ஸ்மார்ட்டாக 10 ஆப்ஸ்கள் ! - EThanthis

Recent Posts


ஸ்மார்ட்டாக 10 ஆப்ஸ்கள் !

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
எந்த வேலையை எப்படி செய்து முடிக்கப் போகிறோம் என்பது தெரியாமல் தலையைப் பிய்த்துக் கொண்டிரு க்கும் 
இந்தக் காலத்தில், நம் அலுவலகம் மற்றும் தனிப்பட்ட வேலை களை எளிதாக, ஸ்மார்ட்டாக செய்து முடிக்க உதவும்.

10 ஆப்ஸ்கள் இதோ:

ட்ரெல்லோ!

நீங்கள் செய்ய நினைக்கும் வேலை களைக் குறித்த நேரத்தில் கச்சிதமாக செய்து முடிக்க இந்த ஆப்ஸ் நிச்சயம் உதவும்.

இந்த ஆப்ஸை பயன்படுத்தி நீங்கள் செய்ய வேண்டிய வேலை களைப் பதிவு செய்து விட்டால்,

அதுவே சரியான நேரத்தில் உங்களுக்கு நினைவூ ட்டிவிடும்.

அது மட்டுமின்றி உங்கள் அலுவலக த்தில் உங்களின் கீழ் பணி புரிபவர்கள் செய்ய வேண்டிய வேலையைப் பட்டியலிட்டு,

அதை அவர்களுக்கு அனுப்பி விட்டால், அந்த வேலையைச் செய்யச் சொல்லி அவர்களுக்கு நினைவு படுத்தும்.
கசகசா கலந்த கேக் சாப்பிட்டால் சிறை தண்டனை !
வேலை முடிந்து அவர்கள் அப்டேட் செய்தவுடன் அந்தத் தகவலும் உங்களுக்கு வந்து சேரும்.

கூகுள் ப்ளே ஸ்டோரில் இந்த ஆப்ஸ் இலவசமாகக் கிடைக்கும். இந்த ஆப்ஸ் 5-க்கு 4.5 ரேட்டிங்கைப் பெற்றுள்ளது.

இந்த ஆப்ஸை டவுன்லோடு செய்ய: https://play.google.com/

இன்பாக்ஸ் பை  ஜி-மெயில்:

கூகுள் மெயிலான ஜி-மெயிலுக்காக தனியொரு ஆப்ஸை உருவாக்கி யுள்ளது கூகுள்.

இதைப் பயன்படுத்தி மற்ற மின்னஞ்சல் சேவை களான யாகூ, ஹாட்மெயில்

போன்ற வற்றில் ஒருவர் வைத்திரு க்கும் கணக்கு களையும் இணைத்துக் கொள்ள முடியும்.

அதற்கு வரும் மெயில்்களையும் இதில் பெற முடியும்.

பதிலளிக்க வும் முடியும். ஒரே ஆப்ஸ் அனைத்து மெயில் களை யும் பெறுவதால்,

தனித்தனியே ஆப்ஸ்களை டவுன்லோடு செய்ய வேண்டிய அவசிய மில்லை.

இந்த ஆப்ஸ் வெளியாகி ஒரு மாதமே ஆகியிருந் தாலும், 50 லட்சத்து க்கும்

அதிகமான வர்கள் இதை  டவுன்லோடு செய்து   பயன்படுத்து கின்றனர்.

இந்த ஆப்ஸை டவுன்லோடு செய்ய: https://play.google.com/

ஸ்வைப் கீபோர்டு:

முன்பு எஸ்எம்எஸ் அனுப்ப பட்டன்கள் உள்ள கீபோர்டு களைப் பயன்படுத்தி வந்தோம். 

அடுத்து, ஸ்மார்ட் போன் ஸ்கிரீனில் தொடு திரையைப் பயன்படுத்தி டைப் செய்தோம்.

அதற்கடுத்து டிக்‌ஷனரி ஆப்ஷன் மூலம் வார்த்தை களைத் தேர்வு செய்தோம்.
காய்கறி, பழங்களை விட அதிக சத்து உள்ள பாப்கார்ன் !
தற்போது கீபோர்டில் நாம் டைப் செய்ய வேண்டிய வார்த்தையை அந்த எழுத்து க்களில்

வைத்து ஸ்வைப் செய்தாலே போதும் அந்த வார்த்தை டைப் ஆகி விடும் .

ஆங்கிலம் மற்றும் குறிப்பிட்ட சில மொழி களிலும் வார்த்தை களை அடையாளம் காணும்

இந்த ஆப்ஸ் இன்னும் சில மொழி களுக்கும் அப்டேட் செய்யப்பட உள்ளது.

கூகுள் ப்ளே ஸ்டோரில் 60 ரூபாய்க்கு கிடைக்கும் இந்த ஆப்ஸ் 5-க்கு 4.2 ரேட்டிங்களைப் பெற்றுள்ளது.

இந்த ஆப்ஸை டவுன்லோடு செய்ய: https://play.google.com/

கூகுள்அனலிடிக்ஸ்:

நாம் செய்யும் வேலைகள் சரியான வேகத்தில் உள்ளதா, அந்த வேலையை இதே வேகத்தில் சென்றால்,

நம் டார்கெட்டை முடிக்க முடியுமா என்பதை அனலைஸ் செய்து, எக்ஸ்எல்

மற்றும் பிடிஎஃப் ஃபைல்களாக வழங்குகிறது கூகுளின் அனலிடிக்ஸ் ஆப்ஸ்.

உங்கள் அலுவலக இணைய தளங்களை இதனுடன் இணைத்துக் கொள்வதன் மூலம் எத்தனை பேர் அதனைப் பார்வையிட்டு உள்ளனர்,

அதில் குறிப்பிட்ட ஒரு பிரிவை எத்தனை பேர் பார்த்துள்ளனர் என்பதையும் சொல்கிறது

இந்த ஆப்ஸ். ப்ளே ஸ்டோரில் இலவச மாகக் கிடைக்கும் இந்த ஆப்ஸ் 5-க்கு 4.2 ரேட்டிங்கைப் பெற்றுள்ளது. 

இந்த ஆப்ஸை டவுன்லோடு செய்ய: https://play.google.com/

வுண்டர்லிஸ்ட்:  

நாம் செய்யும் வேலைகள் சிலவற்றை நாம் மறந்து விடுவோம்.சில சமயம் வேலை களைத் தாண்டி

இன்று உறவினர் ஒருவருக்குப் பிறந்த நாள், ஒரு முக்கியமான நபரை வியாபார ரீதியாகச் சந்திக்க வேண்டும் என்று நினைத்து இருப்போம்.

இந்தப் பிரச்னையைத் தீர்க்கத் தான் வுண்டர்லிஸ்ட் ஆப்ஸ் உதவுகிறது. நமது தினசரி வேலைகள்,

சந்திக்க வேண்டிய நபர்கள் மற்றும் மறக்கக் கூடாத தினங்களைப் பதிவு செய்து விட்டால்,

சரியாக நமக்கு நினைவு படுத்தி நமது வேலைகளை மறக்காமல் செய்ய இந்த ஆப்ஸ் உதவுகிறது.
கூகுள் ப்ளே ஸ்டோரில் இலவசமாகக் கிடைக்கும் இந்த ஆப்ஸை இதுவரை 50 லட்சம் பேர் டவுன்லோடு செய்துள்ளனர்.

5-க்கு 4.4 ரேட்டிங்கையும் இந்த ஆப்ஸ் பெற்றுள்ளது.

இந்த ஆப்ஸை டவுன்லோடு செய்ய: https://play.google.com/store

மைக்ரோசாஃப்ட் ஆபீஸ் மொபைல்:

நாம் தயாரிக்கும் வேர்டு டாக்குமென்ட்டு கள், பவர் பாயின்ட் ஸ்லைடுகள், எக்ஸ்எல் படிவங்கள் ஆகிய வற்றை

மொபைல் மூலமாகவே தயாரித்து, நீங்கள் அனுப்ப நினைக்கும் நபருக்கு மெயில் மூலமாக அனுப்ப முடியும்.

நாம் கணினி யில் செய்யும் அனைத்து ஆபீஸ் வேலை களையுமே இதில் செய்ய முடியும்.
கறி லக்ஸா ரெசிபி !
இது ப்ளே ஸ்டோரில் இலவச மாகக் கிடைக்கிறது. 5-க்கு 4 ரேட்டிங்கை இந்த ஆப்ஸ் பெற்றுள்ளது.

இந்த ஆப்ஸை டவுன்லோடு செய்ய: https://play.google.com/store/

இன் 5:

பிஸியான வேலை களுக்கு நடுவே ரிலாக்ஸ் செய்ய நினைப் பவர்கள் பல்வேறு 

சமூக வலை தளங்களு க்குள் சென்று அங்கேயே மணிக் கணக்கில் தங்கி விடுகிறார்கள்.

இதனால் அலுவலக வேலை மட்டுமல்ல, தனிப்பட்ட வேலைகள் கூட பாதிப் படையும்.

இதைத் தடுக்கிற வேலையை செய்வது தான் இந்த ஆப்ஸ்.

இந்த ஆப்ஸை டவுன்லோடு செய்து விட்டால், எந்த சமூக வலை தளத்திலும்

சரியாக ஐந்து நிமிடங் களுக்கு மேல் உங்களை இருக்க அனு மதிக்காது.

காரணம், ஐந்து நிமிடங் களுக்குப் பிறகு நீங்கள் பார்க்கும் சமூக வலை தளத்தை

உங்கள் கம்ப்யூட்டர் திரையி லிருந்து இந்த ஆப்ஸ் காணாமல் அடித்து விடும்.
இந்த ஆப்ஸ் கூகுள் ப்ளே ஸ்டோரில் இலவச மாகக் கிடைக்கிறது. 5-க்கு 4.3 ரேட்டிங்கைப் பெற்றுள்ளது.

இந்த ஆப்ஸை டவுன்லோடு செய்ய: https://play.google.com/store/

ட்ராப் பாக்ஸ்:

செல்போனில் டவுன்லோடு செய்யும் புகைப்படம், வீடியோக் களை மெமரி கார்டுகளில் இடம் இல்லை என அழித்து விடுவோம்.

அல்லது இ-மெயில் களில் இருந்து டவுன்லோடு செய்த ஃபைல்களில் சிலவற்றை கூட மறந்து போய் நீக்கி் விடுவோம்.

அதனைச் சேமித்து வைக்கத் தான் இந்த ட்ராப் பாக்ஸ் ஆப்ஸ் உதவுகிறது.

அது மட்டுமின்றி, இதனை மற்றவர் களோடு பகிரவும், டிராப் பாக்ஸிலேயே மாற்றி எடிட் செய்யவும் இந்த ஆப்ஸ் உதவுகிறது.

இந்த ஆப்ஸ் ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.5 ரேட்டிங்கைப் பெற்றுள்ளது.

இதன் அளவு நாம் பயன் படுத்தும் போனை பொறுத்து மாறுபடும்.

இந்த ஆப்ஸை டவுன்லோடு செய்ய: https://play.google.com/store
க்ளீன் மாஸ்டர்:

நமது செல்போனில் நாம் சேமிக்கா மலேயே நிறைய பகுதி ஆக்கிர மிக்கப்பட்டி ருக்கும் அதனை ‘cache’ மெமரி என்பார்கள்.

இது குறிப்பிட்ட அளவுக்கு மேல் சேர்ந்தால், நமது செல்போனின் வேகம் குறையும். அதனைச் சரிசெய்ய இந்த ஆப்ஸ் உதவுகிறது.

டெம்ப்ரவரி ஃபைல்களை நீக்கி, நீண்ட நாட்களாகப் பயன் படுத்தப் படாமல் இருக்கும் ஃபைல் களை அறிந்து அதனை நீக்க  பரிந்துரைக்கும்.

ப்ளே ஸ்டோர் ரேட்டிங் 5-க்கு 4.7 பெற்றுள்ளது.

இலவசமாகக் கிடைக்கும் இந்த ஆப்ஸை இது வரை 1 கோடிக்கும் அதிகமானோர் டவுன்லோடு செய்துள்ளனர்.

இந்த ஆப்ஸை டவுன்லோடு செய்ய: https://play.google.com/store/

அச்சிவ் (Achive) புரொடக்டிவிட்டி டைமர்:

ஒருநாளில் நீங்கள் செய்ய வேண்டிய வேலை களுக்கு எவ்வளவு நேரம் ஒதுக்க வேண்டும் என்பதில் தொடங்கி,

ஒரு மிகப் பெரிய புராஜெக்ட் முடிய எத்தனை நாட்கள் ஆகும் என்பது வரை கச்சிதமாக கணக்கிட்டு,
திமிங்கலத்தின் வயிற்றிலிருந்து மீண்ட மனிதர் !
அந்த வேலையைச் செய்து முடிக்க இந்த ஆப்ஸ் மிகவும் உதவியாக இருக்கும்.

இந்த ஆப்ஸில் ஒரு வேலை முடிய எவ்வளவு நேரம் ஆகும் என்பதை பதிந்து விட்டால் போதும்.
அந்த வேலையைச் செய்து முடிக்க  இன்னும் எத்தனை மணி நேரம் மீதமிருக் கிறது,

எவ்வளவு வேகத்தில் செயல் பட்டால் இலக்கை அடையலாம் என்ற தகவல் களை இந்த ஆப்ஸ் துல்லிய மாகத் தந்து விடும்.

இடையில் ஏற்படும் மாற்றங் களுக்கு ஏற்ப டாஸ்கு களை மாற்றி யமைத்துக் கொள்ளும் வசதியும் இந்த ஆப்ஸில் உள்ளது.

இந்த ஆப்ஸின் மூலம் நம் வேலை செய்யும் திறன் எந்த அளவுக்கு இருக்கும் கணிக்க மிகவும் உதவியாக இருக்கும்.

கூகுள் ப்ளே ஸ்டோரில் இலவசமாக கிடைக்கும் இந்த ஆப்ஸ் 5-க்கு 4.1 ரேட்டிங்கை பெற்றுள்ளது.

இந்த ஆப்ஸை டவுன்லோடு செய்ய: https://play.google.com/store/

ச.ஸ்ரீராம்
ஸ்மார்ட்டாக 10 ஆப்ஸ்கள் ! ஸ்மார்ட்டாக 10 ஆப்ஸ்கள் ! Reviewed by Fakrudeen Ali Ahamed on December 21, 2018 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 EThanthis All rights reserved
close