கூகுள் அறிமுகப்படுத்திய ‘Dmail’ ! - EThanthis

Recent Posts


கூகுள் அறிமுகப்படுத்திய ‘Dmail’ !

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
பல்வேறு தொழில்நுட்ப சாதனை களுக்கு சாட்சியாக விளங்கும் இருபத்தொன்றாம் நூற்றாண்டில்

தகவல் தொழிநுட்பத் துறை நாளொரு மாற்றமும், பொழுதொரு வளர்ச்சியு மாக

இறக்கை கட்டி பறந்து கொண்டிருப்பது நாம் அனைவரும் நன்கறிந்த ஒன்றாகும்.

அதிலும், குறிப்பாக இணையதள தேடுப் பொறியில் (சர்ச் என்ஜின்) ஜாம்பவா னாக விளங்கி வரும் கூகுள் நிறுவனம்,

கால மாற்றத்துக்கு தக்கவாறு தனது சேவைகளை மேம்படுத்தி வருவதில் தலைமை இடத்தில் உள்ளது.

‘ஜி-மெயில்’ எனப்படும் இணைய வழி கடித பரிமாற்ற சேவையை பல ஆண்டு களுக்கு முன்னர் அறிமுகப் படுத்திய கூகுள்,

சமீபத்தில், அனுப்பப்பட்ட மெயில் களை பெறுபவரின் பார்வைக்கு போகும் முன்னர்

திரும்பப் பெறும் (undo send) பொத்தானை அறிமுகப் படுத்தியது.

இந்த வசதி நாம் மெயிலை தட்டிவிட்ட சுமார் 30 வினாடிகள் வரை கிடைக்கும்.

இதன் மூலம், திடீர் மனக் கசப்பினால் பரிமாறப்பட்ட சில செய்திகளை அனுப்பியவரே பின்னர் நீக்கி விடும் வாய்ப்பு கிடைத்தது.

தற்போது, ஒருபடி மேலே சென்று ‘ஆயுள் நிர்ண யிக்கப்பட்ட மெயில்’ சேவையை ஜிமெயில் அறிமுகப் படுத்தி யுள்ளது.

‘Dmail’ என பெயரிடப் பட்டுள்ள இந்த புதிய சேவை மூலம், நாம் யாருக்கு ஒரு முக்கிய தகவலை அனுப்புகிறோமோ..,

அவரது கம்ப்யூட்டரில் நாம் இங்கிருந்து குறிப்பிடும் நேரம் வரை மட்டும் இந்த ‘டிமெயில்’ தென்படும்.

உதாரணமாக 10 நிமிடம், 30 நிமிடம், ஒருமணி நேரம், 12 மணி நேரம், 2 நாள், ஒரு வாரம்,

ஒரு மாதம், என ‘டைமிங்’ செட்டிங் மூலம் ரகசிய தகவல்களை இந்த சேவை மூலம் நாம் பரிமாறிக் கொள்ளலாம்.

நாம் குறிப்பிடும் நேர நிர்ணயத்துக்கு பின்னர் இந்த மெயிலில் உள்ள தகவல்கள் தானாகவே மாயமாகி விடும்.

முக்கிய வங்கிக் கணக்குகளின் கடவுச்சொற்கள் (பாஸ்வேர்ட்) போன்ற தலையாய ரகசியங் களை

இவ்வகையில் ‘டிமெயில்’ javascript:void(0); தகவல்க ளாக அனுப்பி வைக்கலாம் என்பது, குறிப்பிடத் தக்கது.

மேலும், இது போன்ற மெயில் களை இன்னொரு நபருடன் பரிமாறிக் கொள்ளும் ‘பார்வர்ட்’ வசதிக்கு 

 தடை விதிப்பது தொடர்பா கவும் கூகுள் நிறுவன தொழில்நுட்ப வல்லுனர்கள் ஆலோசித்து வருகின்றனர்.

இதுபோன்ற ‘டிமெயில்’ தகவல்களை நீங்கள் யாரிடம் இருந்தும்,

எந்த இணையம் வழியாகவும் உங்களது ஜிமெயில் இன்பாக்ஸ் வழியாக பெற முடியும்.

ஆனால், மற்றவர் களுக்கு நீங்கள் ‘டிமெயில்’ அனுப்ப வேண்டு மானால், 

கூகுள் குரோம் அல்லது ஜிமெயில் வழியாக மட்டுமே பரிமாறிக் கொள்ள முடியும்.
கூகுள் அறிமுகப்படுத்திய ‘Dmail’ ! கூகுள் அறிமுகப்படுத்திய ‘Dmail’ ! Reviewed by Fakrudeen Ali Ahamed on December 14, 2018 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 EThanthis All rights reserved
close