வாட்ஸ்ஆப் டூ-ஸ்டெப் வெரிஃபிக்கேஷன் 'எனேபிள்' செய்வது எப்படி? - EThanthis

Recent Posts


வாட்ஸ்ஆப் டூ-ஸ்டெப் வெரிஃபிக்கேஷன் 'எனேபிள்' செய்வது எப்படி?

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
வாட்ஸ்ஆப்பின் இந்த புதிய டூ-ஸ்டெப் வெரிஃபிக்கேஷன் ஒரு கட்டாய மற்ற அம்சமாகும். 
அதாவது நீங்கள் உங்களின் வாட்ஸ்ஆப் அக்கவுண்ட்டை அதிகமாக பாதுக்காக்க விரும்பினால் டூ-ஸ்டெப் வெரிஃபிக்கேஷன் நிகழ்த்திக் கொள்ளலாம்.

வாட்ஸ்ஆப் நிறுவனத்தின் படி, பயனர் ஒருமுறை இந்த டூ-ஸ்டெப் வெரிஃபிக்கேஷனை 'எனேபிள்' செய்து விட்டால் 

வாட்ஸ்ஆப்பில் எந்த வொரு தொலைபேசி எண்ணை சரிபார்க்க முயற்சித்தாலும் 

ஏற்கனவே பயனரால் உருவாக்கப் பட்ட ஆறு இலக்க கடவுக்குறியீடு தேவைப்படும்.

உங்கள் வாட்ஸ்ஆப்பில் நீங்கள் இந்த டூ-ஸ்டெப் வெரிஃபிக்கேஷனை அமைக்க விரும்பினால் பின்வரும் நடவடிக்கை களை நீங்கள் நிகழ்த்த வேண்டும்.

1. உங்களின் வாட்ஸ்ஆப் அக்கவுண்ட்டை திறக்கவும்.

2. செட்டிங்ஸ் செல்லவும்

3. அக்கவுண்ட் செல்லவும்

4. டூ-ஸ்டெப் வெரிஃபிக்கேஷனை அணுகவும்

5. 'எனேபிள்' ஆப்ஷனை டாப் செய்யவும்

6. அடுத்த ஸ்க்ரீனில் உங்களின் ஆறு இலக்க கடவுக்குறியீடை பதிவிடவும்

7. மீண்டும் ஒருமுறை ஆறு இலக்க கடவுக்குறியீடை பதிவிடவும்.

8. (விருப்ப மிருந்தால்) அடுத்த ஸ்க்ரீனில் உங்களின் இமெயில் விலாசத்தை பதிவிடவும்.

கடைசிப் படியில் உங்களுக்கு விருப்ப மென்றால் என்று குறிப்பிட்டுள்ள மின்னஞ்சல் முகவரியை 

உங்கள் வாட்ஸ்ஆப் அக்கவுண்ட் உடன் இணைக்க காரணம் என்ன வென்றால் 

ஒரு வேளை பயனர் அளித்த ஆறு இலக்க கடவுக் குறியீடை மறந்து விட்டால் அக்கவுண்ட் இணைக்கப் பட்டுள்ள 

மின்னஞ்சல் வழியாக ஒரு இணைப்பை அனுப்பி டூ-ஸ்டெப்னை 'டிஸ்சேபிள்' செய்துக் கொள்ள தான் என்பதை பயனர்கள் புரிந்துக் கொள்ள வேண்டும்.
வாட்ஸ்ஆப் டூ-ஸ்டெப் வெரிஃபிக்கேஷன் 'எனேபிள்' செய்வது எப்படி? வாட்ஸ்ஆப் டூ-ஸ்டெப் வெரிஃபிக்கேஷன் 'எனேபிள்' செய்வது எப்படி? Reviewed by Fakrudeen Ali Ahamed on September 04, 2018 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 EThanthis All rights reserved
close