தவறான வாட்ஸ்அப் அம்சம் - தகவல் ! - EThanthis

Recent Posts


தவறான வாட்ஸ்அப் அம்சம் - தகவல் !

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
வாட்ஸ்அப் க்ரூப் சாட்களின் போது ஒருவரு க்கு மட்டும் தனியே பதில் அனுப்பும் ரிப்ளை பிரேவேட்லி ( 'Reply Privately') எனும் 
வசதியை தவறுதலாக விண்டோஸ் பீட்டா செயலியில் வாட்ஸ்அப் வழங்கி யுள்ளது.

அதன்படி புதிய அம்சம் மூலம் விண்டோஸ் போன் பயனர்கள் க்ரூப் சாட் செய்யும் போது மற்றவர் களுக்கு தெரியாமல் 

ஒருவரு க்கு மட்டும் பதில் அனுப்ப முடியும். வாட்ஸ்அப் செயலியில் அதிகம் எதிர் பார்க்கப் படும் இந்த அம்சம் தற்சமயம் சோதனை செய்யப் படுகிறது.

விரைவில் மற்ற அம்சங் களுடன் ரிப்ளை பிரைவேட்லி அம்சமும் வழங்கப் படலாம் என கூறப் படுகிறது. 

பிரைவேட் ரிப்ளை அம்சம் வாட்ஸ்அப் பீட்டா செயலியில் காணப்பட்டு அதன்பின் நீக்கப்பட்டு விட்டது. 

டெவலப்பர்கள் சார்பில் இந்த அம்சம் தவறுத லாக இயக்கப் பட்டு விட்டதாக @WABetaInfo சார்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

விண்டோஸ் போன்களு க்கான வாட்ஸ்அப் பீட்டா 2.17.344 பதிப்பில் பிரைவேட் ரிப்ளை அம்சம் நீக்கப் பட்டுள்ளது. 

முந்தைய 2.17.342 பதிப்பில் இந்த அம்சம் தவறுத லாக சேர்க்கப் பட்டதாக @WABetaInfo ட்விட்டரில் குறிப்பிடப் பட்டிருந்தது. 

எனினும் இந்த அம்சம் 2.17.348 பதிப்பில் வழங்கப் பட்டது.

புதிய பிரைவேட் ரிப்ளை அம்சம் க்ரூப் சாட்களுக்கு மட்டும் சேர்க்கப் படும் என்றும் 

இந்த அம்சம் வாடிக்கை யாளர்களை குறிப்பிட்ட குறுந்தகவலை தொடர்ந்து கிளிக் செய்ததும் தோன்றும் சிறிய மெனு மூலம் இயக்க முடியும். 

முன்னதாக இதே அம்சத்தை வெற்றி கரமாக இயக்க முடியாத நிலையில் பல்வேறு பிழை களுடன் காணப் பட்டது.

மற்ற அம்சங்கள் 2.17.336 மற்றும் 2.17.346 விண்டோஸ் பீட்டா செயலியில் காணப் பட்டுள்ளது. 

இதில் அழைப்பு களை மேற்கொள்ள புதிய வடிவமைப்பு (UI) வழங்கப் பட்டுள்ளது. 

இது பார்க்க ஆண்ட்ராய்டு போன்றே காட்சிய ளிக்கிறது. வீடியோ கால் மேற்கொள்ள குவிக் ஸ்விட்ச் வழங்கப் பட்டுள்ள தால், 

வாய்ஸ் கால்களை ஒற்றை கிளிக் மூலம் வீடியோ காலாக மாற்ற முடியும். 
தவறான வாட்ஸ்அப் அம்சம் - தகவல் ! தவறான வாட்ஸ்அப் அம்சம் - தகவல் ! Reviewed by Fakrudeen Ali Ahamed on September 23, 2018 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 EThanthis All rights reserved
close