கைப்பேசி பேசியபடி செல்வது உயிருக்கு ஆபத்து ! - EThanthis

Recent Posts


கைப்பேசி பேசியபடி செல்வது உயிருக்கு ஆபத்து !

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் செயின் பறிப்பு மற்றும் செல்போன் திருட்டு சம்பவங்கள் அதிகரித் ததை அடுத்து,
இரவு நேரத்தில் இரண்டு ஷிஃப்டுகளில் காவல் துறையினர் பணியாற்றி வருகிறார்கள்.

எனினும், நேற்று சென்னை யில் 5 மணி நேரத்தில் 4 இடங்களில் செல்போன் மற்றும் செயின் பறிப்புச் சம்பவங்கள் நடந்துள்ளன.

இந்த கொள்ளைச் சம்பவங்கள் ஏதோ நள்ளிரவில் நடந்தது என்று நினைத்தால் அது தவறு. மாலை 4.15 மணிக்கு

மக்கள் நடமாட்டம் அதிகம் நிறைந்த சி.பி. ராமசாமி சாலையில் செல்போனில் பேசியபடி

நடந்து சென்ற வரிடம் இருந்து ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை கொள்ளை யர்கள் பறித்துச் சென்றுள்ளனர்.
இதன் மூலம், பகல் இரவு, ஆள் நடமாட்டம், முக்கியச் சாலை என எதுவுமே கொள்ளை யர்களுக்கு தடையாக இருக்க வில்லை என்பது புரிகிறது.

எந்த சாலையாக இருந்தாலும், யாருடன் இருந்தாலும் நாம் கவனமாக இருக்க வேண்டும் என்பதையே இந்த கொள்ளைச் சம்பவங்கள் காட்டு கின்றன.

சமீபத்தில், தனது வீட்டு வாசலில் ஒரு நபரை 4 கொள்ளை யர்கள் ஆயுதங் களை காட்டி மிரட்டி வாட்ச்,

செல்போன் களை பறித்துச் சென்ற சிசிடிவி காட்சியை நடிகர் பிரபு காவல் நிலையத்தில் ஒப்படைத் துள்ளார்.

இது குறித்து மக்களுக்கு சொல்லப் படுவது என்ன வென்றால்,

உங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை கண்காணி த்துக் கொண்டே இருங்கள்.

உங்கள் உடைமை களை நீங்கள் எப்படி வைத்திரு க்கிறீர்கள் என்பதில் கவனம் செலுத்துங்கள்.

விலை உயர்ந்த பொருட்களை எங்கே வைத்திரு க்கிறீர்கள் என்பதில் அலட்சியம் செய்யாதீர்கள்.

உணவு விடுதி, பொழுது போக்கு பூங்கா போன்ற வற்றுக்குச் செல்லும் போது விலை மதிப்புள்ள பொருட்கள் மீது கவனமாக இருங்கள்.

சாலைகளில் செல்போன் பேசிக் கொண்டே செல்வதால் விபத்துகள் நேரிட்டு உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதோடு, இனி செல்போனு க்கும் ஆபத்து என்பதை உணருங்கள்.

இரு சக்கர வாகன த்தை இயக்கும் பெண்களும், பின்னால் அமர்ந்து செல்வோரும் கழுத்துப் பகுதியை போர்த்திச் செல்வது நல்லது.
ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களில் கையில் பைகளை சுமந்து செல்லும் பெண்களே செயின் பறிப்புக் கொள்ளை யர்களின் எளிதான இலக்காக இருக்கி றார்கள்.

இருட்டான பகுதிகளில், சந்தேகத்துக்கு இடமான இடங்களில் இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது யாரேனும் லிஃப்ட் கேட்டால் கவனமாக செயல் படவும்.

ஞாயிற்றுக் கிழமை காலை வேளையும், இரவு நேரங்க ளிலும் செயின் மற்றும் செல்போன் பறிப்பு அதிகமாக உள்ளது என்பதை கவனத்தில் கொள் ளுங்கள்.

குழந்தை களுக்கு தங்க நகைகளை அணிவித்து தனியே வெளியே அனுப்ப வேண்டாம் என்பது உள்ளிட்ட முன்னெச்சரி க்கைகளை


மக்களும் கடை பிடித்து செயின் பறிப்பு மற்றும் செல்போன் பறிப்பு கும்பல்களிடம் இருந்து தற்காத்துக் கொள்ள வேண்டும்.
கைப்பேசி பேசியபடி செல்வது உயிருக்கு ஆபத்து ! கைப்பேசி பேசியபடி செல்வது உயிருக்கு  ஆபத்து ! Reviewed by Fakrudeen Ali Ahamed on July 11, 2018 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 EThanthis All rights reserved
close