தேடுபொறி சேகரிக்கும் தகவல் தெரியுமா? உங்களுக்கு..! - EThanthis

Recent Posts


தேடுபொறி சேகரிக்கும் தகவல் தெரியுமா? உங்களுக்கு..!

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
கூகுள் உள்ளிட்ட தேடுபொறி இணைய தளங்கள் உங்களுக்கு தெரியாமலேயே கூகுள் சேகரிக்கும் பட்டியல் மிகவும் நீண்டது. 
தேடுபொறி
இது குறித்த சர்ச்சையின் காரண மாகவே சமீபத்தில் அமெரிக்க செனட் உறுப்பினர் களின் கேள்விக்கு நேரில் விளக்கமளித் திருந்தார் அந்நிறுவன த்தின் தலைமை செயலதிகாரி சுந்தர் பிச்சை. 

அதாவது, ஆண்ட்ராய்டு இயங்குதளத் திலிருந்து பதிவிறக்கம் செய்யப்படும் செயலிகளே இவ்வளவு தகவல்களை நம்மிட மிருந்து பெறுகின்றன என்றால் 

அந்த இயங்கு தளத்தையே உருவாக்கிய கூகுள் எவ்வளவு தகவல் களை பெறும் என்று நினைத்து பாருங்கள். 

சுந்தர் பிச்சை உலகின் பெரும்பாலான நிறுவனங்கள் கூகுளின் 'ஆட் சென்ஸ்' என்ற சேவையை பயன்படுத்தியே விளம்பரங்களை ஏற்படுத்தி தங்களது வாடிக்கை யாளர்களை அடைகின்றன. 

உதாரணத்து க்கு, சென்னை பெசன்ட் நகரில் பள்ளி யொன்று புதியதாக திறக்கப் படுகிறது என்று வைத்துக் கொள்வோம். 
தேடுபொறி
பள்ளி நிர்வாகம் பெசன்ட் நகரை சுற்றி ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும், திருமணமான, குழந்தை களை கொண்ட பெற்றோரின் கைபேசிக்கு 

தங்களது பள்ளி குறித்த விளம்பரம் செல்ல வேண்டும் என்று கேட்டால் அதை கூகுளால் நிச்சயமாக நிறைவேற்ற முடியுமளவுக்கு நம்மை பற்றிய தகவல்கள் ஒவ்வொரு நிமிடமும் சேமிக்கப்பட்டு வருகிறது. 

இன்னும் ஒருபடி மேலே, உங்களது உரையாடலை கேட்டு அதற்குரிய விளம்பரங் களை கூகுள் நிறுவனம் அளித்து வருவதாக பரவலாக குற்றச் சாட்டுகள் மட்டுமின்றி, ஆதாரங்களும் வெளிவந்து கொண்டிருக் கின்றன. 

சிலர் தங்களது இணையதள செயல்பாடு யாருக்கும் தெரியக் கூடாது என்ற எண்ணத்தில் இன்காக்னிட்டோ என்ற அம்சத்தை பயன்படுத்தி வருகின்றனர். 
இணையதளம்
ஆனால், நீங்கள் இன்காக்னிட்டோ உள்ளிட்ட எந்த வழியை பயன்படுத்தி னாலும் கூகுளால் உங்களது செயல்பாட்டை கண்காணிக்க முடியுமென்று 

அமெரிக்காவை சேர்ந்த வாண்டர்பில்ட் பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சியின் மூலம் தெரிய வந்துள்ளது. 

இருப்பினும், சர்வதேச மற்றும் உள்நாட்டு விதிகளின்படி, தனது பயன் பாட்டாளர்கள் குறித்து சேகரிக்கும் தகவல்களை கட்டுப் படுத்தும்/ நீக்கும் உரிமையை கூகுள் வழங்கி யுள்ளது. 

அதை பயன்படுத்தி இதுவரை கூகுள் உங்களை பற்றி தெரிந்து வைத்துள்ள தகவல்கள், பதிவுகள் குறித்து நீங்கள் அறிந்து கொள்ள முடியும்.
தேடுபொறி சேகரிக்கும் தகவல் தெரியுமா? உங்களுக்கு..! தேடுபொறி சேகரிக்கும் தகவல் தெரியுமா? உங்களுக்கு..! Reviewed by Fakrudeen Ali Ahamed on November 29, 2019 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 EThanthis All rights reserved
close