வட்ஸ் அப்பிலும் யூடியூப் வீடியோ ! - EThanthis

Recent Posts


வட்ஸ் அப்பிலும் யூடியூப் வீடியோ !

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
வட்ஸ்அப், மொபைல் அப் உலகில் அதிகள பயன் படுத்தும் மெசென்ஜர் அப்ளி கேஷனாக வலம் வருகிறது. 
ஹைக், டெலிகிராம் உள்ளிட்ட அப்ளிகேஷன் களை பின்னு க்குத் தள்ளி தொடர்ந்தும் 

முதல் இடத்தை தக்க வைத்துக் கொள்ள பல புதிய அப்டேட்களை அறிவித்து வருகிறது.

வீடியோ அழைப்பு வசதிகள், குரல்வழி அழைப்பு வசதிகள், குழுக் களுக்கு இடை யிலான சாட்டிங் வசதி, 

கோப்புக் களை பரிமாறும் வசதி, ஸ்டேடஸ் மாற்றி கொள்ளும் வசதி போன்ற பல வற்றை வட்ஸ்அப் வழங்கி வரு கின்றது.

இந்நிலை யில் தற்போது மற்று மொரு வசதி யினை WABetaInfo தொழில் நுட்பத்தின் மூலம் வட்ஸ்அப் வழியாக பயனர் களுக்கு வழங்க முடிவு செய்து ள்ளது.

அதாவது தற்போது வட்ஸ்அப்பில் அனுப்ப ப்படும் யூடியூப் லின்க்கை ஓபன் செய் தால் 

அந்த லின்க் யூடியூப் பக்கத் துக்கு சென்று பின்னர் வீடியோவை பார்க்க முடியும்.

ஆனால் புதிய வசதியில் யூடியூப் வீடியோ க்களை வட்ஸ்அப் ஆப்பிளிக் கேஷனுக்கு உள்ளேயே பார்த்து மகிழ முடியும்.

யூடியூப் பக்கத் துக்கு செல்லாது சாதாரண வீடியோ பதிவுகளை பார்ப்பது போன்று பார்க்க லாம், 

இது விரைவில் பயனர் களின் பயன் பாட்டுக்கு வரும் என வட்ஸ்அப் நிறுவனம் தெரிவித் துள்ளது.

யூடியூப் பக்கத் திற்கு செல் லாமல் வட்ஸ்அப்பிலே வீடியோ பார்ப்ப தால் வீடியோவை பார்த்து கொண்டே சாட்டிங் செய்ய இயலும், 

இளை ஞர்கள் மத்தியில் இந்த புதிய அம்சம் நல்ல வரவேற்பைப் பெறும் எனவும் எதிர் பார்க்கப் படுகிறது.

பீட்டா சோதனை செயல் பாட்டில் உள்ள இந்த புதிய அம்ச மானது அண்ட்ரொய்ட் போனில் மட்டு மில்லாது 

ஐபோன் 6, ஐபோன் 6 பிளஸ், ஐபோன் 6S, ஐபோன் 6S பிளஸ், ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ் ஆகிய வற்றிலும் அப்டேட் ஆகும் என எதிர் பார்க்கப் படுகிறது. 
வட்ஸ் அப்பிலும் யூடியூப் வீடியோ ! வட்ஸ் அப்பிலும் யூடியூப் வீடியோ ! Reviewed by Fakrudeen Ali Ahamed on September 23, 2018 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 EThanthis All rights reserved
close