அவசர காலத்தில் நம் உயிரைக் காப்பாற்றும் ஸ்மார்ட்போன்... எப்படி தெரியுமா? - EThanthis

Recent Posts


அவசர காலத்தில் நம் உயிரைக் காப்பாற்றும் ஸ்மார்ட்போன்... எப்படி தெரியுமா?

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
நாம் எங்கு சென்றாலும், நம்முடன் ஒரு பொருள் என்றால் அது ஸ்மார்ட்போன் தான். இன்றைய காலகட்டத்தில் கையில் ஸ்மார்ட்போன் இல்லாதவர்களே இருக்க மாட்டார்கள். 
 
அவசர காலத்தில் நம் உயிரைக் காப்பாற்றும் ஸ்மார்ட்போன்... எப்படி தெரியுமா?

ஆனால், அந்த ஸ்மார்ட்போன் நம்முடைய அவசர காலத்தில் உயரைக் காப்பாற்றுவதற்கு பயன்படுத்த முடியும் என்பதை எத்தனை பேர் தெரிந்து வைத்திருக்கிறோம். 

மனப் பதற்றம் (ANXIETY) என்பது என்ன? அதன் அறிகுறிகள் என்ன?

ஸ்மார்ட் போன் அனுகூலங்களை மட்டுமே பயன்படுத்திக் கொள்ள துடிப்பாக இருக்கும் பலரும், அது தரும் பாதுகாப்பு அம்சங்களை கட்டமைத்துக் கொள்ள தவறுகிறார்கள்.
 
ஒரு ஸ்மார்ட் போனை வாங்கிய கையோடு அதன் செட்டிங்ஸ் வழங்கும் அனைத்து பாதுகாப்பு அம்சங்களையும் ஆராய்ந்து பாதுகாப்பை இறுக்கிக் கொள்ளுங்கள். 
 
செட்டிங்ஸில் செய்யும் சிறிய மாற்றம், ஆபத்து காலத்தில் இருக்கும் நம் உயிரைக் காப்பாற்ற உதவும் என்பதால், அது என்ன என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.
 
அதாவது, போனில் இருக்கும் தொடர்புகளுக்கு (Contacts) செல்லாமலேயே லாக்ஸ்கீரின் மூலம் நண்பர்கள் மற்றும் உறவினர்களை தொடர்பு கொள்ளலாம். 
அவசர காலத்தில் லாக்ஸ்கிரீனை நீக்குவதற்கு கூட டைம் இருக்காது. அந்த சமயத்தில் லாக்ஸ்கீரின் வழியாகவே நீங்கள் எமர்ஜென்சி கால் செய்யலாம். 

மூன்று கருந்துளைகள் ஒன்றிணைந்த அரிய நிகழ்வு... விஞ்ஞானிகள் சாதனை !

நீங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்ஃபோனைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், அவசரகால தொடர்புகளைச் சேமித்து வைத்திருக்க வேண்டும்.
 
உங்கள் போனில் My Info அல்லது My Contacts சென்று எமர்ஜென்சி தொடர்புகள் (Emergency Contacts) என்ற ஆப்சனை தேர்ந்தெடுக்க வேண்டும். 
 
அதில் உங்களுக்கு நெருக்கமான குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களின் எண்களை சேர்த்து வைக்க வேண்டும். 
 
அந்த தொடர்புகளுக்கு நீங்கள் லாக் ஸ்கீரினில் இருந்தவாறே அழைப்புகளை மேற்கொள்ள முடியும். 
ஐபோன் வாடிக்கையாளர்களும் இதே போல் எமர்ஜென்சி தொடர்புகளை சேமித்து வைக்கும் செட்டிங்ஸ் உள்ளது. 
7 ஆண்டுகளுக்கு முன் சஸ்பெண்ட்... இன்று மாபெரும் வெற்றி கொடுத்த ராபின்சன் கதை !
அதில் தொடர்புகளை சேமித்து வைத்து, அவசர கால உதவிக்கு அழைக்க முடியும். சாதாரணமாக பார்க்கும் போது இந்த தகவல் எளிமையாக தெரியலாம். 
 
அவசர காலத்தில் இருப்பவர்களுக்கே அதன் அருமை தெரியும்.
அவசர காலத்தில் நம் உயிரைக் காப்பாற்றும் ஸ்மார்ட்போன்... எப்படி தெரியுமா? அவசர காலத்தில் நம் உயிரைக் காப்பாற்றும் ஸ்மார்ட்போன்... எப்படி தெரியுமா? Reviewed by Fakrudeen Ali Ahamed on February 26, 2022 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 EThanthis All rights reserved
close