ஜியோ போனில் வாட்ஸ் ஆப் பயன்படுத்துவது எப்படி? தெரியுமா? - EThanthis

Recent Posts


ஜியோ போனில் வாட்ஸ் ஆப் பயன்படுத்துவது எப்படி? தெரியுமா?

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
ஜியோ போனில் எப்படி வாட்ஸ் ஆப்-ஐ பயன்படுத்துவது என்று இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளலாம்.
ஜியோ போன்
கடந்த ஜூலை மாதம் நடந்த ரிலையன்ஸ் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் ஜியோ போனிற்கு வாட்ஸ் ஆப், யூடியூப் மற்றும் 

மேம்படுத்தப் பட்ட பேஸ்புக் செயலிகள் ஆகஸ்ட் 15ம் தேதி முதல் வழங்கப்படும் என ஜியோ நிறுவனர் முகேஷ் அம்பானி தெரிவித் திருந்தார்.

அதனால் ஜியோ வாட்டிக்கை யாளர்கள் அதிக மகிழ்ச்சி யடைந்தனர். 

இந்நிலையில் ஜியோ போனில் வாட்ஸ் ஆப் எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

முதலில் ஜியோ ஸ்டோருக்கு சென்று வாட்ஸ் ஆப் -ஐ டவுன்லோட் செய்யவும். 

முழுமையாக டவுன்லோட் ஆனதும், வாட்ஸ் ஆப் அக்கவுண்டை பதிவு செய்ய வேண்டும். 

உங்களது புரோபைல் பெயர் மற்றும் ஜியோ செல்போன் நம்பர் மற்றும் இதர விவரங்களை பதிவு செய்ய வேண்டும் .

அதன்பிறகு உங்கள் ஜியோ நம்பருக்கு ஓடிபி ( otp) அனுப்பப்படும். அதை பதிவு செய்தால் உங்கள் வாட்ஸ் ஆப் கணக்கு செயல்பட ஆரம்பித்து விடும்.

ஆன்டிராய்டு போன் வாட்ஸ் ஆப்-ல் இருக்கும் எல்லா ஆப்ஷன்களும் இதில் இருக்கிறது. 

ஆனால் சில ஆப்ஷன்கள் மட்டும் இன்னும் அப்டேட் செய்யப்பட வில்லை .
ஜியோ போனில் வாட்ஸ் ஆப் பயன்படுத்துவது எப்படி? தெரியுமா? ஜியோ போனில் வாட்ஸ் ஆப் பயன்படுத்துவது எப்படி? தெரியுமா? Reviewed by Fakrudeen Ali Ahamed on September 18, 2018 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 EThanthis All rights reserved
close