ஈசியாக சர்ச் ஹிஸ்டரியை நீக்க கூகுளின் அதிரடி மாற்றம் ! - EThanthis

Recent Posts


ஈசியாக சர்ச் ஹிஸ்டரியை நீக்க கூகுளின் அதிரடி மாற்றம் !

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
பயன்பாட்டாளர்களின் தகவல் களைப் பாதுகாப்பதில் மெத்தனம் காட்டுகிறது கூகுள் எனத் தொடர்ந்து சர்ச்சைக்குப் பின் சர்ச்சை கடந்த மாதங்களில் வந்து கொண்டே இருக்கிறது. 
சர்ச் ஹிஸ்டரியை நீக்க
இதனால் கடும் நெருக்கடிக் குள்ளான கூகுள் இனி பயன் பாட்டாளர்களே தங்களது தகவல்கள் சம்பந்தப்பட்ட விஷயங் களைக் கண்காணிக்க

மற்றும் முறைப்படுத்த எளிதான வழிமுறை களைக் கொண்டுவர முடிவு செய்துள்ளது. 

இந்த புதிய மாற்றங்கள் முதலில் கூகுள் சர்ச்சில் இருந்து தொடங்குமாம்.

சர்ச் இந்த திட்டத்தின்படி பயன் பாட்டாளர்கள் எளிதாக தங்களது சர்ச் தொடர்பான தகவல்களைப் பார்க்கவோ, மாற்றவோ முடியும். 

மேலும் ப்ரைவசி கண்ட்ரோல் களையும், எப்படி கூகுள் நிறுவனம் இந்தத் தகவல்களைப் பயன்படுத்து கிறது என்பதையும் எளிதாக இனி பார்க்க முடியும். 

கூகுள் சர்ச் இந்த சர்ச் ஹிஸ்டரி பார்க்கும் மற்றும் மாற்றும் வசதிகள் ஏற்கெனவே இருந்தாலும் அவற்றைப் பார்க்க கூகுள் அக்கௌன்ட் செட்டிங்ஸ் வரை சென்று தேட வேண்டிய திருக்கும். பலருக்கும் அது எங்கு இருக்கிற தென்றே தெரியாது. 
தற்போது நேரடியாக சர்ச் செய்யும் போதே இடது புறத்தில் இருக்கும் மெனுவிலேயே இதைச் சென்று பார்க்க முடியும்.

இதைப் பற்றி விரிவாக விளக்கும் வீடியோ ஒன்றையும் வெளியிட் டுள்ளது கூகுள். 

ப்ரைவசி கண்ட்ரோல்ஸை யும் இதேப் போன்று எளிமைப் படுத்தியுள்ளது கூகுள்.

சர்ச் செய்யும் போது எந்த விளம்பரங் களைப் பார்க்கலாம் எவற்றைத் தவிர்க்கலாம் என்பதை ‘Ad Settings’ பிரிவில் மாற்றிக் கொள்ளலாம். 

மேலும், எந்தெந்த தகவல்களை கூகுள் சேமிக்கலாம் என்பதையும் கண்ட்ரோல் செய்யலாம். இது போன்ற மாற்றங்கள் மேப்ஸ் போன்ற மற்ற சேவைகளு க்கும் விரைவில் வருமாம்.
ஈசியாக சர்ச் ஹிஸ்டரியை நீக்க கூகுளின் அதிரடி மாற்றம் ! ஈசியாக சர்ச் ஹிஸ்டரியை நீக்க கூகுளின் அதிரடி மாற்றம் ! Reviewed by Fakrudeen Ali Ahamed on November 14, 2019 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 EThanthis All rights reserved
close