இணைய தளம் எடுத்த விஸ்வரூபம் ! - EThanthis

Recent Posts


இணைய தளம் எடுத்த விஸ்வரூபம் !

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
உலகின் ஒரே மிகப் பெரிய தகவல் தொடர்பு சாதன மாக ஆகிவிட்ட 'இண்டர்நெட்' டின் சக்தி என்ன என்பதை யும்,

விஸ்வரூபம்

அதன் வீச்சு எந்த அளவுக்கு பிரமாண்ட மானது என்பதையும் தெரிந்து கொள்வதற் கான சமீபத்திய மிகச் சிறந்த உதாரணம் "விக்கிலீக்ஸ்" !

உலக போலீஸாக வும், உளவு பார்ப்பதில் தன்னை மிஞ்ச ஆளில்லை என்பது போலவும் ஏக திமிராக நடந்து கொண்ட அமெரிக்கா வின் பிடறியை பிடித்து உலுக்குவது போல,

அந்நாட்டின் தூதரக அதிகாரிகள் தங்கள் நாட்டு தலைமை க்கு அனுப்பி வைத்த ரகசிய ஆவணங் களை "விக்கிலீக்ஸ்" இணைய தளம் வெளி யிட்டதை பார்த்தபோது,

இணைய தளம் என ஒன்று இல்லாது போயிருந் தால் இந்த அளவுக்கு அந்த தகவல் உலகம் முழுவதும் முழு முற்றிலு மாக பரவியிருக்குமா என்பது சந்தேகத்திற் குரியது தான்!

என்னதான் பத்திரிகை, தொலைக் காட்சி போன்ற ஊடகங்கள் இருந்தாலும், அந்தந்த ஊடக நிறுவனங் களின் விருப்பத்திற்கு ஏற்பத்தான் மேற்கூறிய தகவல்கள் வெளியாகி இருக்கும்.

கூடவே லட்சக்கணக் கான பக்கங் களைக் கொண்ட இவற்றை அச்சில் ஏற்றியோ அல்லது தொலைக் காட்சியில் காட்டி வாசித்தோ

மக்களிடம் கொண்டு சென்று சேர்ப்பது என்பது நடை முறையில் அத்தனை எளிதில் சாத்திய மான விடயம் அல்ல.

மாறாக இப்படி வேண்டிய வர்கள், வேண்டியதை எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்வது போன்று சர்வர்கள் இழுக்க இழுக்க,
ஆவணங் களையும், ஆதாரங் களையும் கொட்டி வைத்து தகவல் களை அள்ளிக் கொள்ள வைத்துள்ளது "விக்கிலீக்ஸ்" !

இதன் மூலம் உலகையே புரட்டி போட வைத்துள்ள 'இண்டர்நெட்'டின் சக்தி நிரூபிக்கப் பட்டுள்ளது.

இதுபோன்ற ரகசிய தகவல்களை அம்பலப் படுத்துவதற்கு மட்டு மல்லாது, தெரிந்த மற்றும்

தெரியாத விடயங்கள் குறித்த தகவல்களை அறிவத ற்கும் உலகின் ஒரே மிகப்பெரிய ஆதாரமாக 'இண்டர்நெட்' விளங்கு கிறது.

2005 ஆம் ஆண்டு வாக்கில் உலகம் முழுவதும் ஒரு பில்லியன் மக்கள் இண்டர்நெட்டை பயன் படுத்திய நிலையில்,

தற்போது அது 40 பில்லியனாக விஸ்வரூபம் எடுத்துள்ள தாக தெரிவிக்கிறது ஒரு புள்ளி விவரம்.

இதில் இந்தியர்கள், உலக அளவில் இண்டர்நெட்டை பயன்படுத்து வதில் மூன்றாவது இடத்தில் உள்ளதாக பிரபல இணைய தேடுதளமான கூகுள் தெரிவிக் கிறது.

அதே சமயம் கருத்து சுதந்திர த்திற்கு ஏக கெடுபிடி காட்டும் சீனாவில் 300 மில்லியன் மக்கள் இண்டெர் நெட்டை பார்ப்பதால் முதலிடத்தையும்,

அமெரிக்கா வில் 207 மில்லியன் மக்கள் 'இண்டெர்நெட்' டை பார்ப்பதால் இரண்டாம் இடத்தையும்,

100 மில்லியன் அளவை கொண்டு இந்தியா மூன்றாம் இடத்திலும் உள்ளதாக கூறுகிறார் கூகுள் இந்தியாவிற் கான தலைமை அதிகாரி வினய் கோயல்!

மேலும் இந்தியாவைப் பொறுத்த வரையில் 40 மில்லியன் மக்கள் மொபைல் போன் மூலம் இண்டெர்நெட்டை பார்ப்பதாக வும், வரும் 2012 ஆம் ஆண்டிற்குள்

மொபைல் 'இண்டெர்நெட்' டை பயன்படுத்து பவர்களை லேப்டாப் மற்றும் டெஸ்க்டாப் கம்ப்யூட்டரில் பார்க்க வைக்க முயற்சித்து வருவதா கவும் அவர் கூறுகிறார்.

அதே சமயம் 'இண்டெர்நெட்' டை பயன் படுத்து பவர்களில் பெரும் பாலானோர், பாடல் களை தேர்ந்தெடு ப்பதில் தான் அதிகம் கவனம் செலுத்துவ தாகவும் தெரிய வந்துள்ளது.

எந்த அறிவியல் கண்டு பிடிப்புகளையு ம் ஆக்கப் பூர்வமாக பயன் படுத்தும் வரை பிரச்சனை இல்லை. வில்லங்க மாக்கினால் சிக்கல் தான்! 
இணைய தளம் எடுத்த விஸ்வரூபம் ! இணைய தளம் எடுத்த விஸ்வரூபம் ! Reviewed by Fakrudeen Ali Ahamed on July 11, 2018 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 EThanthis All rights reserved
close