படுக்கையிலும் லேப்டாப் பயன்படுத்துபவரா? இத படிங்க !
புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..
லைக் பண்ணுங்க... "
ஊரடங்கு காலமான இன்றைய நாட்களில் அனைவரும் வீட்டிலேயே இருக்கிறோம். வீட்டின் மற்ற இடங்களை விட நாம் படுக்கை அறையில் அதிக நேரத்தை செலவிடுகிறோம்.
படுக்கையில் அமர்ந்தபடி லேப்டாப் வைத்துக் கொண்டு வேலை செய்வது, நேரம் கெட்ட நேரத்தில் உணவு உட்கொள்வது என்று எந்த இலக்கும் இல்லாமல் இந்த நாட்கள் நகர்ந்து கொண்டிருக்கின்றன.
எந்த ஒரு உடல் செயல்பாடுகளும் இல்லாமல் இதே நிலைமை நீடித்தால் உடலும் மனமும் சீரழிந்து விடும் என்று கூறப்படுகிறது. மன அழுத்தம் மற்றும் பதட்டத்தின் அளவு அதிகரித்துள்ளது.
அசைவ உணவுகளை அதிகம் உண்பவர்களுக்கு ஆபத்து !
இது உடல் மற்றும் மனதிற்கு ஏற்ற நிலை அல்ல. இந்த நிலையை எதிர்கொள்ள நமக்கு கட்டாயம் நேற்மறை ஆற்றல் தேவைப்படுகிறது .
ஆகவே நம்மை சுற்றி இருக்கும் ஆற்றலை நேற்மறையாக மாற்ற சில குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.
தேவையற்ற பொருட்கள்
ுன்பைக் காட்டிலும் நாம் சோம்பேறிகளாக மாறிவிட்டோம். உங்கள் அறையில் உங்களை சுற்றியுள்ள தேவையற்ற பொருட்கள் எதிர்மறை ஆற்றலை அதிகரிக்கும்.
சுத்தமான இடம் அமைதியை அதிகரிக்கும். உங்கள் அறையில் இருக்கும் தேவையற்ற பொருட்களை அகற்றி விட்டு, தேவையுள்ள பொருட்களை ஒழுங்குபடுத்துங்கள்.
ஆண்மை பெருக ஆட்டிறைச்சி !
இப்படி செய்வதால் உங்கள் அறையும் பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.
கூடுதலாக, அவ்வப்போது உங்கள் படுக்கையின் விரிப்புகள் மற்றும் போர்வைகள் மற்றும் ஜன்னல் திரைசீலைகள் போன்றவற்றை மாற்றுங்கள்.
முடிந்த அளவிற்கு வெளிர் மற்றும் அடர் நிறங்களைக் கொண்ட பொருட்களைப் பயன்படுத்தலாம்.
செடிகளை வளருங்கள்
ொதுவாக பச்சை நிறம் உடலையும் மனதையும் நேரடியாக பாதிக்கிறது. இந்த நேரத்திற்கு மிகவும் தேவையான அமைதியை இந்த நிறம் வழங்குகிறது.
உங்கள் இல்லத்தில் தோட்டம் வைக்கக்கூடிய அளவிற்கு இடம் இல்லாமல் இருந்தால், உங்கள் வீட்டுக்குள்ளேயே அல்லது பால்கனியில் சில செடிகளை வளர்க்கலாம்.
இன்சுலின் போடும் முன் கவனிக்க வேண்டியவை !
இந்த தேவையை பூர்த்தி செய்யும் வகையில் சில செடிகள் நர்சரியில் கிடைக்கின்றன. இவற்றுக்கான நிர்வகிப்பு செலவும் குறைவு.
அல்லது இவற்றிற்கு மாற்றாக சில மூலிகை செடிகளை வளர்க்கலாம். பூச்சிகளைக் கொல்லும் செடிகள் கூட சந்தையில் கிடைக்கின்றன. அவற்றையும் நீங்கள் வளர்க்க முயற்சிக்கலாம்.
வீட்டில் உள்ள காலியான இடங்களை இவ்விதமாக பயன்படுத்தலாம்.
மெழுகுவர்த்தி, ஊதுபத்தி, வாசனை எண்ணெய் போன்றவற்றை பயன்படுத்தலாம்.
ஒரு நறுமணமான வாசனை
உங்கள் மனநிலையில் நிச்சயம் ஒரு மாற்றத்தை கொண்டு வரும். உங்கள் உடலின் ஆற்றல் குறைவாக இருக்கும் நேரங்களில் நல்ல வாசனையை நுகர்வதால், அந்த நிலை மாறுவதை உணர முடியும்.
இரவில் நீங்கள் அதிக சோர்வாக உணர்ந்தால் ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி வைக்கலாம் அல்லது வாசனை எண்ணெய் கொண்ட டிப்யூசர் பயன்படுத்தலாம்.
ரிக்டர் அளவுகோல் எப்படி உருவானது?
இதனால் உங்கள் மனம் அமைதியாகும். அந்த நாள் முழுவதும் நேர்மறை ஆற்றல் கிடைக்கும்.
உங்கள் உடலுக்கு வைட்டமின் டி சத்து மிகவும் அவசியம். இந்த முக்கிய வைட்டமின் சூரிய ஒளியில் உள்ளது. ஆகவே சூரிய ஒளி உங்கள் உடலில் படும்படி பார்த்துக் கொள்ளவும்.
காலையில் சூரியன் உதித்தவுடன் ஒரு மணிநேரம் மற்றும் மாலையில் சூரியன் மறைவதற்கு முன் ஒரு மணிநேரம் சூரிய ஒளியை பெற்றுக் கொள்ள உகந்த நேரமாகும்.
குழந்தைகள் வாந்தி எடுப்பதற்கான காரணங்களும் சிகிச்சைகளும் !
இந்த நேரத்தில் உங்கள் அறையில் திரைச்சீலைகள் திறந்து இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும். ஒரு நாளில் இரண்டு மணிநேரம் உங்கள் அறையின் ஜன்னல் திறந்து இருக்கட்டும்.
இதனால் நல்ல காற்று அறை முழுவதும் பரவும். லேசான ஒளி பொருந்திய விளக்குகள் கொண்டு இரவில் உங்கள் அறையை அலங்கரிக்கலாம்.
அமைதியான இசை
ஒரு நாளின் அனைத்து பணிகளும் முடிந்தவுடன், இதமான மற்றும் தியான நிலையை மேம்படுத்தும் இசையை அனுபவியுங்கள்.
காதில் ஹெட் போன் மாட்டிக் கொண்டு நீங்கள் மட்டும் இந்த இசையை அனுபவிக்கலாம் அல்லது ஸ்பீக்கர் மூலம் அந்த அறை முழுவதும் இந்த இசையை ஒலிக்க விடலாம்.
டைட்டா ப்ரா போடாதீங்க தலைவலி அதிகமாயிரும் !
இந்த இனிமையான இசை உங்கள் உடல் மற்றும் ஆன்மாவிற்குள் நுழையும். இந்த நிலை பல போராட்டங்களை எதிர்கொள்ளும் மனநிலையை உங்களுக்குள் ஊக்குவிக்கும்.
கடினமான நேரங்களில் நேற்மறை ஆற்றலை அதிகரிக்கக்கூடிய இந்த 5 குறிப்புகள் உங்களுக்கு நிச்சயம் உதவும். ஆகவே இவற்றை முயற்சித்து உங்கள் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துங்கள்.