குட் மார்னிங் மெசெஜை நிறுத்தும் வாட்ஸ்அப்?
புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..
லைக் பண்ணுங்க... "
போலிச் செய்திகள் மற்றும் வதந்திகள் பரவாமல் தடுக்க மாதம் சுமார் 20 லட்சம் கணக்குகளை டெலீட் செய்து வருவதாகத் தெரிவித்துள்ளது வாட்ஸ்அப். தேர்தல் நெருங்கும் இந்த நேரத்தில் ஃபேஸ் புக்கிற்குச் சொந்த மான இந்த நிறுவனத்திற்கு ஏற்கெனவே இந்த விஷயத்தில் இந்திய அரசு அழுத்தம் தந்து கொண்டிருந்தது.
இதைத் தொடர்ந்து தான் மொத்தம் 5 பேருக்குத்தான் ஒரு மெசேஜை ஃபார்வர்டு செய்ய முடியும் என்ற கட்டுப்பாடு இந்தியாவில் விதிக்கப்பட்டது. இப்போது அது உலகம் முழுவதும் செயல்படுத்தப் பட்டுள்ளது.
தாங்கள் ஒரு தனிநபர் தொலைத் தொடர்பு சேவை தானே தவிர மொத்தமாகப் பலரைச் சென்றடைய உதவும் தளம் இல்லை என்பதில் தெளிவாக இருக்கிறது வாட்ஸ்அப், அதைச் செயலிலும் காட்ட விரும்புகிறது.
தாங்கள் ஒரு தனிநபர் தொலைத் தொடர்பு சேவை தானே தவிர மொத்தமாகப் பலரைச் சென்றடைய உதவும் தளம் இல்லை என்பதில் தெளிவாக இருக்கிறது வாட்ஸ்அப், அதைச் செயலிலும் காட்ட விரும்புகிறது.
இதில் ஒரு கட்டமாக சந்தேகத்திற்குரிய கணக்குகளை ரிப்போர்ட் செய்யுமாறு பயனாளர்களை ஊக்குவிப்பதன் மூலம் பல மோசடி கணக்குகளை நீக்க முடியும் என நம்புகிறது வாட்ஸ்அப்.
இருப்பினும் தற்போது நீக்கப்பட்டு வரும் கணக்குகளில் 95 சதவிகிதம் ``abnormal behaviour" (இயல்பற்ற செயல்கள்) கொண்டிருப் பதால் தான் நீக்கப்பட்டிருக் கிறதாம். எந்த ஒரு நடவடிக்கையும் இல்லாத `inactive' கணக்குகளும் இதில் சேரும்.
இதைத் தொடர்ந்து பல்க் மெசேஜிங்கிற்கும் கட்டுப் பாடுகள் விதிக்கப் படுமாம். அதனால் அதிகமாக `குட் மார்னிங்' மெசேஜ் அனுப்பினால் கூட உங்கள் கணக்கு நீக்கப்பட வாய்ப்புகள் உண்டு. ஆனால் இன்னும் இதைப் பற்றிய தெளிவான வரைமுறைகள் என்னவென்று தெளிவாகத் தெரிவிக்கப் படவில்லை.
Automated மெசேஜ்கள் அனுப்பும் கணக்குகளில் மேலே `டைப்பிங்' என்று வராது. போலிக் கணக்குகள் தொடங்கிய கொஞ்ச நேரத்திலேயே அதிக அளவில் பலருக்கு மெசேஜ் அனுப்பும். இதே போன்று சந்தேகத்திற்குரிய நடவடிக்கை களைக் கண்டறிந்தும் கணக்குகளை நீக்கி வருகிறது வாட்ஸ்அப்.
கடந்த தேர்தல்களில் சில முக்கியக் கட்சிகள் ஃபார்வர்ட்களுக்கு பதில் வாட்ஸ்அப் குரூப்கள் அமைத்து பிரசாரம் மேற்கொண்டதால் கட்சிகளுடன் பேசி வரைமுறை களை நிலை நாட்டவும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது
வாட்ஸ்அப். இது போக விளம்பரங்கள் மூலம் மக்களிடம் இதுதொடர்பான விழிப்புஉணர்வு ஏற்படுத்தவும் முற்பட்டுள்ளது வாட்ஸ்அப். அதில் முன் வைக்கப்படும் முக்கிய வாக்கியம் 'spread joy, not rumours'.