தீபாவளி முதல் 5-ஜி சேவையை வழங்க இருப்பக்கும் ஜியோ நிறுவனம் ! - EThanthis

Recent Posts


தீபாவளி முதல் 5-ஜி சேவையை வழங்க இருப்பக்கும் ஜியோ நிறுவனம் !

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
5-ஜி அலைக்கற்றையானது ரிலையன்ஸ் ஜியோ, பாா்தி ஏா்டெல், வோடபோன்-ஐடியா, அதானி போன்ற நிறுவனங்களுக்கு ரூபாய்.1,50,173 கோடிக்கு ஏலம் விடப்பட்டது. 
தீபாவளி முதல் 5-ஜி சேவையை வழங்க இருப்பக்கும் ஜியோ நிறுவனம் !
ொழில் அதிபா் முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், ரூபாய்.88,078 கோடி மதிப்பிலான அலைக்கற்றையைப் பெற்றது. 
 
5-ஜி அலைக்கற்றையை விரைவில் பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை அனைத்து தொலைத் தொடா்பு நிறுவனங்களும் மேற்கொண்டு வருகிறது. 
 
முதற்கட்டமாக அவை முக்கியமான நகரங்களில் பயன்பாட்டுக்கு வரும் எனவும் பிறகு படிப்படியாக கிராமங்களைச் சென்றடையும் எனவும் தகவல்கள் தெரிவிக்கிறது. 
 
வருகிற தீபாவளி முதல் சென்னை, தில்லி, மும்பை, கொல்கத்தா போன்ற நகரங்களில் 5-ஜி சேவையை வழங்க இருப்பதாக ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.

சுவையான தீபாவளி ஸ்பெஷல் பால்கோவா செய்வது எப்படி?

5G என்றால் என்ன?

5ஜி என்பது 5-ம் தலைமுறை தொலைத்தொடர்பு சேவை. 4ஜி சேவை மொபைல் பிராட்பேண்டை சாத்தியப் படுத்திய நிலையில், 5ஜி தொழில் நுட்பத்தில் இணைய வேகம் மேலும் அதிகமாக இருக்கும் என்பது உண்மை. 
 
ஆனால், 5ஜி என்பது இணைய வேகம் தொடர்பானது மட்டுமே அல்ல. லேட்டன்சி என்று அறியப்படும், 
 
தரவுப் பறிமாற்றம் தொடங்குவதற்கு முன்பு நிலவும் சில நொடி தமாதம் 5ஜி தொழில்நுட்பத்தில் கிட்டத்தட்ட இருக்கவே இருக்காது என்று கூறப்படுகிறது.

பல்வேறு கருவிகள், பொருள்களையும் இணைக்கும் வகையில் 5 ஜி தொழில்நுடம் இருக்கும். அந்த வகையில் மருத்துவம், போக்குவரத்து போன்ற பல துறைகளில் இந்த தொழில்நுட்பத்தின் தாக்கம் இருக்கும்.
 
புதிய போன் வாங்க வேண்டுமா?
தீபாவளி முதல் 5-ஜி சேவையை வழங்க இருப்பக்கும் ஜியோ நிறுவனம் !
ஒரு சில பிராண்டுகளில் 4G / 3G உடன் 5G விருப்பம் இருக்கும். இதைச் செய்ய நீங்கள் சிஸ்டம்> நெட்வொர்க்> மொபைல் நெட்வொர்க்> நெட்வொர்க் பயன்முறைக்குச் செல்ல வேண்டும். 
 
அதுவே 5G வசதி செல்பேசியில் இல்லை என்றால், நீங்கள் புதிய திறன்பேசியை வாங்கினால் மட்டுமே புதிய சேவையின் பலனை அனுபவிக்க முடியும்.
 
என்னென்ன சாதகங்கள்?
 
கைப் பேசி உள்ளிட்டவையின் செயல் திறனானது 4ஜியை விட 5-ஜி தொழில் நுட்பத்தில் வேகமாக இருக்குமாம். 
 
படங்கள், காணொலிகள், இசைத் தொகுப்புகள் ஆகியவற்றை சில விநாடிகளில் பதிவிறக்கம் செய்து விட முடியும்.
 
இணைய சேவை வேகமாகக் கிடைக்கும் என்பதால் தானியங்கி இயந்திரங்கள், ரோபோக்கள் போன்றவற்றின் செயல்பாடும் மேம்படும்.
 
செயற்கை நுண்ணறிவு, மெய்நிகா் தொழில்நுட்பம் உள்ளிட்டவை 4-ஜியை காட்டிலும் 5ஜி-யில் மிகச் சிறப்பாகச் செயல்படும். 

உடலுறவுக்குப் பிறகு ஆண் துணையை உயிரோடு சாப்பிடும் பெண் உயிரினம் !

பின் இணையத்தளத்தில் தரவுகளைத் தேடுவதும் மிக சுலபமாகும். அவற்றில் எவ்வித தாமதமும் ஏற்படாது.
 
5ஜி தொழில் நுட்பத்தின் வாயிலாக தரவுகளை ஓரிடத்திலிருந்து மற்றோா் இடத்துக்கு மிக வேகமாகப் பகிர முடியும். 
 
5ஜி அலைக்கற்றையின் அலை வரிசை (பேண்ட்விட்த்) அதிகமாக உள்ளதால் அதிகப்படியான தரவுகளைக் குறைந்த நேரத்தில் பகிரமுடியும். இதனால் இணைய சேவையின் வேகம் அதிகரிக்கும்.
 
பாதகங்கள் என்ன?
தீபாவளி முதல் 5-ஜி சேவையை வழங்க இருப்பக்கும் ஜியோ நிறுவனம் !
4-ஜி அலைக்கற்றையுடன் ஒப்பிடும் போது 5ஜி அலைக்கற்றை குறைந்த தொலைவுக்கே பயணிக்கும். கட்டிடங்கள், மரங்கள், மழை ஆகியவை 5-ஜி அலைக்கற்றையின் வேகத்தைக் குறைக்க வாய்ப்புள்ளது. 
 
இதனால் 5-ஜி அலைக் கற்றையை வழங்கும் கருவிகளை அதிகமான இடங்களில் பொருத்த வேண்டிய சூழல் நிலவும்.
 
5ஜி அலைக்கற்றையைப் பயன்படுத்தி பல தரவுகளைக் குறைந்த நேரத்தில் பதிவிறக்கம் செய்து விட முடியும் என்றாலும் கூட, தரவுகளை இணையத்தில் பதிவேற்றம் செய்வதற்கு நீண்ட நேரம் ஆகும்.

கென்யாவில் ஒரே வீட்டில் 15 மனைவி, 107 குழந்தைகளுடன் வசிக்கும் நபர் !

விநாடிக்கு 100 மெகாபைட் (எம்.பி.) என்ற அளவிலேயே பதிவேற்ற வேகம் இருக்கும். 5ஜி அலைக்கற்றையின் அலை வரிசை அதிகமாக இருப்பதால், அதிலிருந்து தரவுகளை எளிதில் திருட முடியும். 
 
இதனால் இணையவழி குற்றங்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. 
 
5ஜி அலைக்கற்றையின் மூலம் ஒரே நேரத்தில் பல கருவிகளைத் தொடா்பு கொள்ள முடியும் என்பதால், அவற்றிலிருந்து தரவுகளைத் திருடுவதும் எளிதாகும் என நிபுணா்கள் எச்சரிக்கின்றனா்.
 
புதிய சிம் கார்டும் வேண்டுமா?
தீபாவளி முதல் 5-ஜி சேவையை வழங்க இருப்பக்கும் ஜியோ நிறுவனம் !
இல்லை, 5G சேவைக்கு நீங்கள் புதிய சிம் கார்டை வாங்க வேண்டியதில்லை. உங்கள் தற்போதைய சிம் கார்டில் 5G இணைப்புக்கான வசதி கிடைக்கும். 
 
நீங்கள் புதிய சிம் கார்டை வாங்கும்போது சம்பந்தப்பட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்கள் உங்களுக்கு 5ஜி சிம் வழங்கவும் வாய்ப்புள்ளது.
தீபாவளி முதல் 5-ஜி சேவையை வழங்க இருப்பக்கும் ஜியோ நிறுவனம் ! தீபாவளி முதல் 5-ஜி சேவையை வழங்க இருப்பக்கும் ஜியோ நிறுவனம் ! Reviewed by Fakrudeen Ali Ahamed on September 24, 2022 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 EThanthis All rights reserved
close