ஓபன் சோர்ஸ் என்றால் என்ன? தெரியுமா? - EThanthis

Recent Posts


ஓபன் சோர்ஸ் என்றால் என்ன? தெரியுமா?

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
ஓபன் சோர்ஸ்…! நீங்கள் ஒரு கணினி ஆர்வ லராக இருப்பின் இந்த வார்த்தை உங்க ளுக்கு புதிதாக இருக்க வாய்ப்புகள் மிக மிக குறை வேயாகும்.சரி…! 


அப்படி என்றால் என்ன ? ம்ம்ம்…! ஓபன் சோர்ஸ் என்ற வார்த்தை க்கு பல அர்த்த ங்கள் உண்டு . 

ஆனால், நாம் காண இருப்பது சாப்ட்வேர் அல்லது மென்பொருள் சார்ந் ததையே ஆகும். பயப்பட வேண்டாம், 

நான் மிக எளிய பாணியில் உங்க ளுக்கு ஓபன் சோர்ஸ் பற்றி விளக்கு கிறேன். 

ஓபன் சோர்ஸ் என்பது ஒரு நிறுவ னத்தின் பெயரோ, அவை களின் தயாரிப்போ அல்ல…! 
ஓபன் சோர்ஸ் என்ற வார்த்தை பெரும்பாலும் கூட்டு மென்பொருள் உருவாக்க முறை யிலேயே பயன் படுத்தப்படு கிறது. 

இம்முறை யில், மென் பொருளின் மூலக் குறியீடுகள் (கட்ட மைப்புகள்) வெளிப் படையாக போடப் படுவதால், 

நம்மால் இதனை பார்க்க, மாற்ற, பகிர மற்றும் பயன் படுத்தவும் முடியும். 

தனியுரிம மென்பொருள் களில், மொத்த மென்பொரு ளும் ஒரே ஒரு நிறுவனத் தால் உருவாக்கப் பட்டவை யாகும்.

ஓபன் சோர்ஸ் மென்பொருள் பெரும் பாலும் தன்னார்வ சமூகங்கள் மற்றும் உலகம் முழுவதும் உள்ள 

புரோகிராமர் களால் பங்களிக் கப்பட்ட வையே ஆகும். 

பிரபலமான ஓபன் சோர்ஸ் உபாயங்கள் : 

மொசில்லா பையர்பாக்ஸ் உலவி (Browser) , பெடோரா போன்றவை குறிப்பிடத் தக்கது. 

இது எங்கு தொடங்கியது ? ஓபன் சோர்ஸ் தொடர் புடைய விஷ யங்கள் 40 ஆண்டு களுக்கு முன்பே தொடங்கப் பட்டவை. 

ஐபிஎம் நிறுவனம் தான் முதல் தலைமுறை கணினி களை செய்து, அதனை இயக்க மென்பொருள் தொகுப்பை உருவாக் கியது.

இவை அணைத்தும் இலவசம் மட்டுமின்றி பயனர் களின் மத்தியில் மறு விநியோகம் செய்யத் தக்கவை.

அதன் மூல குறியீடு களையும் நம் தேவைக்கு ஏற்றார் போல் மாற்றி அமைத்துக் கொள்ள லாம். 

ஆனால், 1970 ஆம் ஆண்டு ஐபிம் தனது மென்பொருள் படைப்பு களை தனியுரிமை மென் பொருளாக மாற்றிய தால், 

மக்களால் முன்பே பதிவு செய்யப் பட்ட மென்பொருள் களை மாற்றி அமைக்க இயல வில்லை. 

அச்சமயத் திலேயே உண்மை யான இலவச மென்பொருள் இயக்கம் தொடங் கியது. 

1980 ஆம் ஆண்டு, ரிச்சர்ட் ஸ்டால்மன் என்பவரே ஓபன் சோர்ஸ் மென்பொருள் பயன் பாட்டினை, 

தனது GNU திட்டத்தின் மூலம் பிரபல மாக்கினர். அதன் குறிக்கோள் கணினியை இயக்க பயன் படும் மூலப் பொருளான இயக்கு தளத்தை யும், 

கணினி சார்ந்த மென்பொருள் தொகுப்பு களையும் இலவச மாக உபயோ கிக்கவும், மாற்று வதற்கும் கிடைக்க செய்வதே ஆகும்.” 

மென் பொருள் தொகுப்பு களை அனை வராலும் இலவச மாக மாற்றம் செய்ய கிடைப்பது 

ஒரு அடிப்படை உரிமை யாகும்” என்பது அவரின் கருத்து. ஓபன் சோர்ஸ் நமக்குத் தேவையா ? 

இன்று நாம் உபயோகி க்கும் பல மென் பொருட்கள், உடைமை யாளர்களின் படைப் பாகும். 

எனவே , இந்த மென் பொருள் களை நாம் பணம் செலுத்தி பெற வேண்டி யுள்ளது. 

பலர் தங்கள் தேவைக் கேற்ற மென்பொருள் சாதனங் களை பணப் பற்றாக் குறையி னால் வாங்க முடிய வில்லை. 

ஏழை நாடு களில் உள்ள அறிவிய லாளர்க ளும் மாணவர் களுமே மிகவும் பாதிக்கப் படுகின் றனர். 

இக்குறை பாடு அந்த நாடு களின் வளர்ச் சியையே பாதிக்கும். 
இதனால், அறிவியல் சமூகம் அதனுடைய ஆற்றலை உணராம லேயே போய் விடு கின்றது. 

ஆனால், ஓபன் சோர்ஸ் மென் பொருட்கள் , எப்போதும் மக்களு க்கே முன்னு ரிமை அளிக் கிறது. 

இதன் உருவாக் கத்தில் பல்வேறு தரப்பி னரின் பங்க ளிப்பும் இருப்ப தனால் இம்முறை யில் தயாரிக்கப் படும் மென் பொருட்க ளில் புதுமை காணப் படும். 

முக்கிய மாக ஓபன் சோர்ஸ் மென் பொருட்கள் முற்றிலும் இலவசம் ! 

ஆகவே , ஓபன் சோர்ஸ் திட்ட மானது மக்கள் , சமுதாயம் மற்றும் ஒவ்வொரு குடி மகனின் 

முன்னேற்ற த்திற்கும் வழி வகுக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை…!

இதனா லேயே கணினி மற்றும் இணை யத்தின் ஆற்றல் முழுமை யாக கிடைப் பதை உணர முடியும்.
ஓபன் சோர்ஸ் என்றால் என்ன? தெரியுமா? ஓபன் சோர்ஸ் என்றால் என்ன? தெரியுமா? Reviewed by Fakrudeen Ali Ahamed on September 23, 2018 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 EThanthis All rights reserved
close