ஜியோவ குறி வைக்கும் Airtel-ன் திட்டம் தான் என்ன? - EThanthis

Recent Posts


ஜியோவ குறி வைக்கும் Airtel-ன் திட்டம் தான் என்ன?

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
செப்டம்பர் 2016, Airtel-ன் காலண்டரில் குறித்து வைக்க வேண்டிய நாள். காரணம் ஜியோவின் பிறந்த நாள். 
ஏர்டெல்லே எதிர் பார்க்காத வேகத்தில் ஏர்டெல்லின் சந்தையை காலி செய்து, அசுர வளர்ச்சி கண்டு வருகிறது ஜியோ.

செல் போன்
இந்தியாவில் 119.14 கோடி தொலை பேசி இணைப்புகள் இருக்கின்றன. அதில் 116.92 கோடி இணைப்புகள் செல்போன்கள். 

இதில் 37.20% இணைப்பு களை வோடாஃபோன் ஐடியா நிறுவனமும், 29.38% இணைப்பு களை 

ஏர்டெலும், 21.57% இணைப்புகளை ரிலையன்ஸ் ஜியோவும் வழங்கு கின்றன.

லேண்ட் லைன்

மொத்த 2.22 கோடி லேண்ட் லைன் ரக இணைப்பு களில், எர்ர்டெல் 18.07% இணைப்பு களையும், வொடாஃபோன் 1.16% இணைப்பு களையும் வழங்குகிறது.

பிராட்பேண்ட் சேவை

இந்தியாவின் 48.17 கோடி வாடிக்கை யாளர்கள் இருக்கிறார்கள். அதில் 52.37% இணைப்பு களை ரிலையன்ஸ் ஜியோ வைத்தி ருக்கிறது. 
20.61% இணைப்பு களை பார்தி ஏர்டெல்லும், 20.70% இணைப்பு களை வொடாஃபோன் ஐடியா வைத்திரு க்கிறார்கள். 

இந்த மூன்று விஷயங் களுக்குத் தான் சாகாத குறையாக அடித்துக் கொள்கி றார்கள் இந்திய டெலிகாம் நிறுவனங்கள்.

பிரச்னை

இப்போது பிரச்னை எத்தனை வாடிக்கை யாளர்களை வைத்திருக் கிறார்கள் அல்லது இணைப்பு களை வழங்கு கிறார்கள் என்பதில் இல்லை. 
இருக்கும் வாடிக்கை யாளர்கள் வைத்து ஒருங்காக சம்பாதிக்க முடிகிறதா என்பது தான் கேள்வி...? 

அதற்கு விடைய ளிக்கும் விதமாக ஏர்டெல் ஒரு புதிய திட்டத்துடன் களம் இறங்கி இருக்கிறது.

ஒரு நிறுவனம்

வொடாஃபோன் ஐடியா நிறுவனம் இணைந்தது போல, இப்போது வொடாஃபோன் ஐடியா என்கிற நிறுவன மும், 
பார்தி ஏர்டெல்லும் இணைந்து தங்கள் ஃபைபர் நெட்களை பயன் படுத்திக் கொள்ள ஒரு தனி நிறுவனத்தைத் தொடங்கி இருக்கிறார்கள். 

இது தான் ஏர்டெல்லின் பெரிய திட்டத்தின் தொடக்கம்.

சரிந்த லாபம்

ஜியோவின் வரவால் அனைத்து நிறுவனங் களின் வருவாயே பெரிய அளவில் சரிந்தது. 
வருவாயே போதுமான அளவு இல்லாத போது லாபத்தைப் பற்றி அதிகம் பேச வேண்டாம். 

எல்லாம் செலவுகள் போக கையில் ஒன்று நிற்காமல் நஷ்டத்தை பதிவு செய்தார்கள்.

கணக்கு

மார்ச் 2016-ல் ஜியோ வருவதற்கு முன், ஏர்டெல் நிறுவன த்தின் வருவாய் 60,473.20 கோடி ரூபாய், 

நிகர லாபம் மட்டும் 7,780.30 கோடி ரூபாய். அடுத்த ஆண்டு அதாவது ஜியோ வந்து ஏழே மாதத்தில் ஏர்டெல்லுக்கு நஷ்டம் தான் ம்ஞ்சியது. 

மார்ச் 2017-ல் ஏர்டெல் நிறுவனத்தின் வருவாய் 62,460.60 கோடி ரூபாய், நிகர லாபம் மட்டும் -9,925.60 கோடி ரூபாய். 

அதாவது 9000 கோடி ரூபாய் நஷ்டம். மார்ச் 2018-ல் ஏர்டெல்லின் வருவாய் 53,898.60 கோடி ரூபாய், நிகர லாபம் 79.20 கோடி ரூபாய்.

நிதி பற்றாக்குறை

ஏர்டெல் நிறுவனத்தின் துனை நிறுவனமான பார்தி இன்ஃப்ராடெல் நிறுவனத்தின் பங்குகளை 

விற்று வரும் பணத்தின் தான் அதன் ஆப்பிரிக்க பிசினஸ்க ளை நடத்தி வருகிறதௌ. 
தற்போது ஆப்பிரிக்க பங்குச் சந்தைகளில் ஐபிஓ சென்று பணம் திரட்ட இருப்பதும் கூடுதல் தகவல். 

அதோடு ரூ 15,000 கோடியை ரைட்ஸ் இஸ்ஸூ (Rights Issue) முறையில் ஏர்டெல் பங்குகளை விற்று திரட்ட இருக்கிறது. 

இந்த ஒரு பத்தியில் ஏர்டெல் எப்படி காசுக்கு தவிக்கிறது என்பது புரிந்திருக்கும்.
விலை ஏற்றம்

சமீபத்தில் ஏர்டெல் தான் இன்கமிங் கால்களுக்கு கட்டனம் வசூலிக்க இருப்பதாக அறிவித்து செயலிலும் இறங்கியது. 

ஏர்டெல்லின் 99 ரூபாய் திட்டம் தற்போது 120 ரூபாயாக உயர்த்தப் பட்டிருக்கிறது. 

அத்தனை பெரிய எதிர்ப்பு ஒன்றும் இல்லை. இப்படி கொஞ்சம் கொஞ்ச மாக ஆறு மாதங் களுக்குள் 

மூன்று முறை விலை உயர்த்த இருப்பதையும் சொல்லி இருக்கிறார்கள்.
ஜியோவ குறி வைக்கும் Airtel-ன் திட்டம் தான் என்ன? ஜியோவ குறி வைக்கும் Airtel-ன் திட்டம் தான் என்ன? Reviewed by Fakrudeen Ali Ahamed on December 09, 2018 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 EThanthis All rights reserved
close