இரண்டு உயிர்களை காப்பாற்றிய ஆப்பிள் வாட்ச் ! - EThanthis

Recent Posts


இரண்டு உயிர்களை காப்பாற்றிய ஆப்பிள் வாட்ச் !

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
பயனர்களின் பிட்னஸ் குறிக்கோள் களை அடைய உதவுவது மட்டு மில்லாமல், 





தொடர்ந்து வெற்றிகர மாக உயிர் களையும் காப்பாற்றி வருகிறது ஆப்பிள் வாட்ச். 


ஏப்ரலில் நடந்த இரு வெவ்வேறு சம்பவங் களில், ஆப்பிள் வாட்ச் சரியாக ஆபத்து காலத்தில் மீட்க உதவி யிருக்கிறது. 

முதல் சம்பவத்தில், நியூயார்க் வாசியான வில்லியம் மோன்சிடிலீஸ்- ன் உயிர் 

ஸ்மார்ட் வாட்ச்சில் இருந்து வந்த நோட்டிபி கேசனால் காப்பாற்றப் பட்டிருக் கிறது. 

மற்றொரு சம்பவத்தில், டியான்னா ரெக்டென் வால்டு என்ற ப்ளோரிடா இளைஞர், 

ஆப்பிள் வாட்ச் லிருந்து அனுப்பப் பட்ட அலர்ட் மூலம் சரியான நேரத்தில் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

என்.பி.சி அறிக்கை யின் படி, 32 வயதான மோன் சிடிலீஸ் பவுலர் லேண்டில் குடும்ப தொழிலை செய்து வருகிறார். 

தலை சுற்றல் வந்து கழிப்பறை சென்ற போது, இரத்தப் போக்கு ஏற்பட்ட வுடன், 

ஆப்பிள் வாட்ச் அவருக்கு உடனடியாக மருத்துவ உதவி தேவைப் படுகிறது என்ற எச்சரிக்கையை அனுப்பியது.

இந்த அறிகுறிகள் தென்பட்டு, ஆப்பிள் வாட்சும் எச்சரிக்கை செய்ததால் மோன் சிடிலீஸ் உடனடியாக மருத்துவ மனை சென்றார். 

அப்போது அவர் கார் ஓட்டிச் செல்லும் போது அனைத்து இடங் களிலும் இரத்தப் போக்கு ஏற்பட்டு 

ஒரு பேய் போல இருந்தார் என்கிறார் அவரின் தாயார். இதில் 80% ரத்தத்தை இழந்தார்

மோன்சிடிலீஸ்:

மோன்சிடிலீஸ் எரப்டேட் அல்சரால் பாதிக்கப் பட்டதாகவும், உடனடி யாக டிரான்ஸ் பியூசன் 

தேவைப் பட்டதாக வும் கூறுகிறார் அப்போது மருத்துவ மனையில் இருந்த மருத்துவர். 

"நான் அதிக அளவு இரத்தத்தை இழுந்து விட்டேன். எனவே அறுவை சிகிக்சைக் காக செலுத்தப் பட்ட 

அனஸ்தீசியா என் மூளையை சென்றடைய டிரான்ஸ் பியுசன் தேவைப் பட்டது" என்கிறார் மோன்சிடிலீஸ். 

சரியான நேரத்தில் ஆப்பிள் வாட்சின் எச்சரிக்கை வரவில்லை என்றால் இந்த இக்கட்டான 

சூழ்நிலை யில் அவர் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்கின்றனர் மருத்துவர்கள்.

18 வயதான ரெக்டென் வால்டு, ஆப்பிள் வாட்ச் அனுப்பிய இதய துடிப்பு எச்சரிக்கை யால் 

கிட்னி செயலிழப்பை தவிர்த்து தனது உயிரை காப்பாற்றிய கதையை கூறிய பின்னரே, இந்த கதை வெளிவந்தது. 

மேலும் இது ஆப்பிள் சி.ஈ.ஓ டிம் கூக்கின் கவனத்தை யும் ஈர்த்தது. ஏபிசி நியூஸ் ரிப்போர்டின் படி, 

ரெக்டென் வால்டு தனது இதய துடிப்பு 190BPM இருப்பதாக ஆப்பிள் வாட்ச்சில் பார்த்தார். 

ஆனால் தலைவலி மற்றம் சிறு சுவாச கோளாறு தவிர வேறு எந்த அறிகுறியும் இல்லை. 

எனினும் அவரின் தாயார், செவிலியர் என்பதால் கிளினிக்கிற்கு அழைத்து சென்றார். 

அங்கு ஆப்பிள் வாட்ச்சின் எச்சரிக்கை சரி என்பதை உறுதி படுத்தி கிட்னி செயலிழப்பை மருத்து வர்கள் தடுத்தனர்.

ஆப்பிள் வாட்ச் மட்டும் இல்லை யென்றால் சரியான நேரத்தில் இதை கண்டறிந்து 

சிகிச்சை அளித்திருக்க முடியாது என்கின்றனர் அவரின் குடும்பத்தினர். 

அதே நேரம் அவரின் தாயார் டிம் கூக்கிற்கு நன்றி தெரித்து கடிதம் அனுப்பி யுள்ளார். 

அதற்கு டிம் பதில் தெரிவிக்காத போதிலும், இந்த கதையை டிவிட்டரில் பகிர்ந்துள்ளார். 

இந்த ஆப்பிள் வாட்ச் சமீபத்தில் நடந்த கொலையின் முக்கிய குற்ற வாளியை கண்டறிந் ததுடன், 

911 கால் செய்து ஒரு பெண் மணியையும் அவரின் 9 மாத குழந்தையும் காப்பாற்றி யுள்ளது என்பதையும் நினைவு கூற வேண்டும்.
இரண்டு உயிர்களை காப்பாற்றிய ஆப்பிள் வாட்ச் ! இரண்டு உயிர்களை காப்பாற்றிய ஆப்பிள் வாட்ச் ! Reviewed by Fakrudeen Ali Ahamed on July 11, 2018 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 EThanthis All rights reserved
close