வாட்ஸ்அப் வீடியோ காலில் 55 ஆயிரம் ரூபாயை இழந்த இளைஞர் ! - EThanthis

Recent Posts


வாட்ஸ்அப் வீடியோ காலில் 55 ஆயிரம் ரூபாயை இழந்த இளைஞர் !

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
வாட்சப் செயலியில் தனக்குத் தெரியாத எண்ணிலிருந்து வந்த வீடியோ கால் அழைப்பை எடுத்த இளைஞரை மிரட்டி ஒரு கும்பல் ரூ.55,000-ஐ பிடுங்கி யுள்ளதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.
வாட்ஸ்அப் வீடியோ காலில் 55 ஆயிரம் ரூபாயை இழந்த இளைஞர் !
இது குறித்து பாதிக்கப்பட்ட இளைஞர், வாட்சப் வீடியோ காலில் அழைத்தவர்கள் தன்னை மிரட்டி பணம் கேட்டதாகவும் 

சமூக விலகலால் அதிகரிக்கும் இதய நோய்க்கான அபாயம் தெரியுமா?

இல்லை யென்றால் தனது புகைப்படத்தை வைத்து மார்ஃபிங் செய்து சமூக வலைத் தளங்களில் பதிவேற்றி விடுவதாகவும் மிரட்டியதாகக் தெரிவித்திருந்தார்.
 
அந்த இளைஞருக்கு கடந்த சில நாள்களுக்கு முன்பு, தெரியாத எண்ணிலிருந்து வாட்சப் அழைப்பு ஒன்று வந்தது.
 
அந்த அழைப்பை எடுத்த போது அதில் யாரும் இல்லை, எந்தக் குரலும் வரவில்லை. இதனால் அழைப்பை துண்டித்திருக்கிறார். 
 
ஒரு சில நிமிடங்களுக்கு பிறகு அவரின் மார்ஃபிங் செய்யப்பட்ட விடியோ ஒன்று செல்பேசிக்கு வந்தது.
 
உடனடியாக பணம் அனுப்பவில்லை யென்றால், விடியோவை இளைஞரின் செல்பேசியில் இருக்கும் எண்களுக்கு அனுப்பி விடுவதாக மிரட்டல் வந்துள்ளது.
 
இப்படி மிரட்டியே 5,000 ரூபாய் பிறகு 30,000 ரூபாய் மூன்றாவது முறையாக 20,000 ரூபாய் என பிடுங்கி யுள்ளனர் எனத் தெரிவித்தார் அந்த இளைஞர். 
மிரட்டல் தொடர்ந்ததால், பிறகு அவர் காவல் நிலையத்துக்குச் சென்று புகார் அளித்துள்ளார்.

கால் வெடிப்பால் அவஸ்தையா? கவலைய விடுங்க ! #FootCracks

இது போன்று ஏராளமான மோசடிகள் தொடர்சியாக நடப்பதாக காவல் துறையினர் பல முறை எச்சரிக்கை விடுத்தும், 
 
தொடர்ந்து மோசடி கும்பல்களிடம் பலரும் சிக்குவது குறித்து காவல் துறையினரும் கவலை தெரிவித்துள்ளதாக தினமணியின் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப் வீடியோ காலில் 55 ஆயிரம் ரூபாயை இழந்த இளைஞர் ! வாட்ஸ்அப் வீடியோ காலில் 55 ஆயிரம் ரூபாயை இழந்த இளைஞர் ! Reviewed by Fakrudeen Ali Ahamed on February 16, 2023 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 EThanthis All rights reserved
close