பேஸ்புக் பதிவால் ஐந்து பேரின் பாஸ்போர்ட்டை ரத்து செய்யும் மத்திய அரசு ! - EThanthis

Recent Posts


பேஸ்புக் பதிவால் ஐந்து பேரின் பாஸ்போர்ட்டை ரத்து செய்யும் மத்திய அரசு !

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
காஷ்மீர் விவகாரம் குறித்து மத்திய அரசின் நடவடிக்கை களை விமர்சித்து செய்து பதிவிட்டு வரும் வெளிநாட்டில் வசிக்கும் ஐந்து காஷ்மீரிக ளின் பாஸ்போர்டை ரத்து செய்யும் முடிவில் மத்திய அரசு உள்ளது என்று ஆங்கில ஊடகமான ஹஃப்பிங்ஸ்டன் போஸ்ட்டில் (huffingtonpost) செய்தி வெளியாகி யுள்ளது.
ஐந்து பேரின் பாஸ்போர்ட்டை ரத்து

அந்தச் செய்தியில், ஜம்மு காஷ்மீர் மாநில காவல்துறை அதிகாரி ஆகஸ்ட் 29-ம் தேதி பதிவிட்டுள்ள ட்விட்டில், ‘ஐந்து பேரின் பெயர்களும் அவர்களுடைய ஃபேஸ்புக் புரோபைல் போட்டோவையும் வெளி யிட்டிருந்தார்.
அந்த ஐந்து பேரும் போலிச் செய்திகளையும், அமைதியை சீர் குலைக்கும் வகையிலும் செய்தி பரப்புகின்றனர் என்று காவல்துறை குறிப்பிட்டிருந்தது என்று செய்தியில் குறிப்பிடப் பட்டுள்ளது.

மேலும், பூஞ்ச் பகுதியைச் சேர்ந்த இளைஞர் தற்போது குவைத்தில் பணியாற்றி வருகிறார்.

அவர், காஷ்மீர் விவகாரம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை பதிவிடுகிறார் என்று அவர் மீது பல்வேறு பிரிவுகளின் மீது வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது.

அதே போல, ஆகஸ்ட் 20-ம் தேதி ஸ்ரீநகரைச் சேர்ந்த இயற்பிய லாளரின் ஃபேஸ்புக் பதிவில், காஷ்மீரியை இந்திய ராணுவம் துன்புறுத்தியது என்று பதிவிட்டிருந்தார்.

அவர், தற்போது ஐரோப்பிய ஒன்றியத்தில் கல்வி பயின்று வருகிறார். அவருடைய பதிவை இந்திய ராணுவம் மறுத்திருந்தது.
இந்த விவகாரம் குறித்து ஹஃப்பிங்ஸ்டன் போஸ்ட்டுக்கு பேட்டியளித்த ராஜோரி மாவட்ட சிறப்பு காவல் கண்காணிப்பாளர், ‘அந்த ஐந்து பேரின் பதிவு இருவேறு மதத்தைச் சேர்ந்தவர் களுக்கு இடையே வன்முறையைத் தூண்டும் வகையில் உள்ளது.

இந்திய ஒருமைப் பாட்டுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் உள்ளது. அவர்கள் இந்திய அரசுக்கு எதிராக ஜிகாதிகளாக மாறுவதற்கு தயார் என்று கூறியுள்ளனர்.

அவர்களை இந்தியாவு க்கு வரவழைப்ப தற்காக பாஸ்போர்டை ரத்து செய்யும் பணியும் கட்டாயம் தொடங்கும்’ என்று தெரிவித்தார்.

இது குறித்து தெரிவித்த இயற்பிய லாளர், ‘அவர்கள் தற்போது பாஸ்போர்ட்டை ரத்து செய்ய வுள்ளனர். என்ன செய்யவேண்டும் என்று எனக்குத் தெரிய வில்லை.
நான், ஃபேஸ்புக் பதிவை திரும்பப் பெற வேண்டுமா? உண்மையில் அந்தப் பதிவை திரும்பப் பெற நான் விரும்ப வில்லை. எனக்குத் தெரியும் நான் பொய் சொல்ல வில்லை’ என்று தெரிவித் துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து ஹஃப்பிங்ஸ்டன் போஸ்ட்டுக்கு கருத்து தெரிவித் துள்ள மூத்த வழக்கறிஞர்கள், ‘சர்ச்சைக்குரிய ஃபேஸ்புக் பதிவுக்காக வெளி நாடுகளில் வசிக்கும் இந்தியர்களின் பாஸ்போர்டை ரத்து செய்யவது முன்னெப்போதும் இல்லாத ஒரு நடைமுறை’ என்று தெரிவித்ததாக செய்தியில் குறிப்பிடப் பட்டுள்ளது.
பேஸ்புக் பதிவால் ஐந்து பேரின் பாஸ்போர்ட்டை ரத்து செய்யும் மத்திய அரசு ! பேஸ்புக் பதிவால் ஐந்து பேரின் பாஸ்போர்ட்டை ரத்து செய்யும் மத்திய அரசு ! Reviewed by Fakrudeen Ali Ahamed on September 07, 2019 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 EThanthis All rights reserved
close