‘ஸ்கைப்’ குரல் மொழி பெயர்ப்புச் சேவை அறிமுகப்படுத்தப் பட்டது ! - EThanthis

Recent Posts


‘ஸ்கைப்’ குரல் மொழி பெயர்ப்புச் சேவை அறிமுகப்படுத்தப் பட்டது !

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட், கடந்த 2003-ம் ஆண்டு தொலைத் தொடர்பு பயன்பாட்டு மென்பொருளான ஸ்கைப்-ஐ முதன் முதலாக அறிமுகப்படுத்தியது. 
ஸ்கைப்
குரல் அழைப்புகளை ஏற்படுத்துவதற்கும், காணொளி மூலம் கலந்துரையாடவும் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மென்பொருளில், தற்போது மிக முக்கிய மேம்பாடு ஒன்றை மைக்ரோசாப்ட் ஏற்படுத்தி உள்ளது.

அந்த மேம்பாடு என்னவென்றால், பயனர்களுக்குத் தேவையான குரல் மொழி பெயர்ப்புப் பணிகளை ஸ்கைப்பே கவனித்துக் கொள்ளும் என்பது தான். கடந்த ஆண்டே பரிசோதனை முயற்சியாக இந்த மேம்பாடு வெளியானது. தற்போது அதிகாரப் பூர்வமாக வெளியாகி உள்ளது.
URI படம் டவுண்லோட் செய்தவர்களுக்குக் காத்திருந்த அதிர்ச்சி !
இது தொடர்பாக ஸ்கைப் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஸ்கைப் பயன்படுத்தும் அனைத்து விண்டோஸ் பயனர்களுக்கும் குரல் மொழி பெயர்ப்பு மேம்பாடு அறிமுகமாகி உள்ளது.

மேண்டரின், ஆங்கிலம், பிரஞ்சு, ஜெர்மன், இத்தாலியன், போர்ச்சுகீஸ், ஸ்பானிஷ் என 7 மொழிகளில் தற்போது பயனர்கள் குரல் மொழி பெயர்ப்பை மேற்கொள்ளலாம்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
‘ஸ்கைப்’ குரல் மொழி பெயர்ப்புச் சேவை அறிமுகப்படுத்தப் பட்டது ! ‘ஸ்கைப்’ குரல் மொழி பெயர்ப்புச் சேவை அறிமுகப்படுத்தப் பட்டது ! Reviewed by Fakrudeen Ali Ahamed on January 21, 2019 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 EThanthis All rights reserved
close