, டேப்லெட் போன்ற வற்றில் மைக்ரோபோன் வசதியை அனுமதித்து பயன் படுத்துமாறு செய்ய வேண்டும்.
பின்னர் அந்த செயலியை இயக்கி, அதன்முன் 20 நொடிகள் வரை உங்க ளுடைய மனதில் உள்ள எண்ணங் களைப் பேசி அந்த குரலை பதிவு செய்ய வேண்டும்.
இந்த செயலியில் உள்ள மென்பொருள், நாம் பேசிய வார்த்தை களின் குரல் ஏற்றத் தாழ்வு களை ஆய்வு செய்து
அதன் மூலம் நமது மனநிலை எப்படி உள்ள தென்பதை வெளிப் படுத்திவிடும். அது நாம் பேசிய வார்த்தை களின் அர்த்தங் களை ஆராய்வ தில்லை.
ஆனால், நாம் பேசியிரு க்கும் தொனியி லிருந்து நம் மனநிலை அமைதி, சந்தோஷம், துக்கம், கோபம் அல்லது நகைச்சுவை போன்ற எந்த உணர்வோடு உள்ள தென்பதை வெளிப்படு த்துகிறது.
இது தனி நபர்களின் உணர்வு களை அவர்க ளுடைய குரலை அடிப்படை யாகக் கொண்டு அளவிட்டு, அவர்களின் மனநிலையை வெளிப் படுத்துகிறது.
இந்தத் தொழில் நுட்பத்தின் நிறுவனர் யோரம் லெவனான் இயற்பியல், கணிதம் மற்றும் புள்ளியியல் போன்ற துறைகளில் பட்டங்களைப் பெற்றுள்ளார்.
வார்ட்டன் பல்கலைக் கழகத்தின் மூத்த ஆய்வா ளராக உள்ள இவர் தலைமை யில் அறிவியல் விஞ்ஞானி கள் மற்றும் உளவியல் அறிஞர்கள் இணைந்து 18 ஆண்டுகள் மேற்கொண்ட ஆய்வு களின் மூலம் இதை உருவாக்கி யுள்ளனர்!