வேர்ட் செல் டெக்ஸ்ட் மாற்றம் - வேர்ட் டிப்ஸ் | Word Cell Text Change - Word Tips! - EThanthis

Recent Posts


வேர்ட் செல் டெக்ஸ்ட் மாற்றம் - வேர்ட் டிப்ஸ் | Word Cell Text Change - Word Tips!

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
வேர்ட் டேபிள் ஒன்றில், அதன் செல் கட்டங்களில் உள்ள டெக்ஸ்ட்டை எந்த வகையில் வேண்டு மானாலும் தோன்றும்படி மாற்றி அமைக்கலாம். 
வேர்ட் செல் டெக்ஸ்ட் மாற்றம்
எடுத்துக் காட்டாக, படுக்கை வசத்தில் இருப்பதனை, நெட்டு வாக்கில் அமைக்கலாம். இதற்குக் கீழ்க்காணும் வழிகளில் செயல்பட வேண்டும்.

1. எந்த செல்லில் உள்ள டெக்ஸ்ட்டை மாற்ற வேண்டுமோ, அந்த செல்லுக்குக் கர்சரைக் கொண்டு சென்று, ரைட் கிளிக் செய்திடவும். அப்போது Context menu ஒன்று கிடைக்கும்.

2. இந்த மெனுவில் Text Direction என்பதனைத் தேர்வு செய்திடவும். டெக்ஸ்ட் டைரக்ஷன் டயலாக் பாக்ஸ் கிடைக்கும். 

இதனைப் பயன்படுத்தி, டெக்ஸ்ட் எந்த வகையில் மாற்றப்பட வேண்டும் என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். நீங்கள் எண்ணியபடி அமைத்த பின்னர், ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

இந்த செயல் பாட்டினை, வேர்ட் தரும் ரிப்பனில் உள்ள லே அவுட் டேப்பினைப் பயன்படுத்தியும் மேற்கொள்ளலாம். இதற்கும் மேலே கூறியபடி, கர்சரை செல்லில் வைத்திடவும். 

அடுத்து, ரிப்பனில், லே அவுட் டேப்பினைத் திறக்கவும். இதில் கிடைக்கும் Alignment groupல், Text Direction என்ற டூலினைத் திறக்கவும். 

நீங்கள் விரும்பும் வகையில், டெக்ஸ்ட் அமையும் வரை, இதில் கிளிக் செய்து கொண்டே இருக்கவும். டெக்ஸ்ட் குறிப்பிட்ட கோணத்தில் வந்தவுடன், வெளியேறி ஓகே கிளிக் செய்திடவும்.
பாராவினை நகர்த்த:

சில வேளைகளில் நாம் உருவாக்கும் வேர்ட் டாகுமெண்ட்டில் ஏதேனும் ஒரு முழு பாராவை டாகுமெண்ட்டின் வேறு இடத்தில் அமைக்க விரும்புவோம். 

இதற்கு காப்பி அல்லது கட் மற்றும் பேஸ்ட் கட்டளை எல்லாம் வேண்டாம். எந்த பாராவினை நகர்த்த வேண்டுமோ அதனுள்ளாக கர்சரைக் கொண்டு சென்று வைக்கவும். 

பின் ஷிப்ட் மற்றும் ஆல்ட் கீகளை அழுத்தியவாறு அப் ஆரோ அல்லது டவுண் ஆரோவினை அழுத்தினால் பாரா மேலே கீழே முழுதாகச் செல்லும்.

புல்லட் பாய்ண்ட்ஸ்:

வேர்டில் டெக்ஸ்ட்டின் சில பாகங்களை முக்கியப் படுத்தவும் கோர்வையாக வரிசைப் படுத்திக் காட்டவும் புல்லட் பாய்ண்ட்ஸ் பயன்படுத்து கிறோம். 

இதற்கு வழக்கமாக பார்மட் மெனு சென்று இதற்கான பிரிவினைத் தேர்ந்தெடுக் கிறோம். அல்லது டெக்ஸ்ட்டைத் தேர்ந்தெடுத்து மெனு பாரில் அதற்கான ஐகானைக் கிளிக் செய்கிறோம். 

இதற்குப் பதில் புல்லட் அமைக்கப்பட வேண்டிய டெக்ஸ்ட்டில் கர்சரை வைத்து பின் கண்ட்ரோல் + ஷிப்ட் + எல் அழுத்தினால் போதும். 

தானாக புல்லட் அமைந்து விடும். கண்ட்ரோல் + ஷிப்ட் + என் அழுத்தினால் இந்த புல்லட் பாய்ண்ட்கள் நீங்கி விடும்.

டாகுமெண்ட் தொடக்கமும் முடிவும்:
வேர்ட் டாகுமெண்ட் ஒன்றைத் தயாரித்துக் கொண்டிருக் கிறீர்கள். உங்கள் கர்சரை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் திரையின் தொடக்கத்திற்குக் கொண்டு செல்ல எண்ணுகிறீர்கள். 

அதாவது திரையில் தெரியும் டெக்ஸ்ட் ஸ்கிரீன் நகரக் கூடாது. தெரிகின்ற வாக்கியங்களில் முதல் வாக்கியத்திற்குச் செல்ல வேண்டும். 

என்ன செய்திடலாம்? Home அழுத்தினால் வரியின் தொடக்கத்திற்கு மட்டுமே செல்லும். Ctrl + Home அழுத்தினால் அந்த ஆவணத்தின் தொடக்கத்திற்குச் செல்லும். 

திரையில் தெரியும் முதல் வாக்கியத்தின் தொடக்கத் திற்குச் செல்ல Alt + Ctrl + Page Up அழுத்திப் பாருங்கள். அதே போல் திரையில் தெரியும் பக்கத்தின் கீழ்ப்பாகத் திற்குச் செல்ல Alt + Ctrl + Page Down அழுத்தவும். 

வேர்ட் டாகுமெண்ட்டில் வேகமாக நினைத்த இடத்திற்கு நீந்திச் செல்ல விரல் நுனியில் உள்ள சூட்சுமத்தைத் தெரிந்து கொண்டீர்களா!
வேர்ட் செல் டெக்ஸ்ட் மாற்றம் - வேர்ட் டிப்ஸ் | Word Cell Text Change - Word Tips! வேர்ட் செல் டெக்ஸ்ட் மாற்றம் - வேர்ட் டிப்ஸ் | Word Cell Text Change - Word Tips! Reviewed by Fakrudeen Ali Ahamed on November 14, 2019 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 EThanthis All rights reserved
close