உங்களின் ஆதார் எங்கே பயன்படுத்தப்பட்டது என்பதை தெரிந்து கொள்ள ! - EThanthis

Recent Posts


உங்களின் ஆதார் எங்கே பயன்படுத்தப்பட்டது என்பதை தெரிந்து கொள்ள !

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
உங்களின் ஆதார் எண் எங்கே, எத்தனை முறை பயன்படுத்தப்பட்டது என்பதை நீங்களே தெரிந்து கொள்ள முடியும். நமது வங்கி கணக்குகள் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ளன. 
உங்களின் ஆதார் எங்கே பயன்படுத்தப்பட்டது என்பதை தெரிந்து கொள்ள !
அதனை அரசாங்கமும் கட்டாயமாக்கியுள்ளது. அதில் பல முறை பணப்பரிவர்த்தனை களில் ஆன்லைன் பரிவர்த்தனை களின் போது ஆதார் எனேபிள்ட் கட்டண முறை பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் உங்கள் ஆதார் எண் அங்கீகாரத்திற்காக எப்போது, எங்கே எத்தனை முறை பயன்படுத்தப்பட்டது என்பதை நீங்களே தெரிந்து கொள்ள முடியும். அதற்கு UIDAI உதவியுடன் இதனை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

அதற்கு முதலில் ஆதார் அட்டையை வழங்கும் அமைப்பான UIDAI என்ற வலைத்தளமான http://UIDAI.gov.in என்ற இணையதள பக்கத்திற்கு செல்லவும். ஒரு பகுதி திறக்கும்.

அதில் ஆதார் சர்வீசஸ் பிரிவுக்கு செல்ல வேண்டும். அதில் ' Authentication History' என்ற பிரிவில் கிளிக் செய்ய வேண்டும். அதன் பிறகு ஒரு புதிய பக்கம் திறக்கும். 
 
அதில் உங்களின் 12 இலக்க ஆதார் என்னை உள்ளிட வேண்டும். 16 இலக்க மெய்நிகர் ஐடி இருந்தால் அந்த ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். அதன் பிறகு என்னை உள்ளிடவும்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள send OTP என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதன் பிறகு மொபைல் எண்ணில் otp என் வரும். அதை திறந்து இருக்கும் பக்கத்தில் கீழ் பகுதியில் உள்ளிட வேண்டும். 
 
அதற்கு முன்பு அதே பக்கத்தில் நீங்கள் மேலே உள்ள ' Authentication type' என்ற பிரிவில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

அதன் பிறகு கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை உள்ளிடவும். பிறகு verify OTP என்பதை கிளிக் செய்தவுடன், ஒரு பகுதி ஓப்பன் ஆகும். 
ஆசிரியருக்கு பயந்து நாடகமாடிய மாணவிகள் - பெற்றோருக்கு அதிர்ச்சி !
அந்தப் பக்கத்தில் பதிவிறக்கம் செய்வதற்கான வசதியும் இருக்கும். நீங்கள் விரும்பினால் அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதன் மூலம் உங்கள் ஆதார் எத்தனை முறை பயன்படுத்தப்பட்டது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள முடியும்.
உங்களின் ஆதார் எங்கே பயன்படுத்தப்பட்டது என்பதை தெரிந்து கொள்ள ! உங்களின் ஆதார் எங்கே பயன்படுத்தப்பட்டது என்பதை தெரிந்து கொள்ள ! Reviewed by Fakrudeen Ali Ahamed on February 20, 2021 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 EThanthis All rights reserved
close