நாங்கள் வேவு பார்ப்பதில்லை - உறுதியளிக்கும் இன்ஸ்டாகிராம் !
புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..
லைக் பண்ணுங்க... "
இன்ஸ்டாகிராம் பயனாளர்களின் மெசேஞ் மற்றும் பதிவுகளை நாங்கள் ஒருநாளும் வேவு பார்க்க வில்லை என இன்ஸ்டாகிராம் நிறுவனத்தின் சிஇஓ ஆடம் மொசெரி தெரிவித்துள்ளார்.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சம்பந்தமே இல்லாத தேடப்படாத விளம்பரங்கள் வருவது ஏன்? என தனியார் டிவி நிகழ்ச்சி ஒன்றில் இன்ஸ்டாகிராம் சி.இ.ஓ ஆடம் மொசெரியிடம் கேட்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த ஆடம், “இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எதேர்ச்சையாகத் தான் விளம்பரங்கள் வருகின்றன. நீங்கள் தேடாத, ஆனால் நீங்கள் சமீபத்தில் பேசிய ஒரு விஷயம் குறித்த விளம்பரங்கள் வருவது எதேர்ச்சை யானது.
ஃபேஸ்புக் நிறுவனமான இன்ஸ்டா ஒருநாளும் தனது பயனாளர்களின் மெசேஞ்கள் அல்லது இன்ஸ்டா பதிவுகளை வேவு பார்த்ததில்லை. வேவு பார்க்கப்போவதும் இல்லை.
’deepfakes’ என்றதொரு திட்ட கொள்கையின் தொடர்பாக இன்ஸ்டாகிராம் நிறுவனம் பணியாற்றி வருகிறது. விரைவில் இதுகுறித்த முழு விவரங்கள் உடனான அறிவிப்பு வெளியாகும்” என்றார்.