மொபைல் போதையிலிருந்து மீள்வது எப்படி? - EThanthis

Recent Posts


மொபைல் போதையிலிருந்து மீள்வது எப்படி?

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
நம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் அத்தியாவசிய மான பொருள்களில் ஒன்றாக ஸ்மார்ட்போன்கள் இடம் பிடிக்கத் தொடங்கி யிருக்கின்றன. பெரியவர்கள், சிறுவர்கள் என அவரவர் வயதுக்கு ஏற்ப மொபைல்களைப் பயன்படுத்து கிறார்கள். 
மொபைல் போதை

`அதீதமான மொபைல் பயன்பாட்டால் ஒருவருக்கு உடலளவிலும் மனதளவிலும் நிச்சயம் பாதிப்புகள் ஏற்படும்’ என்று பல்வேறு ஆய்வுகள் குறிப்பிட்டி ருக்கின்றன. கண் எரிச்சல், தலைவலி போன்ற

உடலளவில் உண்டாகும் பாதிப்பை நாம் எளிதில் உணர்ந்து கொள்கிறோம். ஆனால், மனதளவில் ஏற்படும் பாதிப்புகளை அவ்வளவு எளிதாக நாம் உணர்வ தில்லை. இந்தப் பிரச்னையை மருத்துவ ரீதியாகக் கையாளும் வழிகளை விளக்குகிறார் மனநல மருத்துவர் பூர்ண சந்திரிகா.
“அண்மைக் காலமாக இது போன்ற பாதிப்பை இளம் பருவத்தின ரிடையே அதிகமாகக் காண முடிகிறது. இதிலிருந்து வெளிவர முடிவு செய்து விட்டால், முதலில் மொபைலில் எவற்றை யெல்லாம் தேவை யில்லாமல் பயன்படுத்து கிறோம் என்பதைக் கண்டறிந்து அவற்றைத் தவிர்த்து விடுவது முக்கியமானது. மொபைல் பயன்படுத்தும் நேரத்தைப் படிப்படியாகக் குறைக்க முயலலாம்.

ஆரம்ப நிலையில், மருத்துவ ஆலோசனை எதுவுமின்றி சுயக்கட்டுப்பாடு மூலமாகவே இதிலிருந்து மீண்டு விட முடியும். தூங்கும் போதும் தேவை யில்லாத நேரத்திலும் மொபைலை ஆஃப் செய்து விடுவது நல்லது. இரவு உறங்கப் போவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னர் மொபைல் பயன்படுத்து வதைக் கட்டாயமாகத் தவிர்த்து விட வேண்டும்.

சில பெற்றோர், குழந்தைகள் செய்யும் சேட்டைகளைச் சமாளிப்பதற் காக ஸ்மார்ட் போனில் கேம்களையோ, அவர்கள் ரசிக்கும் படியான வீடியோக் களையோ ஆன் செய்து கையில் கொடுத்து விடுகிறார்கள். இது மிகவும் தவறானது. இதனால் அவர்களை அறியாமலேயே குழந்தைகளை மொபைலுக்கு அடிமையாக்கக் கூடும்.

எனவே, குழந்தைகளின் கையில் முடிந்தவரை மொபைலைக் கொடுக்காமல் தவிர்ப்பதே சிறந்தது. அப்படிப் பயன்படுத்தி னாலும் அவர்களைக் கண்காணிக்க வேண்டியது மிக அவசியம். மனதளவில் பாதிப்பு அதிகமானால், மனநல மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெற வேண்டியது அவசியம்.

பாதிப்பிலிருந்து விடுபடுவது எப்படி?

திரையில் தோன்றும் நோட்டிஃபிகேஷன்கள் நம் கவனத்தை மொபைல் பக்கம் திருப்பக்கூடும். எனவே, அவற்றை ஆஃப் செய்து விடுவது நல்லது. இரவில் தூங்கும்போது ‘Do Not Disturb’ வசதியைப் பயன்படுத்தலாம்.

ஆப்களும் உதவும்!

மொபைல் பயன்பாட்டைக் கண்காணிக்கவும், கட்டுப் படுத்தவும் நிறைய ஆப்கள் இருக்கின்றன. இவற்றின் மூலமாக மொபைலில் எவ்வளவு நேரத்தைச் செலவிடுகிறோம் என்பதைக் கண்டறிய முடியும். 
மொபைல் பாதிப்பிலிருந்து விடுபடுவது

மொபைலி லிருக்கும் அடிப்படை வசதிகளை மட்டும் பயன்படுத்த அனுமதித்து விட்டு மற்றவற்றை லாக் செய்யும் வசதிகளும் சில ஆப்களில் இருக்கின்றன. இந்த ஆப்களில் நேரத்தை செட் செய்து விட்டால், அந்த நேரத்தில் மற்ற ஆப்களைப் பயன்படுத்த முடியாமல் தடை செய்து விடும்.

தனிமையைத் தவிர்க்கலாம்!

நீண்ட நேரம் தனிமையில் அமர்ந்திருப்பது மொபைல் போனைப் பயன்படுத்தத் தூண்டக்கூடும். எனவே, முடிந்த வரை தனிமையைத் தவிர்க்கவும்.

அந்த 60 நிமிடங்கள்

ஒரு மனிதன் காலையில் எழுந்த பிறகான 60 நிமிடங்களும், இரவு தூங்குவதற்கு முன்பான 60 நிமிடங்களும் மிக முக்கியமானவை. காலைப் பொழுதின் முக்கியமான நிமிடங்கள் தாம் நம் அன்றைய நாளைத் தீர்மானிக்கின்றன, இரவில் நம் தூக்கத்தை நிர்ணயிக்கின்றன.
எனவே, அந்த நேரத்தில் மொபைல் பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம். காலையில் 60 நிமிடங்களை உடலுக்குப் புத்துணர் வூட்டவும், இரவில் மனதை அமைதிப் படுத்தவும் செலவழிக்கலாம்.

உங்களுக்கான நேரத்தை ஒதுக்குங்கள்!

`இந்த நேரத்தில் மொபைலைப் பயன்படுத்தக் கூடாது’ என்று முடிவெடுப்பதோடு, அதற்கான நேரத்தை ஒதுக்கவும் வேண்டும். அந்த நேரத்தில் `அவசரத் தேவையின்றி மொபைலைப் பயன்படுத்துவ தில்லை’ என்று முடிவெடுங்கள். குறிப்பிட்ட நேரத்தில் குடும்பத்தி னருடன் நேரத்தைச் செலவிடலாம்.

சோஷியல் மீடியா பயன்பாடு

மொபைலைப் பயன்படுத்தத் தூண்டுவதில் சோஷியல் மீடியாவுக்கு முக்கியப் பங்கிருக்கிறது. இது தவிர மொபைலில் இருக்கும் என்டர்டெயின்மென்ட் ஆப்களும் நம் கவனத்தைத் திசை திருப்பக்கூடும்.

`மொபைலை அதிகமாகப் பயன்படுத்து கிறோம்’ என்ற சந்தேகம் எழுந்தால், சோஷியல் மீடியா தொடர்பான ஆப்களை உடனடியாக அன் இன்ஸ்டால் செய்துவிட்டு அவற்றி லிருந்து விலகி விடுவது நல்லது.

பேஸிக் மாடல் பெஸ்ட்!
பேஸிக் மாடல் மொபைல்

மொபைல் பயன்பாட்டைக் குறைப்பதற் கான சிறந்த வழிகளில் ஒன்று, பேஸிக் மாடல் மொபைலுக்குத் திரும்புவது. நிரந்தரமாகச் சாத்திய மில்லை என்றாலும், சில நாள்களுக்காவது ஒரு மாறுதலுக்காக வசதிகள் குறைவாக உள்ள பேஸிக் மாடல் மொபைல் களைப் பயன்படுத்தலாம்.’’
மொபைல் அடிக்‌ஷன் பாதிப்பை எப்படிக் கண்டறியலாம்?

* மொபைல் போன் பார்வையி லிருந்து மறைந்து விட்டால் பதற்றமடைவது.

* மொபைலைப் பற்றி மற்றவர்கள் குறை கூறினால் கோபம் வருவது.

* அடிக்கடி தேவை யில்லாமல் மொபைலைக் கையில் எடுத்துப் பார்ப்பது.

* ஏதாவது செய்திகளைக் தேடிக்கொண்டே இருப்பது.

* மகிழ்ச்சியோ, துக்கமோ உடனே மொபைலைக் கையில் எடுப்பது.

* இரவில் அடிக்கடி மொபைலைக் கையில் எடுத்துப் பார்ப்பது.

* மொபைல் அடிக்கடி ரிங் ஆவதைப் போல உணர்வது.

* குடும்பத்தி னரிடமிருந்து மொபைலை மறைத்து வைக்க விரும்புவது.
மொபைல் போதையிலிருந்து மீள்வது எப்படி? மொபைல் போதையிலிருந்து மீள்வது எப்படி? Reviewed by Fakrudeen Ali Ahamed on June 25, 2019 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 EThanthis All rights reserved
close